உலக சாதனை.. வரலாற்றில் இடம் பிடித்த இங்கிலாந்து - ஆஸி முதல் ஒருநாள் போட்டி!

மான்செஸ்டர் : மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி வரலாற்று சாதனை படைத்தது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 150வது ஒருநாள் போட்டி இதுவாகும்.

இதன் மூலம், அந்த இரண்டு அணிகளும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் உடன் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தன.

ரெய்னாவுக்கு பதில் அந்த தமிழக வீரர்.. சிஎஸ்கே அணியின் திட்டம் இதுதான்.. வெளியான ரகசியம்!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1 - 2 என தோல்வி அடைந்தது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது.

150வது ஒருநாள் போட்டி

150வது ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்தது. பழம்பெரும் பகை அணிகளாக கருதப்படும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன 150வது ஒருநாள் போட்டி இது.

முதல் இடத்தில் யார்?

முதல் இடத்தில் யார்?

அதிக ஒருநாள் போட்டிகளில் மோதிய அணிகள் வரிசையில் 159 போட்டிகளுடன் முதல் இடத்தில் இந்தியா - இலங்கை அணிகள் உள்ளன. பாகிஸ்தான் - இலங்கை அணிகள் 155 போட்டிகளில் மோதி இரண்டாம் இடத்தில் உள்ளன.

மற்ற நாடுகளுடன் ஆஸ்திரேலியா

மற்ற நாடுகளுடன் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுடன் 140 போட்டிகளில் மோதி உள்ளது. அதற்கு அடுத்து நியூசிலாந்து அணியுடன் 138 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணியுடன் 104 போட்டிகளிலும் ஆடி உள்ளது.

ஆஸ்திரேலியா ஆதிக்கம்

ஆஸ்திரேலியா ஆதிக்கம்

முதல் ஒருநாள் போட்டிக்கு முன் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதி உள்ள 149 போட்டிகளில் ஆஸ்திரேலியா 82 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 62 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டை ஆகி உள்ளன. ஒரு போட்டியில் முடிவு தெரியவில்லை.

இங்கிலாந்து செய்த சாதனை

இங்கிலாந்து செய்த சாதனை

2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை அரை இறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் 27 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய அணியை நாக்-அவுட் சுற்றில் வீழ்த்தி சாதனை படைத்து இருந்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தற்போது டி20 தொடரை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை வெல்ல போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இங்கிலாந்து அணி தன் சொந்த மண்ணில் அத்தனை எளிதில் விட்டுக் கொடுக்காது என்பதால் ரசிகர்கள் இந்த ஒருநாள் தொடரை ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ENG vs AUS : England vs Australia playing in their 150th ODI match in Manchester. This is the third maximum number of ODI matches between two teams. India - Sri Lanka stands first in the list with 159 ODI matches.
Story first published: Friday, September 11, 2020, 18:56 [IST]
Other articles published on Sep 11, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X