'ஒரே' சொல்.. 'ஒரே' கையழுத்து.. மாறிய பொல்லார்ட் வாழ்க்கை - "சபாஷ்" பிராவோ

சென்னை: ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் 'இது எங்கள் சொத்து' மோட் வீரர் பொல்லார்ட். அவர் அந்த அணியின் இணைந்த சுவாரஸ்ய கதையை வெளிப்படுத்தி இருக்கிறார் டுவைன் பிராவோ.

ஐபிஎல்-ன் முதல் இரண்டு சீசனில், அதாவது 2008, 2009ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார்.

45 நிமிடம்.. அப்படியே கதிகலங்கிய சிஎஸ்கே.. தோனி தந்த அட்வைஸ்.. வெற்றிக்கு பின் இருக்கும் 5 காரணங்கள்

அந்த சீசன்களில், மும்பை மரண அடி வாங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால், மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் எல்லாம் அப்போது காமெடி அணிகள் எனலாம். யார் வேண்டுமானாலும் போட்டுத் துவைக்கலாம்.

 பிராவோவிடம் ஆலோசனை

பிராவோவிடம் ஆலோசனை

அதன்பிறகு பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்லும் நிலை ஏற்பட, மும்பை அணி பிராவோவுக்கு இணையான மாற்று வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டது. அப்போது மும்பை நிர்வாகம் பிராவோவிடம் ஆலோசனை கேட்டபோது, 19 வயதே ஆன இளம் பாலகன் கெய்ரன் பொல்லார்டின் பெயரை பிராவோ தான் பரிந்துரை செய்திருக்கிறார். பொல்லார்ட் அந்த நேரத்தில் உள்ளூர் கிரிக்கெட் பல பந்துகளை காணாமல் போகச் செய்து கொண்டிருந்தவர்.

 நான் பொல்லார்டை சொன்னேன்

நான் பொல்லார்டை சொன்னேன்

இதுகுறித்து மனம் திறந்துள்ள பிராவோ, "மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து நான் விலகிய பிறகு, எனக்கு மாற்றான மேற்கிந்தியத் தீவுகள் வீரர் வேண்டும் என மும்பை அணி நிர்வாகம் என்னிடம் கேட்டுக் கொண்டது. நான் கெய்ரன் பொல்லார்டின் பெயரைப் பரிந்துரைத்தேன். உடனே அவர்கள் பொல்லார்டை தொடர்பு கொண்டார்கள். ஆனால், அப்போது அவர் ஒரு கிளபிற்காக விளையாடிக் கொண்டிருந்தார். ஆகையால், எனக்கு மாற்றாக டுவைன் ஸ்மித் மும்பை அணியில் விளையாடினார்.

 கிளம்பி வந்த ராபின் சிங்

கிளம்பி வந்த ராபின் சிங்

அதற்கு அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்க பொல்லார்ட் ஹைதராபாத் வந்திருந்த போது, நான் உடனே மும்பை அணி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, 'பொல்லார்ட் வந்திருக்கிறார்.. ஹைதராபாத்திற்கு வாருங்கள். சாம்பியன்ஸ் லீக் தொடர் துவங்குவதற்கு முன்பே இவரை ஒப்பந்தம் செய்துவிடுங்கள்' என்றேன். உடனடியாக ராபின் சிங்கும், ராகுலும் மும்பையில் இருந்து கிளம்பி ஹைதராபாத் வந்தார்கள்.

 750,000 அமெரிக்க டாலருக்கு

750,000 அமெரிக்க டாலருக்கு

பிறகு, பொல்லார்டை சந்தித்த மும்பை அணி நிர்வாகிகள், ஒப்பந்த கோப்புகளை பொல்லார்டின் காண்பித்தார்கள். அப்போது அவர், ‘டுவைன்.. நீ சீரியஸா தான் சொல்றியா?' எனக் கேட்டார். பிறகு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் பொல்லார்ட் காட்டடி அடித்தார். அதன்பிறகுதான் மற்ற அணிகள் பொல்லார்டை திரும்பிப் பார்த்தார்கள். மும்பை அணி இவரை ஒப்பந்தம் செய்த பிறகு, மினி ஏலத்தில் பொல்லார்டின் பெயர் இடம்பெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டை 750,000 அமெரிக்க டாலருக்கு மீண்டும் கைப்பற்றியது" எனத் தெரிவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Bravo Recalls how Mumbai Indians Signed Pollard - ஐபிஎல்
Story first published: Thursday, May 13, 2021, 19:47 [IST]
Other articles published on May 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X