For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது தான் பிரச்னையே.. ! அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..! மவுனம் கலைத்த பிசிசிஐ

மும்பை: உலக கோப்பை தொடரில் போதிய வாய்ப்பிருந்தும் அம்பத்தி ராயுடுவை ஏன் அணியில் எடுக்கவில்லை என்பது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத்தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 2 டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 வகை போட்டிகளுக்கும் கோலி தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

டெஸ்ட் அணியில், கோலி, ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல் ராகுல், புஜாரா, விகாரி, ரோகித் சர்மா, ரிஷப் பன்ட், விருத்திமான் சாஹா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். மேலும், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் விளையாடுகின்றனர்.

ஒருநாள் தொடர் அணி

ஒருநாள் தொடர் அணி

ஒருநாள் அணியில் பல முக்கிய மாற்றங்கள் உள்ளன. கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, ரிஷப் பன்ட், சாஹல் ஆகியோர் உள்ளனர். கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர்.

டி 20 அணி

டி 20 அணி

டி.20 அணியில், கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, ரிஷப் பன்ட் ஆகியோர் இருக்கின்றனர். அவர்களுடன் கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தேர்வு பெற்றிருக்கின்றனர்.

தோனி விளையாடவில்லை

தோனி விளையாடவில்லை

அணி தேர்வுக்கு பின்னர் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறி இருப்பதாவது: மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் தோனி பங்கேற்கவில்லை. இருப்பினும் அடுத்து 2023ம் ஆண்டு உலக கோப்பை, எதிர்கால தொடர்கள் ஆகியவற்றை முன் வைத்து, சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எப்படி உள்ளது?

எப்படி உள்ளது?

எனவே ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. களத்தில் அவர்களது செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து கண்காணிக்க உள்ளோம்.

ரசித்த விமர்சனம்

ரசித்த விமர்சனம்

அம்பத்தி ராயுடு, டி20 ஆட்டத்தின் அடிப்படையிலேயே ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அதே நேரத்தில் வேறு பல திட்டங்களையும் நாங்கள் வைத்திருந்தோம். அவரது 3 டி விமர்சனத்தை நாங்கள் வெகுவாக ரசித்தோம்.

ஏற்புடையதல்ல

ஏற்புடையதல்ல

அவர் உடல்தகுதி சோதனையில் தோல்வியுற்றபோது கூட அதற்கான பயிற்சியிலும் ஈடுபடுத்தினோம். அணி தேர்வு தொடர்பான சில திட்டங்களின் அடிப்படையிலேயே அம்பத்தி ராயுடு உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் நாங்கள் ஒரு சார்பாக செயல்படுவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.

Story first published: Sunday, July 21, 2019, 16:52 [IST]
Other articles published on Jul 21, 2019
English summary
Due to future plans, we have not selected ambati rayudu in world cup squad says bcci.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X