For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் டக் அவுட்.. தனி ஆளாக ஆஸி. கதையை முடித்த ஜோஸ் பட்லர்.. டி20 தொடரை வென்ற இங்கிலாந்து!

சவுதாம்ப்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Recommended Video

ENG vs AUS 2nd T20: Buttler guides England to series win

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது.

ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் டக் அவுட் ஆனது அந்த அணியை துவக்கம் முதலே பாதித்து தோல்விக்கு முக்கிய காரணம் ஆனது.

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்!தோனி தலைமையில் சிஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்!

டி20 தொடர்

டி20 தொடர்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் கடைசி பந்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா கைக்கு கிடைத்த வெற்றியை கோட்டை விட்டு இருந்தது.

ஆஸ்திரேலியா நிலை

ஆஸ்திரேலியா நிலை

இந்த நிலையில், டி20 தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்ப, இரண்டாவது டி20 போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது ஆஸ்திரேலியா. அந்த அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

டேவிட் வார்னர் டக் அவுட்

டேவிட் வார்னர் டக் அவுட்

முதல் ஓவரின் 3வது பந்தில் அணியின் அனுபவ பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரி 2, ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஆரோன் பின்ச் 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா ஸ்கோர்

ஆஸ்திரேலியா ஸ்கோர்

ஸ்டோனிஸ் 26 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். மேக்ஸ்வெல் 26, ஆஸ்டன் அகர் 23 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் பாட் கம்மின்ஸ் பட்டையைக் கிளப்பினார். அவர் 5 பந்துகளில் 13 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது.

ஆர்ச்சர் செய்த தவறு

ஆர்ச்சர் செய்த தவறு

ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் மட்டும் ஆஸ்திரேலியா 18 ரன்கள் சேர்த்து இருந்தது. இது மட்டுமே இங்கிலாந்து செய்த தவறாக கருதப்பட்டது. இங்கிலாந்து அணியின் அதில் ரஷித், மார்க் வுட் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். இருவரும் 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

பேர்ஸ்டோ ஹிட் விக்கெட்

பேர்ஸ்டோ ஹிட் விக்கெட்

158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் பேர்ஸ்டோ ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தாவித் மலன் மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை ஆடி 32 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்

அடுத்து வந்த டாம் பான்டன் 2, கேப்டன் இயான் மார்கன் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். யார் வந்தாலும், போனாலும் ஜோஸ் பட்லர் நங்கூரமிட்டது போல ஆடி வந்தார். அவர் அரைசதம் கடந்து அதிரடி ஆட்டம் ஆடி வந்தார்.

2 ஓவர்களில் 18 ரன்கள்

2 ஓவர்களில் 18 ரன்கள்

கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அப்போது ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா பந்து வீசினார். மொயீன் அலி அந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடிக்க, ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து அணியை வெற்றி இலக்கை எட்டச் செய்தார் பட்லர்.

ஆஸ்திரேலியா தோல்வி

ஆஸ்திரேலியா தோல்வி

ஜோஸ் பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து இருந்தார். ஆஸ்திரேலிய அணி வார்னரின் இழப்பை ஈடு செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது. அந்த அணியின் பந்துவீச்சும் மோசமாகவே அமைந்தது.

டி20 தொடர் வெற்றி

டி20 தொடர் வெற்றி

இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 - 0 என வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றியாவது பெற முயலும். இங்கிலாந்து அணி மூன்றாவது டி20யில் வென்றால் உலகிலேயே நம்பர் 1 டி20 அணியாக தரவரிசையில் இடம் பெறலாம்.

Story first published: Sunday, September 6, 2020, 23:58 [IST]
Other articles published on Sep 6, 2020
English summary
ENG vs AUS : England vs Australia 2nd T20 match result - England beat Australia by 6 wickets, Jos Buttler scored 77 runs without losing his wicket in the 158 run chase.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X