For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரால் தான் தப்பு பண்ணிட்டேன், இல்லனா... திடீரென கழட்டிவிட்ட அஸ்வின்... அதிர்ச்சியடைந்த ரிஷப் பண்ட்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறப்பாக ஆடிய நிலையில் பண்ட் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 -1 எனக் கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

 சூப்பர் சுந்தர்.... 4 ஓவர்கள்ல 2 விக்கெட்டை வீழ்த்தி அதிரடி சூப்பர் சுந்தர்.... 4 ஓவர்கள்ல 2 விக்கெட்டை வீழ்த்தி அதிரடி

இந்நிலையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என அஸ்வின் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்

டெஸ்ட்

டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர் ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தியதன் மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். ஆஸ்திரேலிய தொடர் முதலே அவரின் கீப்பிங்கும் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு கீப்பராக ரிஷப் பண்ட் தனக்கு நிறைய இடங்களில் உதவவில்லை என அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏன்?

ஏன்?

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஸ்வின் 32 விக்கெட்களை எடுத்து அசத்தினார். எனினும் தொடரில் அவரின் டி.ஆர்.எஸ் கோரிக்கைகள் அதிகமுறை தோல்வியில் முடிந்தது. அவரும் விராட் கோலியும் எல்.பி.டபில்யூ அவுட்டிற்காக கேட்கப்பட்ட ரிவ்யூக்கள் தவறாக போனது. இந்நிலையில் அதற்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பல முறை சரியான பதிலை சொல்லவில்லை என தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இதுகுறித்து பேசியுள்ள அஸ்வின். இங்கிலாந்து டெஸ்டுக்கு முன்னர் வரை எனது டி.ஆர்.எஸ் கோரிக்கை மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த தொடரில் ரிஷப் பண்ட்-ன் முடிவு எனக்கு பின்னடைவை தந்தது. எனக்கு பந்து லைனுக்குள் சென்றதா இல்லையா என கணிக்க முடியும். ஆனால் விக்கெட் கீப்பர் தெரிவிப்பது பெரிய உதவியாகும். அந்த விஷயத்தில் பண்ட் சரியாக ஒத்துழைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இனி கவனிக்கிறேன்

இனி கவனிக்கிறேன்

பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் என் அருகில் அமர்ந்து ரிவியூவ் குறித்து அதிருப்தி தெரிவித்தார். இனி எனக்கு விளையாட்டில் ஒரு முன்னேற்றம் வேண்டுமென்றால் அது டி.ஆர்.எஸ்-ல் சரியாக கணிப்பதாக தான் இருக்கும். இனி நானே முழுமையாக ரிவியூவில் சரியாக கவனிக்கப்போகிறேன் என தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 16, 2021, 12:53 [IST]
Other articles published on Mar 16, 2021
English summary
Ashwin on the Wicket keeper Rishab's poor DRS calls
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X