ஏய் டோணி மச்சான்.. கலகலக்க வைத்த பிராவோ!

By Sutha

போர்ட் ஆப் ஸ்பெயின்: டோணியைப் பார்த்து டிவைன் பிராவோ செம குஷியாகி விட்டார் போல. இருக்காதா பின்னே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணி தலைமையில் விளையாடியவர் ஆயிற்றே.

பிராவோ கிட்டத்தட்ட டோணியின் முரட்டு பக்தர். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடும் வரை ரசிகர்களும் கூட பிராவோவை மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரராகவே பார்த்து வந்தனர். ஆனால் டோணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக கை கோர்த்த பிறகு பிராவோவும் சென்னைக்காரராகி விட்டார்.

வேட்டி கட்டுவது, குத்துப் பாட்டுக்கு நச்சுன்னு ஆட்டம் ஆடுவது என கிடைக்கும் வாய்ப்புகளில் புகுந்து விளையாடுகிறார் பிராவோ. கூடவே சில பல தமிழ் வார்த்தைகளையும் கூட கற்று வைத்துள்ளார் பிராவோ.

வெஸ்ட் இண்டீஸில் இந்தியா

வெஸ்ட் இண்டீஸில் இந்தியா

தற்போது இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளில் முகாமிட்டுள்ளது. அங்கு போட்டித் தொடரில் பங்கேற்கின்றனர். நேற்று முதல் போட்டி நடந்தது. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது.

பிராவோ குஷி

பிராவோ குஷி

போட்டிக்கு முன்பு டோணி, ஹர்டிக் பாண்ட்யா உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிலரை, டிவைன் பிராவோ, டேரன் பிராவோ ஆகியோர் சந்தித்தனர். தனது "கேப்டன்" டோணியைச் சந்தித்ததும் டிவைன் பிராவோ குஷியாகி விட்டார்.

டோணி மச்சான்

இதை ஒரு டிவீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பிராவோ. இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், என்னோட மச்சான் டோணியைச் சந்தித்தது மகிழ்ச்சி. இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

வாவ்!

வாவ்!

இதைப் பார்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் குஷியாகி விட்டனர். பிறகென்ன இப்போது பிராவோ டிவிட்டர் பக்கம் கலகலப்பாக காணப்படுகிறது பாஸ்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
WIndies player and CSK strong man Dwayne Bravo has called MS Dhoni as "Machan" in his tweet, after he met the legendary Indian former Captain.
Story first published: Saturday, June 24, 2017, 11:23 [IST]
Other articles published on Jun 24, 2017
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X