41 பந்தில் 82 ரன்.. ஈவு இரக்கமே இல்லாமல் மரண அடி அடித்த இங்கிலாந்து வீரர்!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் எளிய சேஸிங்கில் பவுண்டரி மழை பொழிந்தார்.

41 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இரண்டு மடங்கு வேகத்தில் ரன் குவித்தார். தன் அதிரடி ஆட்டம் மூலம் சாதனைகளையும் செய்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராகிவரும் ஆர்சிபி.. கேப்டன் விராட் கோலி புகைப்படம் வெளியீடு

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே இங்கிலாந்து அணி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடிய அந்த அணி அடுத்து, அயர்லாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் மோதியது.

ஒருநாள் தொடரில் வாய்ப்பு

ஒருநாள் தொடரில் வாய்ப்பு

டெஸ்ட் தொடரில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் அவர் விக்கெட் கீப்பராக இடம் பெற்றார். பேட்டிங்கில் துவக்க வீரராக களமிறங்கினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

முதலில் ஆடிய அயர்லாந்து அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஜேசன் ராய் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆனால், பேர்ஸ்டோ போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டார்.

பவுண்டரி மழை

பவுண்டரி மழை

அதிரடி ஆட்டம் ஆடிய பேர்ஸ்டோ பவுண்டரி மழை பொழிந்தார். 14 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து மிரட்டினார். அவரது அதிரடியால் இங்கிலாந்து அணி 16வது ஓவர் முடிவில் 131 ரன்களை எட்டி இருந்தது. எளிய இலக்கு என்றாலும் மின்னல் வேகத்தில் சேஸிங்கைத் துவக்கி வைத்தார்.

அதிவேக அரைசதம்

அதிவேக அரைசதம்

41 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஜோஷுவா லிட்டில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 21 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்தார். அதன் மூலம், அதிவேக ஒருநாள் போட்டி அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் இயான் மார்கனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார்.

3000 ரன்கள்

3000 ரன்கள்

மேலும், இந்தப் போட்டியில் அவர் 3000 ஒருநாள் போட்டி ரன்களையும் கடந்தார். குறைந்த இன்னிங்க்ஸ்களில் 3000 ஒருநாள் போட்டி ரன்களை கடந்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் உடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

பேர்ஸ்டோ ஆட்டமிழந்த உடன் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து இயான் மார்கன், மொயீன் அலியை இழந்தது. அவர்கள் இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் சாம் பில்லிங்க்ஸ், டேவிட்வில்லியின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக 16 ஓவரில் இங்கிலாந்து அணியை 131 ரன்கள் எட்டச் செய்ததாலேயே அந்த அணி விக்கெட் வீழ்ச்சிக்குப் பின்னும் ரன் ரேட் அழுத்தம் இல்லாமல் சேஸிங் செய்து வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதும் பேர்ஸ்டோவுக்குத் தான் கிடைத்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ENG vs IRE : Jonny Bairstow hit 41 ball 82 runs against vulnerable Ireland. He hit 14 fours and 2 sixes. He also became joint fastest half century for England in ODI’s.
Story first published: Sunday, August 2, 2020, 12:19 [IST]
Other articles published on Aug 2, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X