For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ENG vs AUS : இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸி.. படுநிதான ஆட்டம் ஆடி சரண்டர் ஆன இங்கிலாந்து!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணி மோசமான முறையில் சேஸிங் செய்து சொதப்பி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது.

Recommended Video

ENG vs AUS 1st ODI: England lost by 18 runs

போட்டி நடந்த மைதானத்தில் 250-260 ரன்களே நல்ல ஸ்கோராக இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி 294 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு சவால் விடுத்தது.

இங்கிலாந்து அணி ஆமை வேகத்தில் ஆடத் துவங்கியது. இடையே ஜானி பேர்ஸ்டோ - சாம் பில்லிங்க்ஸ் அதிரடி ஆட்டம் ஆடினாலும் விக்கெட் சரிவால் அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.

ஸ்டீவ் ஸ்மித் இல்லை

ஸ்டீவ் ஸ்மித் இல்லை

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

ஸ்கோர்

ஸ்கோர்

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டி நடந்த ஓல்ட் ட்ராபோர்டு மைதானத்தில் 286 ரன்களுக்கு மேல் எந்த அணியும் சேஸிங் செய்ததில்லை. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 260 - 270 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும் என கருதப்பட்டது.

விக்கெட் இழப்பு

விக்கெட் இழப்பு

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் விக்கெட்களை இழக்கத் துவங்கியது. வார்னர் 6, ஆரோன் பின்ச் 16, லாபுஷாக்னே 21, அலெக்ஸ் கேரி 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்டோனிஸ் ஓரளவு விரைவாக ரன் குவித்து 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ் - மேக்ஸ்வெல்

மிட்செல் மார்ஷ் - மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலியா 23.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. விக்கெட் சரிந்தாலும் ரன் ரேட் 5க்கு மேலேயே தொடர்ந்து இருந்தது. 6வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் - கிளென் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தனர். அந்த ஜோடி போட்டியை இங்கிலாந்து கையில் இருந்து பறித்தது.

மேக்ஸ்வெல் அதிரடி

மேக்ஸ்வெல் அதிரடி

மிட்செல் மார்ஷ் நிதான ஆட்டம் ஆடினார். மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடி 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்ஷ் 100 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் 10, ஜாம்பா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா ஸ்கோர்

ஆஸ்திரேலியா ஸ்கோர்

கடைசி பந்தில் 19 ரன்கள் எடுத்த மிட்செல் ஸ்டார்க் ஒரு சிக்ஸ் அடித்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்தது. போட்டி நடந்த மைதானத்தில் எந்த அணியும் எட்டாத இலக்கை நிர்ணயம் செய்தது ஆஸ்திரேலியா.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

பெரிதாக குறை சொல்ல முடியாத அளவில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு இருந்தது. பந்து வீசிய ஐந்து வீரர்களும் 10 ஓவர்களில் 54 முதல் 59 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தனர். ஆர்ச்சர் 3, ஆர்ச்சர் 3, ரஷித் 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

நெருப்பை கக்கிய ஹேசல்வுட்

நெருப்பை கக்கிய ஹேசல்வுட்

அடுத்து இங்கிலாந்து அணி 295 ரன்களை துரத்தத் துவங்கியது. ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் வேகப் பந்துவீச்சில் நெருப்பை கக்கினார். அவரது துல்லிய பந்துவீச்சால் மிரண்ட இங்கிலாந்து அணி ரன் குவிக்க திணறி விக்கெட்களையும் இழந்தது.

ஆமை வேகம்

ஆமை வேகம்

ஜேசன் ராய் 3, ஜோ ரூட் 1, இயான் மார்கன் 23, பட்லர் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். துவக்க வீரர் பேர்ஸ்டோ ஆமை வேகத்தில் ஆடியதும் மற்ற வீரர்கள் விக்கெட்களை இழக்க ஒரு காரணம். பேர்ஸ்டோ ஒரு கட்டத்தில் 71 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

இங்கிலாந்து நிலை

இங்கிலாந்து நிலை

பின்னர் பேர்ஸ்டோ அதிரடியாக சிக்ஸ், ஃபோர் அடித்து ரன் ரேட்டை உயர்த்த முயன்றார். 26 ஓவர்களில் இங்கிலாந்து அணி 99 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ரன் ரேட் நான்கை தாண்டவில்லை. அதுவரை, சாம் பில்லிங்க்ஸ்-உம் நிதான ஆட்டமே ஆடி வந்தார். அவர் 32 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இருந்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

பின்னர் பேர்ஸ்டோ - பில்லிங்க்ஸ் இருவரும் நிலைமையை உணர்ந்து அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினர். ஆனால், ரன் தேவை ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் இருந்தது. பேர்ஸ்டோ 107 ரன்களில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஓவருக்கு 9 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், மொயீன் அலி 6, வோக்ஸ் 10, ரஷித் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பில்லிங்க்ஸ் சதம் வீண்

பில்லிங்க்ஸ் சதம் வீண்

பில்லிங்க்ஸ் தனி ஆளாக போராடினார். கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. சதம் அடித்து இருந்த சாம் பில்லிங்க்ஸ் 118 ரன்களில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எப்போதும் அதிரடி ஆட்டம் ஆடும் இங்கிலாந்து அணி இந்த முறை ஆமை வேகத்தில் சேஸிங் செய்து தோற்றதை கண்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட் 3, ஜாம்பா 4 விக்கெட் வீழ்த்தினர். மார்ஷ், கம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Saturday, September 12, 2020, 12:27 [IST]
Other articles published on Sep 12, 2020
English summary
ENG vs AUS : England vs Australia 1st ODI match result - Australia scored 294 runs batting first. England scored 275 runs in chasing and lost by 18 runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X