For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூர்யகுமார் யாதவ் என்னதான் செஞ்சாலும்.பாண்டியாவுக்கு தனியாக குவியும் பாராட்டு. அப்படி என்ன செய்தார்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ஹர்த்திக் பாண்டியா முக்கியமான கட்டத்தில் அணிக்கு உதவி செய்து மீண்டும் தனது ஃபார்மை உறுதி செய்துள்ளார்.

Recommended Video

ஆரம்பத்தில் இருந்தே அதிரடி.. Suryakumar yadhav வேற லெவல் ஆட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 2 -2 என சமநிலையில் உள்ளது.

4 போட்டிகளில் 3 டக்-அவுட்... மீண்டும் பார்மிற்கு திரும்புவாரா ராகுல்? 4 போட்டிகளில் 3 டக்-அவுட்... மீண்டும் பார்மிற்கு திரும்புவாரா ராகுல்?

இந்நிலையில் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த நிலையில் ஹர்த்திக் பாண்டியா அணிக்கு பெரும் உதவி செய்தார்.

இந்திய அணி

இந்திய அணி

முதல் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஒரு புறம் முன்னணி வீரர்களின் விக்கெட்கள் சரிந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். பின்னர் ரிஷப் பண்ட் , ஸ்ரேயாஸ் ஆகியோர் ரன் சேர்க்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. இங்கிலாந்த் அணியின் பேட்டிங் வரிசை மிக பலமாக இருந்ததால், இந்திய அணி பந்துவீச்சில் கடும் போராட்டம் நிகழ்த்த வேண்டியிருந்தது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அடுத்தடுத்து 3 விக்கெட்கள் வீழ்ந்தாலும், தொடக்க வீரர் ஜேசன் ராய் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். இதனால் இந்திய அணியின் பவுலர்களுக்கு ப்ரஷர் ஏறியது. ஆனால் ஹர்த்திக் பாண்டியா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அசால்டாக சமாளித்தார். இந்திய அணியை அச்சுறுத்தி வந்த ராய்-ஐ 40 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். மொத்தம் 4 ஓவர்களை வீசிய அவர் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.

ஃபார்முக்கு திரும்பிய பாண்டியா

ஃபார்முக்கு திரும்பிய பாண்டியா

கடந்த ஓராண்டுக்கும் மேலாக காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹர்த்திக் பாண்டியா, ஐபிஎல் போட்டி மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்தார். ஆனால் ஐபிஎல்-ல் பெரிதா பந்துவீசவில்லை. பின்னர் ஆஸ்திரேலிய தொடரிலும், இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும் அவரால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படமுடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவரின் பழைய ஆட்டத்தை ரசிகர்கள் மீண்டும் கண்டனர்.

சேவாக் புகழாரம்

சேவாக் புகழாரம்

இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள முன்னாள் வீரர் சேவாக், 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், 186 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து ஆடிய போது ஹர்த்திக் பாண்டியா, ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசியுள்ளார். நேற்றைய போட்டியில் அவரிடம் மிகப்பெரும் மாற்றம் தெரிந்தது. வாழ்த்துக்கள் பாண்டியா என தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, March 19, 2021, 18:50 [IST]
Other articles published on Mar 19, 2021
English summary
Sehwag praises Hardik pandya for massive performance in 4th t20
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X