303 ரன் டார்கெட்.. 73க்கு 5 விக்கெட் காலி.. விடாமல் போராடி வென்ற ஆஸி.. காப்பாற்றிய மெகா கூட்டணி!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மிக மோசமான கட்டத்தில் இருந்து போராடி வென்றது ஆஸ்திரேலிய அணி.

303 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.

அப்போது ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - அலெக்ஸ் கேரி போட்டியை ஆஸ்திரேலியா வசம் எடுத்துச் சென்று வெற்றி தேடித் தந்தனர்.

அடிச்சு தூள்கிளப்புறாரு... அவர்தாங்க உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்.. ரிங்கு சிங் பாராட்டு

மூன்றாவது ஒருநாள் போட்டி

மூன்றாவது ஒருநாள் போட்டி

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் இருந்ததால், இந்தப் போட்டி வெற்றியாளரை தீர்மானிக்கும் மோதலாக அமைந்தது.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

முக்கியமான இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ராய், ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார். அந்த சரிவை பொருட்படுத்தாத இங்கிலாந்து அணி தொடர்ந்து ரன் குவித்தது.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

இயான் மார்கன் 23, பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். துவக்க வீரர் பேர்ஸ்டோ நிலையாக நின்று ரன் குவித்து வந்தார். 4 விக்கெட் வீழ்ந்த நிலையில் அவருக்கு சாம் பில்லிங்க்ஸ் ஒத்துழைப்பு அளித்து ரன் சேர்த்தார். இந்தக் கூட்டணி 6வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது.

பேர்ஸ்டோ சதம்

பேர்ஸ்டோ சதம்

சாம் பில்லிங்க்ஸ் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் கர்ரன் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ சதம் கடந்தார். 112 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வெளியேற, கிறிஸ் வோக்ஸ் கடைசி நேரத்தில் ரன் குவித்தார்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

கிறிஸ் வோக்ஸ் 53, அதில் ரஷித் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 3, ஜாம்பா 3, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா பரிதாபம்

ஆஸ்திரேலியா பரிதாபம்

அடுத்து 303 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடியது. கேப்டன் ஆரோன் பின்ச் 12, ஸ்டோனிஸ் 4, வார்னர் 24, மிட்செல் மார்ஷ் 2, லாபுஷாக்னே 20 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். 16.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா 73 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது.

திசை மாற்றிய ஜோடி

திசை மாற்றிய ஜோடி

இனி ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பே இல்லை என அனைவரும் கருதிய நிலையில், ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி போட்டியை திசை மாற்றினர். கேரி நிதான ஆட்டம் ஆட, மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடினார்.

212 ரன்கள்

212 ரன்கள்

இருவரும் சதம் அடித்து ஆறாவது விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்தனர். மேக்ஸ்வெல் 90 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். 4 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து இருந்தார் அவர். அலெக்ஸ் கேரி 106 ரன்கள் குவித்தார். அவர் 7 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

மேக்ஸ்வெல் 48வது ஓவரிலும், அலெக்ஸ் கேரி 49வது ஓவரின் முடிவிலும் ஆட்டமிழந்தனர். அப்போது கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை. ஓரளவு ரன் குவிக்கும் ஆற்றல் கொண்ட ஸ்டார்க், கம்மின்ஸ் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் அப்போது வேகப் பந்துவீச்சாளரை தேர்வு செய்யாமல், அதில் ரஷித்தை பந்து வீச அழைத்தார்.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா வெற்றி

அந்த ஓவரின் ஸ்டார்க் முதல் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளில் 2 ரன்கள் கிடைக்க, நான்காவது பந்தில் ஸ்டார்க் ஒரு ஃபோர் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தார். இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2 - 1 என கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ENG vs AUS : England vs Australia 3rd ODI match result - Glenn Maxwell, Alex Carey hit centuries as Aus beat England by 3 wickets, while chasing a target of 303.
Story first published: Thursday, September 17, 2020, 9:19 [IST]
Other articles published on Sep 17, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X