For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயோ பாவம்.. பாகிஸ்தானை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து! எவ்ளோ ரன் அடிச்சாலும் ஜெயிக்க முடியலையே!

Recommended Video

ENG vs PAK 3rd ODI | 358 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்!.. எளிதாக வென்ற இங்கிலாந்து- வீடியோ

பிரிஸ்டல் : பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த இரு அணிகளிடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பெரிய இலக்கை நிர்ணயித்தும் எந்த பயனும் இல்லாமல் போனது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், பாகிஸ்தான் அணியை விரட்டி, விரட்டி ரன் குவித்தனர்.

பாகிஸ்தான் எத்தனை ரன்கள் குவித்தது? இங்கிலாந்து எப்படி அதை எளிதாக சேஸ் செய்தது?

உலக கோப்பையில் எந்த டீமும் எப்படி வேணாலும் விளையாடும்..! கவனம் தேவை.. எச்சரிக்கும் இந்திய இளம்வீரர்

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

எப்போதும் டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்யும் இங்கிலாந்து அணி உலகக்கோப்பைக்கு முன் ஒரு சேஸிங் பயிற்சியாக இருக்கட்டுமே என டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.

இமாம் உல் ஹக் சதம்

இமாம் உல் ஹக் சதம்

அந்த அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக், சிறப்பாக ஆடி 151 ரன்கள் குவித்தார். ஹாரிஸ் சோஹைல் 41, ஆசிப் அலி 52 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழந்து 50 ஓவர்களில் 358 ரன்கள் குவித்தது.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

பெரிய இலக்கு என்பதால் எப்படியும் இங்கிலாந்து சேஸிங்கில் தடுமாற வாய்ப்பு உள்ளது என பலரும் எண்ணிய நிலையில், அந்த அணிக்கு அதிரடி துவக்கம் அளித்தது ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ ஜோடி.

மலைக்க வைத்த ரன் ரேட்

மலைக்க வைத்த ரன் ரேட்

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ, இந்தப் போட்டியிலும் அதிரடி காட்டினார். அவருடன் ஆடிய ஜேசன் ராய்-உம் சளைக்காமல் அதிரடியாக ஆடி 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் வெளியேறும் போது 17.3 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. ரன் ரேட் எட்டு ரன்களை ஒட்டி இருந்தது.

சதம்

சதம்

அடுத்து பேர்ஸ்டோ சதம் அடித்து 128 ரன்களிலும், ஜோ ரூட் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரன் ரேட் டி20 போட்டியைப் போல 7, 8-ஐ ஒட்டியே இருந்தது. அதை கெடுக்க விரும்பாத கேப்டன் இயான் மார்கன் தனக்கு முன்னே அதிரடி ஆட்டக்காரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலியை இறக்கி விட்டார்.

அதிரடி வெற்றி

அதிரடி வெற்றி

பென் ஸ்டோக்ஸ் 37 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர் மொயீன் அலி, இயான் மார்கன் 45வது ஓவரில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 400 ரன்கள் இலக்கு நிர்ணயித்தாலும், இங்கிலாந்து அணி அதை வென்று விடும் என்ற அளவுக்கு அதிரடி காட்டியது இங்கிலாந்து.

பாகிஸ்தான் பாவம்

பாகிஸ்தான் பாவம்

358 ரன்கள் குவித்து விட்டோம் என மகிழ்ச்சியாக இருந்த பாகிஸ்தான் அணி, ஜேசன் ராய் - பேர்ஸ்டோ அதிரடியில் நிம்மதியை இழந்தது. அதன் பின், எந்த இடத்திலும் பாகிஸ்தான் அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

இங்கிலாந்து முன்னிலை

இங்கிலாந்து முன்னிலை

இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில், இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன.

Story first published: Wednesday, May 15, 2019, 11:24 [IST]
Other articles published on May 15, 2019
English summary
ENG vs PAK 3rd ODI Match Result - England dominate Pakistan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X