For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி பேட்ஸ்மேன் வரை பவுண்டரி.. பேர்ஸ்டோ சதம்.. ஆஸி.வுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

மான்செஸ்டர் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை எட்டியது.

அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ பொறுப்பாக ஆடி விக்கெட் சரிவில் இருந்து அணியை மீட்டு சதம் அடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலியா முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் வீழ்த்தியும், இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறியது.

நம்ம ஸிவா அப்பா தானே இவரு.. ரசிகர்களுடன் கண்ணாமூச்சி ஆடிய தோனி.. சிஎஸ்கே அட்மின் செய்த காரியம்!நம்ம ஸிவா அப்பா தானே இவரு.. ரசிகர்களுடன் கண்ணாமூச்சி ஆடிய தோனி.. சிஎஸ்கே அட்மின் செய்த காரியம்!

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளன. தொடர் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் மோதின.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்ற அந்த அணியின் கணிப்பு சரியானது. எனினும், மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது இங்கிலாந்து அணி.

2 டக் அவுட்

2 டக் அவுட்

துவக்க வீரர் ஜேசன் ராய், ஜோ ரூட் அடுத்தடுத்து தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் 23 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.

ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்க்ஸ்

ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்க்ஸ்

அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்து வெளியேறினார். அதுவரை நிலையாக ஆடி வந்த துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்க்ஸ் உடன் கூட்டணி அமைத்தார். இருவரும் பொறுப்பாக ஆடினர்.

அபார கூட்டணி

அபார கூட்டணி

96 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை தங்கள் 114 ரன் கூட்டணி மூலம் தூக்கி நிறுத்தியது இந்த கூட்டணி. சாம் பில்லிங்க்ஸ் அரைசதம் அடித்து 57 ரன்களில் வெளியேறினார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார்.

இங்கிலாந்து ஸ்கோர்

இங்கிலாந்து ஸ்கோர்

பேர்ஸ்டோ சதம் அடித்து 112 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் கர்ரன் 19 ரன்கள் எடுத்தார். கிறிஸ் வோக்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி கடைசி ஓவரில் தன் ஐந்தாவது அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து ரன் குவிப்பு

இங்கிலாந்து ரன் குவிப்பு

இங்கிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்த போதும் கடைசி பேட்ஸ்மேன் வரை அந்த அணியில் ரன் குவிக்கும் திறன் படைத்து இருந்ததால் அந்த அணி 300 ரன்களை கடந்தது. ஆஸ்திரேலியா கடைசி சில ஓவர்களில் இங்கிலாந்து அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த தவறியது.

பந்துவீச்சு

பந்துவீச்சு

மிட்செல் ஸ்டார்க் துவக்கத்தில் சிறப்பாக வீசிய நிலையில், கடைசி கட்டத்தில் ரன்களை வாரி இறைத்தார். அவர் 10 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். கம்மின்ஸ் 1, ஜாம்பா 3 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். மோசமாக செயல்பட்ட ஹேசல்வுட் 10 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட் வீழ்த்தியும் ஆஸ்திரேலிய அணியால் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியாதது விமர்சனத்துக்கு உள்ளானது. ஆஸ்திரேலிய அணிக்கு 303 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.

Story first published: Wednesday, September 16, 2020, 22:39 [IST]
Other articles published on Sep 16, 2020
English summary
ENG vs AUS 3rd ODI : Jonny Bairstow scored cenrtury, Tail enders scored quick, as England safely reached 300 mark. England, batting first, scored 302 runs for 7. Australia took 2 wickets in first 2 balls but ended up bad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X