யப்பா சாமி ஒரு வழியா தப்பிச்சுட்டேன்.. தோல்வியை நோக்கி டீம்.. ஆனாலும் எஸ்கேப் ஆன பாக். கேப்டன்!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

IPL ஏலத்தில் Dhoni- ஐ கேட்ட Mumbai Indians.. விட்டுக்கொடுக்காத CSK

எனினும், பாகிஸ்தான் கேப்டன் தன் கேப்டன்சியை காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் அசார் அலி மோசமாக ஆடி இருந்தார்.

600 விக்கெட் எடுக்காம விட மாட்டேன்.. புலியாக சீறிப் பாய்ந்த ஆண்டர்சன்.. துவம்சம் ஆன பாகிஸ்தான்!

சதம்

சதம்

இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அதன் மூலம், கேப்டன்சியையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை இழந்தாலும் அசார் அலி தப்பித்து விடுவார்.

அசார் அலி நிலை

அசார் அலி நிலை

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு அருகே சென்று தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களில் அசார் அலி டக் அவுட் மற்றும் 18 ரன்கள் எடுத்து இருந்தார்.

பாகிஸ்தான் தோல்வி

பாகிஸ்தான் தோல்வி

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் ஆடி 20 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் முடிவில் 0 - 1 என் தொடரில் பின்தங்கி இருந்தது. தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால் மூன்றாவது போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.

விமர்சனம் எழுந்தது

விமர்சனம் எழுந்தது

அதே போல, கேப்டன் அசார் அலி மீதும் விமர்சனம் எழுந்தது. அவரது தனிப்பட்ட ஆட்டமும் சரியாக இல்லாததால் அவரை அணியை விட்டே நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் குரல் எழுப்பி இருந்தனர். மூன்றாவது டெஸ்ட் துவங்கும் முன் கூட அசார் அலி இது பற்றி வெளிப்படையாகவே பேசினார்.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 583 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 30 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது கேப்டன் அசார் அலி மட்டுமே நம்பிக்கை அளித்தார்.

ரிஸ்வான் அரைசதம்

ரிஸ்வான் அரைசதம்

ஐந்தாவது விக்கெட்டாக பாவாத் ஆலமும் வெளியேறினார். முகமது ரிஸ்வான், அசார் அலிக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. ரிஸ்வான் அரைசதம் அடித்த நிலையில் 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அசார் அலி சதம்

அசார் அலி சதம்

அசார் அலி சிறப்பாக ஆடி சதம் கடந்தார். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்து கொண்டே இருந்தாலும் அசார் அலி தூணாக நின்று நிதானமாக ரன் சேர்த்து வந்தார். அவர் 141 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 273 ரன்கள் எடுத்தது.

ஃபாலோ ஆன்

ஃபாலோ ஆன்

இங்கிலாந்து அணியை விட 310 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இருந்தது. இந்த நிலையில், இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் அளித்து பாகிஸ்தான் அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது. போட்டியின் கடைசி நாள் அன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இங்கிலாந்து ஃபாலோ ஆன் அளித்தது.

அசார் அலி நிம்மதி

அசார் அலி நிம்மதி

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி எப்படியும் தோல்வி அடையும். மழை வந்து போட்டி டிரா ஆனால் கூட பாகிஸ்தான் அணி தொடரை இழக்கும். பாகிஸ்தான் அணி மீது விமர்சனம் எழும். எனினும், அசார் அலி தன் கேப்டன்சி மற்றும் அணியில் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் நிம்மதி அடைந்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
ENG vs PAK : Azhar Ali hit century in third test against England. He also saved his captaincy with this century. As Pakistan trailing 0 - 1 in 3 match test series, Azhar Ali at least able to save his captaincy.
Story first published: Monday, August 24, 2020, 0:09 [IST]
Other articles published on Aug 24, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X