8 விக்கெட் தான் இருக்கு.. தோல்வி பயமே இல்லாமல் இங்கிலாந்திடம் கெத்து காட்டும் பாக்.. காரணம் இதுதான்!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஃபாலோ ஆன் பெற்று இரண்டாம் இன்னிங்க்ஸில் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் ஆடி வருகிறது.

Eng vs Pak 3rd Test Day 4 | Rain forces early stumps

இன்னும் 8 விக்கெட் வீழ்ந்தால் பாகிஸ்தான் அணி தோற்று விடும். எனினும், அந்த அணி நம்பிக்கையுடன் காட்சி அளித்தது.

ஆதிக்கம் செலுத்தினாலும் இங்கிலாந்து அணி கடும் அழுத்தத்தில் உள்ளது.

தோனி மாதிரி ஒரு ஜாம்பவானை இப்படியா நடத்துவீங்க? ரொம்ப கஷ்டமா இருக்கு.. சரமாரியாக விளாசிய பாக். வீரர்

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணி மூன்றாவது டெஸ்டை வென்றால் தொடரை சமன் செய்யலாம்.

கூடுதல் புள்ளிகள்

கூடுதல் புள்ளிகள்

அதே சமயம், இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை 2 - 0 என வெல்லவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கூடுதல் புள்ளிகள் பெறவும் முயன்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இங்கிலாந்து ஸ்கோர்

இங்கிலாந்து ஸ்கோர்

ஜாக் கிரவ்லி 267, ஜோஸ் பட்லர் 152 ரன்கள் குவிக்கவே அந்த அணி 583 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் ஆடியது. அந்த அணியின் கேப்டன் அசார் அலி 141*, முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தனர்.

பாலோ ஆன்

பாலோ ஆன்

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 273 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை விட 310 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில், பாலோ ஆன் பெற்றது. இங்கிலாந்து அணி பாலோ ஆன் கொடுக்க ஒரு முக்கிய காரணம் இருந்தது.

மழை வரும்

மழை வரும்

இந்த டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் மழை வரும் என வானிலை அறிக்கை கூறுகிறது. எனவே, ஐந்தாம் நாள் வரை போட்டியை இழுக்காமல், சீக்கிரம் முடிக்க இங்கிலாந்து அணி முயற்சி செய்கிறது. அதனாலேயே, பாகிஸ்தான் அணிக்கு பாலோ ஆன் கொடுத்தது.

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் ரன் குவிக்க முற்படவில்லை. மாறாக, எப்படியும் போட்டியின் இடையே மழை பெய்யும் என்பதால் பந்துகளை வீணடித்து, விக்கெட்டை காப்பாற்றி வந்தது. நான்காம் நாளின் பாதி ஓவர்கள் மழையால் தடைபட்டது.

பந்துகளை வீணடித்த வீரர்கள்

பந்துகளை வீணடித்த வீரர்கள்

ஷான் மசூத் 66 பந்துகளில் 18, அபித் அலி 162 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினர். அடுத்து அசார் அலி 92 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தும், பாபர் ஆசாம் 16 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர். பாகிஸ்தான் அணி நான்காம் நாள் முடிவில் 56 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் இழந்து இருந்தது.

வெற்றி கேள்விக் குறி

வெற்றி கேள்விக் குறி

நான்காம் நாளில் 14 ஓவர்கள் மீதமிருக்கையில் மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. ஐந்தாம் நாளும் மழை பெய்யும் என்பதால் இங்கிலாந்து அணியின் வெற்றி கேள்விக் குறியாகி உள்ளது. எனினும், ஐந்தாம் நாள் சில ஓவர்கள் போட்டி நடந்தாலும் பாகிஸ்தான் அணிக்கு அது பெரிய கண்டம் தான்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
ENG vs PAK : England vs Pakistan 3rd test day 4 match update
Story first published: Tuesday, August 25, 2020, 0:33 [IST]
Other articles published on Aug 25, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X