For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரும் அடிக்காத டார்கெட்.. முடிஞ்சா ஜெயிச்சுக்கோங்க.. இங்கிலாந்து சொதப்பல்.. சவால் விட்ட ஆஸி. ஜோடி!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணி துவக்கத்தில் சிறப்பாக பந்து வீசினாலும் இடையே சொதப்பியது.

ஆஸ்திரேலிய அணி 24வது ஓவருக்கு முன் 5 விக்கெட்களை இழந்த நிலையில் மேக்ஸ்வெல் - மிட்செல் மார்ஷ் ஜோடியால் பெரிய ஸ்கோரை எட்டியது.

போட்டி நடக்கும் மான்செஸ்டர், ஓல்ட் ட்ராபோர்டு மைதானத்தில் இதுவரை எந்த அணியும் சேஸிங் செய்திராத இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்தையே தூக்கிட்டாங்களா? வேறு வழியில்லாமல் ஆஸி. எடுத்த முடிவு.. ரசிகர்கள் பரபரப்புஸ்டீவ் ஸ்மித்தையே தூக்கிட்டாங்களா? வேறு வழியில்லாமல் ஆஸி. எடுத்த முடிவு.. ரசிகர்கள் பரபரப்பு

ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டி

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை 1 - 2 என இழந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மான்செஸ்டர் நகரின் ஓல்ட் ட்ராபோர்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் இடம் பெறவில்லை. அவருக்கு பயிற்சியின் போது தலையில் காயம் ஏற்பட்டதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் மார்கஸ் ஸ்டோனிஸ் அணியில் இடம் பெற்றார்.

மோசமான துவக்கம்

மோசமான துவக்கம்

ஸ்டீவ் ஸ்மித் போன்ற முக்கிய பேட்ஸ்மேன் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் - ஆரோன் பின்ச் மொத்தமாக சேர்த்து 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

ஆஸி. தடுமாற்றம்

ஆஸி. தடுமாற்றம்

வார்னர் 6, ஆரோன் பின்ச் 16 ரன்கள் மட்டுமே எடுத்தனர். லாபுஷாக்னே 21 ரன்களில் வெளியேறினார். ஸ்டோனிஸ் 43 ரன்கள் சேர்த்தார். அலெக்ஸ் கேரி 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 23.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமாக காட்சி அளித்தது.

போராட்டம்

போராட்டம்

அதன் பின் மிட்செல் மார்ஷ் - கிளென் மேக்ஸ்வெல் இணைந்து அணியை கரை சேர்க்க போராடினர். மிட்செல் மார்ஷ் நிதான ஆட்டம் ஆடி விக்கெட்டை காப்பாற்றினார். மறுபுறம், மேக்ஸ்வெல் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடி பட்டையைக் கிளப்பினார்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

மேக்ஸ்வெல் 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். மார்ஷ் 100 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் 6வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் கம்மின்ஸ் 9, ஜாம்பா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சவாலான இலக்கு

சவாலான இலக்கு

கடைசி பந்தில் மிட்செல் ஸ்டார்க் ஒரு சிக்ஸ் அடித்தார். ஸ்டார்க் 19 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்தது. ஓல்ட் ட்ராபோர்டு மைதானத்தில் 286 ரன்கள் மட்டுமே அதிகபட்சமாக சேஸிங் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சொதப்பல்

இங்கிலாந்து சொதப்பல்

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து தவித்த போது இங்கிலாந்து அணிக்கு போட்டியில் நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால், அடுத்து விரைவாக விக்கெட் வீழ்த்தாமல் சொதப்பியது இங்கிலாந்து.

அசத்தல் ஜோடி

அசத்தல் ஜோடி

மிட்செல் மார்ஷ் - மேக்ஸ்வெல் ஜோடி போட்டியை ஆஸ்திரேலியா வசம் எடுத்துச் சென்று சிறப்பாக ஆடினர். இங்கிலாந்து அணியின் ஐந்து பந்துவீச்சாளர்களும் 10 ஓவர்களில் 54 முதல் 59 ரன்களுக்குள் மட்டுமே கொடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அதில் ரஷித் 2, கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சில் தடுமாறியது.

Story first published: Saturday, September 12, 2020, 10:37 [IST]
Other articles published on Sep 12, 2020
English summary
ENG vs AUS : Australia’s Mitchell Marsh - Glenn Maxwell given a record target for England in first ODI. Australia scored 294 in 50 overs, after lost 5 wickets for 123 runs in 23.4 overs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X