விழுந்துட்டோம்.. ஆனா மீசையில மண் ஒட்டலை.. ரணகளத்திலும் பாக். ஜாலி.. நொந்து போன இங்கிலாந்து!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

ENG vs PAK 3rd Test, Rain-ruined draw; England claim series | Oneindia Tamil

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது.

எனினும், மழையால் தோல்வியில் இருந்து தப்பியது பாகிஸ்தான் அணி. அந்த அணி டெஸ்ட் தொடரை இழந்தாலும் இரண்டு போட்டிகளில் மழையால் தோல்வியை தவிர்த்து மகிழ்ச்சியுடன் தொடரை முடித்தது.

உடைந்தது கால்பந்தாட்டத்தின் புகழ்பெற்ற கூட்டணி... பார்சிலோனாவில் இருந்து விலகும் மெஸ்ஸி

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு அருகே இருந்தது. முதல் நான்கு நாட்கள் அந்த அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தது.

பாகிஸ்தான் தோல்வி

பாகிஸ்தான் தோல்வி

எனினும், இரண்டாவது இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணியின் விக்கெட்களை விரைவாக வீழ்த்தாமல் சொதப்பி போட்டியில் தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு டிரா ஆனது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்டில் வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற நிலையில் பாகிஸ்தான் இருந்தது.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஜாக் கிரவ்லி 267 ரன்கள் குவித்து தன் முதல் சதத்தை இரட்டை சதமாக்கி சாதனை செய்தார். ஜோஸ் பட்லர் அவருடன் கூட்டணி அமைத்து 152 ரன்கள் குவித்தார். வோக்ஸ் 40 ரன்கள் எடுத்தார்.

583 ரன்கள்

583 ரன்கள்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 583 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் இழந்த நிலையில் டிக்ளர் செய்தது. அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பலரும் ரன் குவிக்கத் திணறி ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் அசார் அலி கை கொடுத்தார்.

அசார் அலி சதம்

அசார் அலி சதம்

அசார் அலி 141, முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் அணி 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி பாலோ ஆன் அளித்தது. மழையால் போட்டி ஐந்தாவது நாளில் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தே இங்கிலாந்து அணி பாலோ ஆன் அளித்தது.

மழையால் பாதிப்பு

மழையால் பாதிப்பு

ஆனாலும், மழையால் நான்காம் நாள் மற்றும் ஐந்தாம் நாள் போட்டி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதை பயன்படுத்திய பாகிஸ்தான் அணி பந்துகளை வீணடித்து, விக்கெட்களை காப்பாற்றும் பணியில் இறங்கியது. முதல் மூன்று பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் 30க்கும் கீழே இருந்தது.

போட்டி டிரா

போட்டி டிரா

பாபர் ஆசாம் மட்டுமே ரன் குவித்தார். அவர் 91 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இருந்தார். மழையின் காரணமாக ஐந்தாம் நாள் மிகச் சில ஓவர்களே வீசப்பட்டன. அத்துடன் போட்டி முடிவுக்கு வந்தது. தோல்வி அடைய வேண்டிய போட்டியை மழையை வைத்து டிரா செய்தது பாகிஸ்தான் அணி.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இங்கிலாந்து அணி இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தி இருந்தும் மழையால் அந்தப் போட்டிகள் டிரா ஆனதால் நொந்து போனது. எனினும், முதல் போட்டி வெற்றியால் அந்த அணி டெஸ்ட் தொடரை 1 - 0 என வென்றது.

ஆண்டர்சன் சாதனை

ஆண்டர்சன் சாதனை

இங்கிலாந்து அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி சாதனை செய்தார். அது மட்டுமே அந்த அணிக்கு கிடைத்த நல்ல செய்தி. வேகப் பந்துவீச்சாளர்களில் முதன் முறையாக 600 டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரர் ஆண்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் அணி தொடரை இழந்தாலும், இரண்டு போட்டிகளை டிரா செய்ததுடன் திருப்தி அடைந்தது. முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்தாலும் மழையால் டிரா ஆன போட்டிகளை கணக்குக் காட்டி தப்பித்துக் கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
ENG vs PAK : England vs Pakistan 3rd test match result - Pakistan drawn the third test with the help of Rain and feeling better despite losing the series 0 - 1 to England.
Story first published: Wednesday, August 26, 2020, 11:39 [IST]
Other articles published on Aug 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X