For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஓய்வை அறிவித்தார் டுவைன் பிராவோ..அடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா

சென்னை: ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்றில் மிகவும் முக்கியமான வீரர்கள் பட்டியல் என எடுத்துக்கொண்டால் டுவைன் பிராவோவும் கண்டிப்பாக இடம்பெறுவார். அந்த அணியின் முதுகெலும்பாக செயல்பட்டிருக்கிறார்.

39 வயதாகும் டுவைன் பிராவோ, அடுத்த சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார். ஆனால் தற்போது திடீரென அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

எங்களுக்கு நாடு தான் முக்கியம்.. உங்கள் பணம் தேவையில்லை.. ஐபிஎல் ஏலத்திற்கு வராத ஆஸி. வீரர்கள்! எங்களுக்கு நாடு தான் முக்கியம்.. உங்கள் பணம் தேவையில்லை.. ஐபிஎல் ஏலத்திற்கு வராத ஆஸி. வீரர்கள்!

பயிற்சியாளர் அவதாரம்

பயிற்சியாளர் அவதாரம்

இந்நிலையில் ஓய்வு அறிவிப்புடன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளார். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு இருந்த லக்‌ஷ்மிபதி பாலாஜி ஓராண்டிற்கு ஓய்வு எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிராவோவின் பயிற்சியில் தோனி தலைமையில் சிஎஸ்கேவின் செயல்பாட்டை பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

நெகிழ்ச்சி பேச்சு

நெகிழ்ச்சி பேச்சு

இதுகுறித்து பேசியுள்ள பிராவோ, இந்த புதிய பயணத்தை தொடங்க நான் ஆவலுடன் காத்துள்ளேன். பயிற்சியாளர் என்பதற்காக என்னை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஐபிஎல்-ல் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்று ஆவேன் என நினைக்கவே இல்லை. ஆனால் அதை விட ஐபிஎல்-ல் விளையாடியது தான் எனக்கு மகிழ்ச்சி. பவுலர்களுடன் நான் நிறைய பணியாற்றியுள்ளேன் எனவே புதிய திட்டங்களுடன் மீண்டும் வருவேன் என பிராவோ கூறியுள்ளார்.

பிராவோவின் ரெக்கார்ட்

பிராவோவின் ரெக்கார்ட்

2011ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிராவோ, இதுவரை அந்த அணிக்காக 144 போட்டிகளில் விளையாடி 168 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். மேலும் பேட்டிங்கில் 1,556 ரன்களை குவித்துள்ளார். ஒட்டுமொத்த ஐபிஎல் ரெக்கார்ட் என பார்த்தால் பிராவோ தான் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்கள் எடுத்த வீரராகும்.161 போட்டிகளீல் 183 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

தோனியின் முடிவு

தோனியின் முடிவு

இதே போல தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கிய வீரரான கெயீரன் பொல்லார்ட்-ம் தனது ஓய்வு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இதுமட்டுமல்லாமல் அவர் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே தோனியும் இந்தாண்டுடன் ஓய்வை அறிவித்தால் சிஎஸ்கேவின் பயிற்சியாளராக வருவாரா? என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 2, 2022, 15:36 [IST]
Other articles published on Dec 2, 2022
English summary
Star All Rounder Dwayne Bravo announced his IPL Retirement Joins as CSK Team Bowling Coach
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X