For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு ஒன்னும் இது புதுசு இல்ல... பண்ட்-க்காக பேட்டிங் ஆர்டர் மாற்றம்....அசால்டாக கையாளும் ஸ்ரேயாஸ்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை பண்ட்-க்கு கொடுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து ஸ்ரேயாஸ் கூறியுள்ள பாராட்டப்பட்டு வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் அடுத்தடுத்து சரிந்தது. மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டத்தில் இந்திய அணி சுமாரான ஸ்கோரை எட்டியது.

சி.எஸ்.கேவுக்கு இந்த 3 அணிதான் டஃப் கொடுக்குமாம்...அப்படி என்ன பலம் இருக்கு... முழு விவரம் இதோ சி.எஸ்.கேவுக்கு இந்த 3 அணிதான் டஃப் கொடுக்குமாம்...அப்படி என்ன பலம் இருக்கு... முழு விவரம் இதோ

இந்நிலையில் தன்னை 5வது விக்கெட்டிற்கு களமிறக்கியது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ள வார்த்தைகள் முன்னாள் வீரர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

மோசம்

மோசம்

5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா இல்லை. ஓப்பனிங் இறங்கிய தவான் - ராகுல் ஜோடி வந்த வேகத்தில் வெளியேறின. பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலியும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

ஆர்டர் மாற்றம்

ஆர்டர் மாற்றம்

2வது விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டால் அணி மீளும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக ரிஷப் பண்ட் 2வது விக்கெட்டிற்கு களமிறங்கினார். எனினும் அவர் சோபிக்கவில்லை. இதனால் இக்கட்டான சூழலில் 3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்ரேயாஷ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தால் அணியை மீட்டார். 48 பந்துகளில் 67 ரன்களை அடித்த ஸ்ரேயாஸ் இந்திய அணி 124 என்ற டீசண்டான ஸ்கோருக்கு அழைத்துச்சென்றார். பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விளக்கம்

விளக்கம்

தன்னை 3வது விக்கெட்டிற்கு களமிறக்கியது குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணிக்காக ஆடும் போது நாம் எந்த இடத்திலும் இரங்க தயாராக இருக்க வேண்டும். நான் ஆட்டத்தின் போது எனது பேட்டிங்கில் எந்த மாற்றமும் செய்யவில்லை. சிறப்பான ஆட்டத்திற்கு மனநிலை தான் காரணம். அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது அதற்கு ஏற்றார் பேட்டிங் செய்தேன் என தெரிவித்துள்ளார்.

முன் அனுபவம்

முன் அனுபவம்

இதுபோன்ற சூழ்நிலைகள் மிகவும் சவாலான ஒன்று. இது எனக்கு புதிதல்ல. ஐபிஎல் தொடரில் ஏற்கனவே கையாண்டுள்ளேன். அந்த சூழ்நிலையில் நான் அதிகப்படியான பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். ஏனென்றால் பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் உருவானால் அது பவுலர்களுக்கு தலைவலி கொடுக்கும். அந்தவகையில் இங்கிலாந்து பவுலர்கள் நேற்று சிறப்பாக பந்துவீசி பார்ட்னர்ஷிப்களை உடைத்தனர் என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, March 13, 2021, 10:23 [IST]
Other articles published on Mar 13, 2021
English summary
Shreyas Iyer opens up on change in his batting position
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X