அடுத்த விராட் கோலின்னு பில்டப் பண்ணதெல்லாம் வேஸ்டாப் போச்சே.. ஒரே ஓவரில் பாக் வீரர் அவுட்!

சௌதாம்ப்டன் : பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே அவுட் ஆகி வெளியேறினார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் அன்று சிறப்பாக ஆடி ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார் பாபர் ஆசாம். ஆனால், இரண்டாம் நாள் வந்த உடன் ஆட்டமிழந்தார்.

ஜடேஜாகிட்ட மன்னிப்பு கேட்க ரெடி.. வேலை போனதால் கெஞ்சிய முன்னாள் வீரர்.. ஈவு இரக்கமே காட்டாத பிசிசிஐ

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி சௌதாம்ப்டன் நகரில் புதன் அன்று துவங்கியது. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் அபித் அலி 16, கேப்டன் அசார் அலி டக் அவுட் ஆகி வெளியேறினர். அப்போது ஜோடி சேர்ந்த துவக்க வீரர் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் பொறுப்பாக ஆடி அணியை மீட்டனர். முதல் நாள் அன்று போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஆசாம் 69

ஆசாம் 69

வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் அன்று போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் குவித்து இருந்தது. மசூத் 46, பாபர் ஆசாம் 69 ரன்கள் எடுத்து இருந்தனர்.

பாராட்டு

பாராட்டு

பாபர் ஆசாம் இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்து 100 பந்துகளில் 69 ரன்கள் குவித்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலர் அவரை பாராட்டி பேசினர். ரசிகர்கள் சிலர் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசி இருந்தனர்.

அவுட் ஆனார்

அவுட் ஆனார்

இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாபர் ஆசாம் பெரிய அளவில் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இரண்டாம் நாளின் முதல் ஓவரிலேயே கூடுதலாக ஒரு ரன் கூட சேர்க்காமல், 69 ரன்கள் எடுத்ததோடு ஆண்டர்சன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷான் மசூத் நிதானம்

ஷான் மசூத் நிதானம்

அதன் பின் ஆசாத் ஷபிக் 7, முகமது ரிஸ்வான் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். துவக்க வீரர் ஷான் மசூத் நிதான ஆட்டம் ஆடி 225 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார். பின்வரிசை வீரர் ஷதாப் கான் 1 ரன்னுடன் களத்தில் இருக்கிறார்.

பாகிஸ்தான் ஸ்கோர்

பாகிஸ்தான் ஸ்கோர்

பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 75 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் இழந்து இருந்தது. இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் 1, பிராடு 1, வோக்ஸ் 2, ஜோப்ரா ஆர்ச்சர் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ENG vs PAK : Babar Azam got out without scoring a run in 2nd day of the first test. Pakistan struggling to cross 200 runs as wickets fallen quickly.
Story first published: Thursday, August 6, 2020, 19:46 [IST]
Other articles published on Aug 6, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X