For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருப்பா அது? 5 மேட்ச்.. 681 ரன், 2 டபுள் செஞ்சுரி, சராசரி 277! மிரள வைத்த ஜாம்பவான் வீரரின் வாரிசு!

பெங்களூரு : ராகுல் டிராவிட்டின் மகன் சமித் பள்ளிகள் அளவிலான கிரிக்கெட் தொடரில் ரன் மழை பொழிந்து இப்போதே மிரள வைத்துள்ளார்.

Recommended Video

Rahul Dravid son hit second double century | தந்தையை போல அசத்தும் டிராவிட்டின் மகனும்

பெங்களூருவில் நடைபெற்று வரும் பள்ளிகள் அளவிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், சமித் டிராவிட் 5 போட்டிகளில் 681 ரன்கள் குவித்துள்ளார்.

போட்டிக்கு போட்டி அவர் ரன் குவித்து வருவதால் அவரைப் பற்றி இப்போதே பெங்களூரு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச் சுவர் என அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் இன்று வரை சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் உச்சத்தில் இருக்கிறார். டெஸ்ட் மட்டுமின்றி, ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார் டிராவிட். அந்த ஜாம்பவானின் வாரிசு தான் சமித் டிராவிட்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சதம் அடித்து அசத்தி இருந்தார் சமித். அதைத் தொடர்ந்து பள்ளிகள் அளவிலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் கர்நாடகா மாநில கிரிக்கெட் அமைப்பு நடத்திய போட்டி ஒன்றில் இரட்டை சதம் அடித்து ரன் வேட்டையை துவங்கினார்.

பள்ளி கிரிக்கெட் தொடர்

பள்ளி கிரிக்கெட் தொடர்

பிடிஆர் ஷீல்டு அண்டர் 14 என்ற பள்ளிகள் அளவிலான கிரிக்கெட் தொடரில் மால்யா அதிதி சர்வதேச பள்ளி சார்பில் ஆடி வருகிறார் சமித் டிராவிட். இந்த தொடரில் ஸ்ரீ குமரன் பள்ளி அணிக்கு எதிராக 146 பந்தில் இரட்டை சதம் அடித்தார். அதில் 33 ஃபோர் அடங்கும்.

166 ரன்கள்

166 ரன்கள்

அடுத்து ஒரு போட்டியில் 131 பந்துகளில் 166 ரன்கள் குவித்தார். அதே போட்டியில் 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி ஆல் - ரவுண்டராகவும் ஜொலித்தார் சமித். மற்றொரு போட்டியில் அரைசதம் அடித்தார்.

இரண்டாவது இரட்டை சதம்

இரண்டாவது இரட்டை சதம்

இந்த தொடரில் அவர் தன் இரண்டாவது இரட்டை சதத்தையும் அடித்து மிரள வைத்தார். பிஜிஎஸ் நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு எதிரான போட்டியில் 144 பந்துகளில் 211 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்க்ஸில் 26 ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்த தொடரில் சமித் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அவர் குவித்த ரன்கள் மற்றும் சராசரி ஆகியவையும் அதிரடியாக உள்ளது, அடுத்து நேரடியாக கர்நாடகா மாநில அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டாலும் ஆச்சரியமில்லை என கூறும் அளவுக்கு ரன் மழை பொழிந்துள்ளார் சமித்.

681 ரன்கள்

681 ரன்கள்

5 போட்டிகளில் ஒரு அரைசதம், ஒரு சதம், இரண்டு இரட்டை சதம் அடித்து இருக்கிறார். மொத்தமாக 681 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 277 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 130க்கும் மேல் இருக்கிறது. 101 ஃபோர் மற்றும் 1 சிக்ஸ் அடித்துள்ளார்.

ஆல் - ரவுண்டர்

ஆல் - ரவுண்டர்

பேட்டிங்கில் கலக்கும் அவர் பந்துவீச்சிலும் அணிக்கு கை கொடுத்து இருக்கிறார். பகுதி நேர பந்துவீச்சாளராக இந்தப் தொடரில் 5 போட்டிகளில் 7 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஒரு போட்டியில் மட்டும் 4 விக்கெட்கள் வீழ்த்தி தன் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.

இந்திய அணியில் இடம் பெறுவார்

இந்திய அணியில் இடம் பெறுவார்

தற்போது 14 வயதே ஆகும் சமித் டிராவிட் விரைவில் மாநில அணியில் இடம் பெற்று, இந்திய அணியில் இடம் பெறுவார் என இப்போதே பெங்களூரு கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தந்தை எட்டு அடி பாய்ந்தால், மகன் எண்பது அடி பாய்கிறார்!

Story first published: Thursday, February 27, 2020, 12:42 [IST]
Other articles published on Feb 27, 2020
English summary
Dravid’s son Samit scored 681 runs from 5 matches including 2 double centuries
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X