For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மறுபடியும் கிரிக்கெட் ஆடலாமா.. இல்லை அப்படியே விட்ரலாமா.. இங்கிலாந்து ஆலோசனை!

லண்டன் : மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை துவக்குவது குறித்து அரசுடன் இணைந்து திட்டமிட்டு வருவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

Recommended Video

Mitchell Santner Opens Up On Dhoni’s Confrontation With Umpires

பிரிட்டனில் கொரோனா வைரசால் 31,855 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,19,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜூன் ஒன்றாம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

ECB Says Working Closely With Government To Resume Cricket In England

இந்த சம்மரில் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் துவங்க முடியும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் போட்டிகளை எவ்வாறு பாதுகாப்புடன் துவங்குவது என்பது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் இசிபி தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. அங்கு 31,855 பேர் கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 2,19,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு வரும் ஜூன் 1ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்துள்ளார். மேலும் வரும் புதன்கிழமை முதல் சிலவற்றில் தளர்வை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் துவங்குவது குறித்து இங்கிலாந்து அரசுடன் இணைந்து திட்டமிட்டு வருவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்காத வண்ணம் சம்மருக்குள் கிரிக்கெட் போட்டிகளை பாதுகாப்பான வகையில் துவங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இசிபி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

2021 மகளிர் உலக கோப்பை வெற்றியோட ஓய்வை அறிவிக்கணும்... மிதாலி ராஜ் விருப்பம் 2021 மகளிர் உலக கோப்பை வெற்றியோட ஓய்வை அறிவிக்கணும்... மிதாலி ராஜ் விருப்பம்

வரும் ஜூன் 1ம் தேதிவரை பிரிட்டனில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் அறிவுரைகளை பின்பற்றி இசிபி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியினர் விளையாட இருந்த நிலையில், கொரோனாவால் அந்த தொடர் ரத்து செய்யப்பட்டது. அதுமுதல் அங்கு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. வீரர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

Story first published: Monday, May 11, 2020, 19:49 [IST]
Other articles published on May 11, 2020
English summary
ECB remained hopeful of cricket being played in the summer in the UK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X