For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது என்னடா சாம்பியன் அணிக்கு வந்த சோதனை.. ஒப்புக்கு சப்பாணி பேட்ஸ்மேனால் தப்பித்த இங்கிலாந்து மானம்!

லண்டன் : அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணியின் மானத்தை காப்பாற்றி உள்ளார் ஜாக் லீச் என்ற வீரர்.

இங்கிலாந்து - அயர்லாந்து இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக மாறிக் கொண்டு இருக்கிறது.

ஆம், ஜூன் 14 அன்று 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியை டெஸ்ட் போட்டியில் புரட்டி எடுத்து வருகிறது கத்துக்குட்டி அயர்லாந்து அணி.

நீங்க சொல்றது தப்பு கங்குலி.. அது சரியா வராது.. சச்சின் நண்பர் போட்ட அந்த ட்வீட்! நீங்க சொல்றது தப்பு கங்குலி.. அது சரியா வராது.. சச்சின் நண்பர் போட்ட அந்த ட்வீட்!

முதல் இன்னிங்க்ஸ் மோசம்

முதல் இன்னிங்க்ஸ் மோசம்

முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. அதிகபட்சமாக டென்லி 23 ரன்கள் எடுத்து இருந்தார். அயர்லாந்தின் டிம் முர்டாக் 5 விக்கெட்கள் சாய்த்து அசத்தி இருந்தார்.

அயர்லாந்து ஆட்டம் எப்படி?

அயர்லாந்து ஆட்டம் எப்படி?

அடுத்து பேட்டிங் செய்த அயர்லாந்து அணி ஓரளவு தாக்குப் பிடித்து ஆடியது. பால்பிர்னி 55, ஸ்டிர்லிங் 36, கெவின் ஓ பிரையன் 28 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், 207 ரன்கள் எடுத்தது அயர்லாந்து.

நைட் வாட்ச்மேன்

நைட் வாட்ச்மேன்

122 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸ்-ஐ துவக்கியது இங்கிலாந்து. முதல் நாள் போட்டியில் கடைசி ஒரு ஓவர் மட்டுமே மீதம் இருந்ததால், முக்கிய விக்கெட்டை இழந்து விடாமல் இருக்க, நைட் வாட்ச்மேனாக ஜாக் லீச்சை அனுப்பினர். மறுமுனையில் துவக்க வீரர் பர்ன்ஸ் நிற்க, முதல் நாளின் கடைசி ஓவரை வெற்றிகரமாக எதிர் கொண்டார் ஜாக் லீச்.

ராய் அசத்தல்

ராய் அசத்தல்

பர்ன்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, லீச்சுடன் இணைந்தார் ஜேசன் ராய். அவர் அசத்தலாக ஆடி அரைசதம் கடந்தார். 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் ராய். ஜாக் லீச் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினாலும், அவ்வவ்போது ஃபோர் அடித்துக் கொண்டே வந்தார்.

லீச் அபார ஆட்டம்

லீச் அபார ஆட்டம்

நீண்ட நேரம் களத்தில் நின்ற ஜாக் லீச் ஒப்புக்கு சப்பாணியாக, நைட் வாட்ச்மேனாக அனுப்பட்டு இருந்தாலும், கிடைத்த வாய்ப்பில் அசத்தினார். அரைசதம் கடந்து 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ராய், லீச் சென்ற பின் இங்கிலாந்து அணி சரியத் துவங்கியது.

மானம் காத்தார்

மானம் காத்தார்

172 ரன்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்து 303 ரன்களுக்கு 9 விக்கெட்கள் என்ற நிலையை அடைந்து போராடி வருகிறது இங்கிலாந்து. இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் எடுத்த 72 ரன்களை தவிர எந்த பேட்ஸ்மேனும் 40 ரன்களை தாண்டவில்லை, ஒப்புக்கு சப்பாணியாக துவக்க வீரராக அனுப்பப்பட்ட ஜாக் லீச் 92 ரன்கள் எடுத்து சாம்பியன் அணியின் மானத்தை காப்பாற்றி உள்ளார்.

Story first published: Thursday, July 25, 2019, 23:07 [IST]
Other articles published on Jul 25, 2019
English summary
ENG vs IRE Test : Jack Leach saved another England humiliation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X