For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கெல்லாமா அவுட் கேப்பீங்க? ஊரே கூடி சிரித்த சம்பவம்.. அசிங்கப்பட்ட இங்கிலாந்து!

சவுதாம்ப்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு முறை டிஆர்எஸ் முறையில் அவுட் கேட்டது.

ஆனால், அது அவுட் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தும் இங்கிலாந்து அப்படி அவுட் கேட்டது ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது.

ரூ.1800 ஜிஎஸ்டி பாக்கி வைத்த தோனி.. ரசிகர்கள் செய்த காரியம்.. ராஞ்சியில் நடந்த கேலிக்கூத்து!ரூ.1800 ஜிஎஸ்டி பாக்கி வைத்த தோனி.. ரசிகர்கள் செய்த காரியம்.. ராஞ்சியில் நடந்த கேலிக்கூத்து!

டி20 போட்டி

டி20 போட்டி

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியின் விளிம்பில் இருந்து, பின் கடைசி சில ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பின்ச் சிறப்பாக ஆடி 40 ரன்கள் சேர்த்தார். ஸ்டோனிஸ் 35, மேக்ஸ்வெல் 26, அகர் 23 ரன்கள் சேர்த்தனர்.

அந்த பந்து

அந்த பந்து

இந்தப் போட்டியில் ஆரோன் பின்ச் பேட்டிங் ஆடி வந்த போது தான் அந்த சம்பவம் நடந்தது. ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது 7 வது ஓவரை அதில் ரஷித் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை லெக் பிரேக் ஆக வீசினார் ரஷித்.

டிஆர்எஸ் ரிவ்யூ

டிஆர்எஸ் ரிவ்யூ

ஆரோன் பின்ச் அந்த பந்தை பார்வர்டு டிஃபன்ஸ் முறையில் பேட்டின் மத்திய பகுதியில் படும்படி தடுத்தார். ஆனால், பந்து அவரது காலில் பட்டதாக எண்ணினர் இங்கிலாந்து வீரர்கள். அம்பயர் அவுட் கொடுக்க மறுக்கவே டிஆர்எஸ் ரிவ்யூவும் கேட்டு அதிர வைத்தனர்.

இதுக்கெல்லாமா அவுட் கேப்பீங்க

இதுக்கெல்லாமா அவுட் கேப்பீங்க

ரீப்ளேவில் பந்து முழுமையாக அவரது பேட்டில் படுவது தெரிந்தது. இதை அடுத்து இங்கிலாந்து அணி ஒரு ரிவ்யூவை இழந்தது. அப்போதே, "இதுக்கெல்லாமா அவுட் கேப்பீங்க?" என இந்த மோசமான ரிவ்யூவை ரசிகர்கள் கிண்டல் செய்யத் துவங்கினர்.

மோசமான ரிவ்யூ

மோசமான ரிவ்யூ

சிலர் இதுதான் டிஆர்எஸ் வரலாற்றிலேயே மோசமான ரிவ்யூ என்று கூறி இருந்தனர். ஒருவர் வேடிக்கையாக, தான் தேர்வில் 2 + 2 = 4 என்பதை கால்குலேட்டரில் போட்டு சரி பார்த்துக் கொள்வது போல, இங்கிலாந்து இது விக்கெட் இல்லை என்பதை ரிவ்யூ கேட்டு சரி பார்த்துள்ளது என கூறி உள்ளார்.

ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்

இந்தப் போட்டியில் 158 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் 54 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தல் துவக்கம் அளித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடினார் பட்லர். மலன் 42 ரன்கள் குவித்தார்.

அபார வெற்றி

அபார வெற்றி

இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 தொடரையும் 2 - 0 என கைப்பற்றியது. வெற்றி பெற்ற போதிலும் இங்கிலாந்து அணியை ரசிகர்கள் கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை.

Story first published: Monday, September 7, 2020, 18:41 [IST]
Other articles published on Sep 7, 2020
English summary
ENG vs AUS 2nd T20 : England DRS for Aaron finch trolled by fans. Finch middled the ball with forward defence. But, England asked for a DRS and face trolls from fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X