3 ரன்னில் 4 விக்கெட்.. செம ட்விஸ்ட்.. இங்கிலாந்து கேப்டனின் மாஸ்டர்பிளான்.. ஆஸி. மோசமான தோல்வி!

மான்செஸ்டர் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 23 ரன்களில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்பி, பந்துவீச்சிலும் பாதி போட்டி வரை சுமாராகவே செயல்பட்ட நிலையில், கடைசி 20 ஓவர்களில் அபாரமாக பந்து வீசி வெற்றி பெற்றது.

ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினர்.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 0 - 1 என பின்தங்கி இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வென்றால் மட்டுமமே தொடர் தோல்வியில் இருந்து தப்ப முடியும் என்ற நிலையில் இரண்டாவது போட்டியில் களமிறங்கியது இங்கிலாந்து அணி.

டக் அவுட்

டக் அவுட்

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய ஆடுகளம் கடினமாக இருந்தது. இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர் பேர்ஸ்டோ டக் அவுட் ஆகி ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் ஜேசன் ராய் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஜோ ரூட் நிதான ஆட்டம்

ஜோ ரூட் நிதான ஆட்டம்

அடுத்து வந்த ஜோ ரூட் டெஸ்ட் போட்டியை விட மோசமாக ஆடி சோதித்தார். 60 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் படு நிதான ஆட்டம் ஆடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெயரை பெற்றார். மார்கன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 60 பந்துகளை சந்தித்த பின் வேகம் எடுத்த ஜோ ரூட் 73 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பட்லர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். சாம் பில்லிங்க்ஸ் 28 பந்துகளில் வெறும் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இங்கிலாந்து ஸ்கோர்

இங்கிலாந்து ஸ்கோர்

சாம் கர்ரன் 1 ரன் மட்டுமே எடுத்தார். கடைசி நேரத்தில் கிறிஸ் வோக்ஸ் 26, அதில் ரஷித் 35, டாம் கர்ரன் 37 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை கவுரவமான ஸ்கோரை எட்டச் செய்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா பந்துவீச்சு

ஆஸ்திரேலியா பந்துவீச்சு

மிட்செல் ஸ்டார்க் 2, ஹேசல்வுட் 1, பாட் கம்மின்ஸ் 1, மிட்செல் மார்ஷ் 1, ஆடம் ஜாம்பா 3 விக்கெட் வீழ்த்தினர். ஹேசல்வுட் 10 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். அதே போல ஸ்டார்க் 10 ஓவர்களில் 38 ரன்களும், ஜாம்பா 10 ஓவர்களில் 36 ரன்களும் மட்டுமே கொடுத்து கட்டுக் கோப்பாக பந்து வீசி இருந்தனர்.

ஆஸ்திரேலியா ஏமாற்றம்

ஆஸ்திரேலியா ஏமாற்றம்

அடுத்து 232 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் 6, ஸ்டோனிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 37 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில், கேப்டன் பின்ச், லாபுஷாக்னே விக்கெட் இழக்காமல் களத்தில் நின்று நம்பிக்கை அளித்தனர்.

இயான் மார்கன் திட்டம்

இயான் மார்கன் திட்டம்

30 ஓவர்கள் முடிந்த நிலையில், போட்டி ஆஸ்திரேலியா வசம் இருந்ததை உணர்ந்த இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் கடைசி 10 ஓவர்களை வீச கையில் வைத்திருந்த ஆர்ச்சர் - கிறிஸ் வோக்ஸ் ஓவர்களை பயன்படுத்த முடிவு செய்தார்.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

வோக்ஸ் வீசிய 31வது ஓவரில் லாபுஷாக்னே 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மிட்செல் மார்ஷ் 1, ஆரோன் பின்ச் 73, கிளேன் மேக்ஸ்வெல் 1 ரன்னில் வரிசையாக ஆர்ச்சர், வோக்ஸ் ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

3 ரன்னில் 4 விக்கெட்

3 ரன்னில் 4 விக்கெட்

144 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா, 147 ரன்களுக்கு 6வது விக்கெட்டை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. 3 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது. அதன் பின்னும் விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்தது.

ஆஸ்திரேலியா தோல்வி

ஆஸ்திரேலியா தோல்வி

பாட் கம்மின்ஸ் 11, மிட்செல் ஸ்டார்க் 0, ஜாம்பா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய அலெக்ஸ் கேரி 36 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 48.4 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து சமநிலை

இங்கிலாந்து சமநிலை

ஆர்ச்சர் 3, வோக்ஸ் 3, சாம் கர்ரன் 3, அதில் ரஷித் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1 - 1 என சமநிலையில் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ENG vs AUS : England vs Australia 2nd ODI match result - Eoin Morgan tricked Australia with the burst of Archer and Woakes overs in the middle.
Story first published: Monday, September 14, 2020, 10:47 [IST]
Other articles published on Sep 14, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X