ஸ்டீவ் ஸ்மித்தையே தூக்கிட்டாங்களா? வேறு வழியில்லாமல் ஆஸி. எடுத்த முடிவு.. ரசிகர்கள் பரபரப்பு

மான்செஸ்டர் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலிய அணியின் இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் அவர் நீக்கப்பட்டார்? என கேள்வி எழுப்பி வந்தனர்.

ஸ்டீவ் ஸ்மித் போட்டிக்கு முந்தைய தினம் தலையில் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலக சாதனை.. வரலாற்றில் இடம் பிடித்த இங்கிலாந்து - ஆஸி முதல் ஒருநாள் போட்டி!

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடர் மான்செஸ்டரில் துவங்கியது. டி20 தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் தீவிரமாக செயல்பட்டு தொடரை வெல்ல முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் துவங்கியது. ஆஸ்திரேலிய அணி முழு பலத்துடன் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் அணியை அறிவித்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

ஸ்மித் தலையில் காயம்

ஸ்மித் தலையில் காயம்

ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. அதனால், ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித் ஏன் இடம் பெறவில்லை என கேள்வி எழுப்பி வந்தனர். அவருக்கு பயிற்சியின் போது தலையில் காயம் ஏற்பட்டதாக பின்னர் தகவல் வெளியானது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

முதல் ஒருநாள் போட்டிக்கு முந்தைய தினம் இரவு ஸ்டீவ் ஸ்மித் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பயிற்சி உதவியாளர் ஒருவர் பந்தை வீசும் போது அது ஸ்டீவ் ஸ்மித் தலையில் தாக்கி உள்ளது. இதை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் மருத்துவ பரிசோதனையில் இருக்கிறார்.

மூளை அழற்சி

மூளை அழற்சி

தலையில் காயம் ஏற்பட்டால் மூளை அழற்சி ஏற்பட்டுள்ளதா? என பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற ஐசிசி விதிமுறையின் படி அவர் முன்னெச்சரிக்கையாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை.

ஸ்டீவ் ஸ்மித் நீக்கம்

ஸ்டீவ் ஸ்மித் நீக்கம்

வேறு வழியின்றி ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தை நீக்கி விட்டு, மார்க்ஸ் ஸ்டோனிஸ்-ஐ அணியில் தேர்வு செய்தது. முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் தான் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளாரா? அல்லது மொத்த தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆஸி. பேட்டிங் பரிதாபம்

ஆஸி. பேட்டிங் பரிதாபம்

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் சுமாராகவே அமைந்தது. வார்னர் 6, ஆரோன் பின்ச் 16, ஸ்டோனிஸ் 43, மார்கஸ் லாபுஷாக்னே 21, அலெக்ஸ் கேரி 10 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

ஸ்டீவ் ஸ்மித் இழப்பு

ஸ்டீவ் ஸ்மித் இழப்பு

35 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து இருந்தது. மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் பேட்டிங் செய்து வந்தனர். ஸ்டீவ் ஸ்மித் இல்லாதது ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கிற்கு பெரும் இழப்பாகவே அமைந்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ENG vs AUS : Steve Smith dropped from Australian team for the first ODI
Story first published: Friday, September 11, 2020, 21:02 [IST]
Other articles published on Sep 11, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X