படுகாயம்.. "சில நினைவுகளை" இழந்த டு பிளசிஸ்.. உருக்கமான ட்வீட் - இனி விளையாடுவாரா?

அமீரகம்: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் காயமடைந்த டு பிளசிஸ், தனது சில நினைவுகளை இழந்திருக்கிறார்.

கொரோனா தொற்று பரவலால் பாதியில், நிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர், மீண்டும் அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 ஐபிஎல்-ல மட்டும் மாஸ் இல்ல.. எங்கேயும் அடிப்பேன்.. கெத்து காட்டிய ஜடேஜா - ரசித்த கோலி ஐபிஎல்-ல மட்டும் மாஸ் இல்ல.. எங்கேயும் அடிப்பேன்.. கெத்து காட்டிய ஜடேஜா - ரசித்த கோலி

இந்த தொடரின் 19வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் மோதின. இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அந்த சம்பவம் ஏற்பட்டது.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ்

குவெட்டா கிளாடியேட்டர்ஸ்

இந்த போட்டியில் பெஷாவர் சால்மி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் சால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் 9 விக்கெட்களை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து படு தோல்வியடைந்தது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

முதல் இன்னிங்சின் 7 வது ஓவரின் போது, பெஷாவர் அணி பேட்ஸ்மேன் பவுண்டரி லைனுக்கு பந்தை விரட்டினார். அப்போது பீல்டிங்கில் இருந்த கிளாடியேட்டர்ஸ் அணி வீரர்கள் டூப்ளசிஸ் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோர் பந்தை தடுக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஹஸ்னைன் காலில், டூப்ளசிஸ் தலை வேகமாக மோதியது.

சிகிச்சை முடிந்து

சிகிச்சை முடிந்து

இதனால், படுகாயமடைந்த டூப்ளசிஸ், வெளியில் சில நேரம் உட்காரவைக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், டு பிளசிஸ் தற்போது சிகிச்சை முடிந்து ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளார்.

இனி விளையாடுவாரா?

இனி விளையாடுவாரா?

இதுகுறித்து அவர் நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், ""எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. நான் மீண்டும் குணமடைந்து வருகிறேன். சில நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் களத்தில் இறங்குவேன் என்று நம்புகிறேன்" என்று டு பிளெசிஸ் ட்வீட் செய்துள்ளார். தொடர்ந்து, அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவாரா என்பது குறித்து இனிமேல் தான் தெரியவரும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Du Plessis "Recovering" With "Some Memory Loss" - டு பிளசிஸ்
Story first published: Monday, June 14, 2021, 11:06 [IST]
Other articles published on Jun 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X