For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாராவிற்கு அவுட் கொடுக்கப்பட்ட விதம் இந்திய ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பரபரப்பின் உச்சத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த போட்டியின் கடைசி 14 ஓவர்கள் வீச வேண்டிய நிலையில் இந்திய அணி 63 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.

1000 ரன்களை விரைவாக அடிச்ச விக்கெட் கீப்பர்... டெஸ்ட் போட்டிகளில் பந்த் புதிய சாதனை 1000 ரன்களை விரைவாக அடிச்ச விக்கெட் கீப்பர்... டெஸ்ட் போட்டிகளில் பந்த் புதிய சாதனை

ஆஸ்திரேலிய அணி இன்னும் 6 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்பதால் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. தற்போது வரை இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 265 ரன்கள் எடுத்துள்ளது.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

இந்திய அணி இன்று காலையிலேயே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெற்றியை நோக்கி ஆடியது.ஓப்பனிங் வீரர் சுப்மான் கில் எடுத்த 91 ரன்கள், புஜாரா உடலில் காயத்தோடு எடுத்த அரைசதம், பண்ட் உறுதியாக நின்று அரைசதம் எடுத்த பின்பும் அதிரடி காட்டியது இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியது.

புஜாரா

புஜாரா

அதிலும் விரலில் காயத்தோடு புஜாரா ஆடிய விதம் பெரிய அளவில் வைரலானது. இந்திய அணி 39 ரன்கள் எடுத்திருந்த போதே புஜாரா அவுட்டாக வேண்டியது. அப்போது நாதன் லைன் பந்தில் புஜாரா எல்பிடபில்யூ ஆகியிருக்க வேண்டியது. ஆனால் டிஆர்எஸ்சில் அம்பயர்ஸ் கால் கொடுக்கப்பட்டதால் புஜாராவிற்கு விக்கெட் கொடுக்கப்படவில்லை.

அருகில் சென்றது

அருகில் சென்றது

பந்து ஸ்டம்பை தொட்டது. பந்தின் முக்கால்வாசி பகுதி ஸ்டம்பில் மோதியது. ஆனாலும் கூட அம்பயர்ஸ் கால் கொடுக்கப்பட்டதால் புஜாராவிற்கு விக்கெட் கொடுக்கப்படவில்லை. இது பெரிய சர்ச்சையானது. ஆனால் அதன்பின் புஜாரா 56 ரன்கள் இருந்த போது அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

நடுவர்

நடுவர்

பந்து ஸ்டம்பை லேசாக உரசி சென்றது. இதற்கு புஜாரா டிஆர்எஸ் கேட்டார். ஆனால் பந்து முழுமையாக ஸ்டம்பை மோதவில்லை என்றாலும் தேவையின்றி அவருக்கு அம்பயர்ஸ் கால் கொடுக்கப்பட்டு விக்கெட் கொடுக்கப்பட்டது. இந்த முடிவும் தவறானது ஆகும் . இப்படி இரண்டு முறை ஒரே நாளில் டிஆர்எஸ்ஸில் அம்பயர்ஸ் கால் காரணமாக முடிவு மாறியது.

முடிவு

முடிவு

அம்பயர்ஸ் கால் காரணமாக இன்று மொத்தமாக ஆட்டத்தின் போக்கே மாறியது. புஜாராவிற்கு மட்டும் அம்பயர்ஸ் கால் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று ஆட்டம் வேறு மாதிரி சென்று இருக்கும். இதனால் டிஆர்சில் அம்பயர்ஸ் கால் அம்சம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

Story first published: Tuesday, January 19, 2021, 13:02 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
DRS umpire call for Pujara creates issues twice today in the final match against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X