ரஷித் கானுக்கு நேர்ந்த அவமானம்.. ஆதரவாக களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியில் ஆப்கன் வீரர் ரஷித் கான் மிக மோசமாக பந்து வீசினார்.

அவரது மோசமான பந்துவீச்சை தரக்குறைவாக கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டது ஐஸ்லாந்து நாட்டு கிரிக்கெட் போர்டு.

பொதுவாக கிரிக்கெட் ரசிகர்கள் ஒழுங்காக ஆடாத வீரர்களை கடுமையாக கிண்டல் செய்வார்கள். ஆனால், ஒரு நாட்டின் கிரிக்கெட் போர்டு இப்படி "தர லோக்கலாக" கிண்டல் செய்தது அதிர்ச்சியாக இருந்தது.

இப்படியும் நடக்குமா.. பேட்டை பிடுங்கி ஓட விடாமல் தடுத்த ஆப்கான் வீரர்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ!

பந்துவீச்சு

பந்துவீச்சு

ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டின் பதிவை கண்டு பொங்கி எழுந்து பதில் அளித்தார் இங்கிலாந்து முன்னாள் வீரர் லூக் ரைட். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசி 110 ரன்கள் கொடுத்து பேரதிர்ச்சி கொடுத்தார் ரஷித் கான். இங்கிலாந்து அணியின் இயான் மார்கன் இவர் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ரஷித் கான் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

மோசமான சாதனை

மோசமான சாதனை

இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் ரஷித் கான். உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக வளர்ந்து வந்த ரஷித் கான் திடீரென மிக மோசமான சாதனையை செய்தது அதிர்ச்சியாக இருந்தது.

ஐஸ்லாந்து பதிவு

இதை கிண்டல் செய்து பதிவு வெளியிட்டது ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு. "ரஷித் கான் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதத்தை அடித்தார் என கேள்விப்பட்டோம். வாவ்.. 56 பந்துகளில் 110 ரன்கள். இந்த உலகக்கோப்பையில் அதிக ரன் எடுத்த பந்துவீச்சாளர். நன்றாக பேட்டிங் செய்தீர்கள் இளம் வீரரே.."

லூக் ரைட் கோபம்

இந்தப் பதிவை கண்டு கோபமடைந்தார் லூக் ரைட். அதற்கு பதிலடி கொடுத்தார். "குப்பை பதிவு. கிண்டல் செய்வதை விட, கிரிக்கெட்டுக்காக நிறைய செய்தவரிடம் மரியாதையாக இருக்கலாமே. அதுவும் ஒரு துணை உறுப்பு நாட்டில் இருந்து வந்தவரிடம்.." என கூறியுள்ளார்.

போராட்டம்

போராட்டம்

ஆப்கன் அணி மிகுந்த போராட்டத்துக்கு இடையே கிரிக்கெட் விளையாட்டில் முன்னேறி வந்துள்ளது. அந்த நாட்டில் எந்த நேரமும் வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும், ராணுவ அணிவகுப்பும் நடந்து வரும் நிலையில் பயிற்சி செய்யக் கூட போதிய வழியின்றி, போராடி முன்னேறி வருகிறது அந்த அணி.

ரஷித் கானும் பல்வேறு போராட்டத்துக்கு இடையே சிறந்த சுழற் பந்துவீச்சாளராக உருவாகி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணி போலவே கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடான ஐஸ்லாந்து, அவரை கிண்டல் செய்து இருப்பது "நம்மால் வளர முடியவில்லையே என்ற வயித்தெரிச்சல்" போலவே தோன்றுகிறது.

ஸ்டூவர்ட் பிராடு ஆதரவு

மற்றொரு இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடு, ரஷித் கானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தன் பதிவில், "அவர் தலைசிறந்த பந்துவீச்சாளர். நம் விளையாட்டில் எல்லோருக்கும் ஓர் கெட்ட நாள் இருக்கும்" என்று கூறி உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
ENG vs AFG Cricket World cup 2019 : Rashid Khan insulted by Iceland cricket. England players tends support.
Story first published: Wednesday, June 19, 2019, 10:46 [IST]
Other articles published on Jun 19, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X