For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரபரப்பு..! டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும்.. துபாயில் திடீர் நிலநடுக்கம்

துபாய்: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்று வரும் நிலையில், போட்டி தொடங்க சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

 6 ஓவர்களில் வெற்றி.. ராகுலின் அதிவேக அரைசதம்..ஸ்காட்லாந்தை பந்தாடிய இந்தியா..அரையிறுதிக்கு செல்லுமா 6 ஓவர்களில் வெற்றி.. ராகுலின் அதிவேக அரைசதம்..ஸ்காட்லாந்தை பந்தாடிய இந்தியா..அரையிறுதிக்கு செல்லுமா

துபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. எதிர்பார்த்தபடியே முதலில் பேட் செய்த நியூசிலாந்து தடுாறிக் கொண்டிருக்கிறது.

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக துபாயில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஈரானில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஈரானில் ஏற்பட்டிருந்தாலும் அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. துபாயில் உள்ள ஜுமைரா லேக் டவர்ஸ், துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் மற்றும் டிஸ்கவரி கார்டன்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் சில நிமிடங்கள் வரை இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

6.5 ரிக்டர்

6.5 ரிக்டர்

இது குறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஞாயிற்றுக்கிழமை தெற்கு ஈரான் பிராந்தியத்தில் உள்ள பந்தர் அப்பாஸ் நகரத்திலிருந்து சுமார் 47 கிமீ (29 மைல்) தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் 6.1 ரிக்டராக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஐசிசி சார்பில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

சம பலம்

சம பலம்

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளும் சம பலத்துடன் இருக்கிறது. சூப்பர் 12 சுற்றில் இரு அணிகளுமே 5இல் 4 போட்டிகளில் வென்று, ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தது. புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்திருந்த இரண்டு அணிகளும் அரையிறுதியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எத்திரணியைத் தோற்கடித்தது. எனவே, இறுதிப் போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை

இதுவரை

இரண்டு அணிகளும் டி20 உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை. இரண்டு அணிகளும் இதுவரை 14 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 9 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் 4 போட்டிகளில் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. அதேநேரம் டி20 உலகக் கோப்பைகளில் இரண்டு அணிகளும் ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து வென்றுள்ளது.

நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா

நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா

இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி இருந்த நியூசிலாந்து ஒரே ஆண்டில் தனது இரண்டாவது ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. லார்ட்ஸில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பழிவாங்கும் வகையில் இது இருந்தது. மறுபுறம் ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பை தொடரைத் தொடங்கும் போது ஆஸ்திரேலியா வலுவான அணியாக இல்லை. முதல்முறையாக ஐசிசி தொடர் ஒன்றில் ஆஸ்திரேலியாவால் கோப்பை வெல்ல முடியாது என கி்ட்டதட்ட அனைவரும் முடிவு செய்துவிட்டனர். இருப்பினும், ஐசிசி தொடர் என்பதாலோ என்னவோ பழைய பன்னீர் செல்வமாக வந்து மற்ற அணிகளை அலறவிட்டது ஆஸ்திரேலியா. அரையிறுதி போட்டியிலும் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் சொதப்ப இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்தது.

Story first published: Sunday, November 14, 2021, 20:50 [IST]
Other articles published on Nov 14, 2021
English summary
Dubai felt earthquake tremors on the eve of the high-voltage T20 World Cup 2021. T20 World cup latest news in Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X