600 விக்கெட் எடுக்காம விட மாட்டேன்.. புலியாக சீறிப் பாய்ந்த ஆண்டர்சன்.. துவம்சம் ஆன பாகிஸ்தான்!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 டெஸ்ட் விக்கெட் எனும் மைல்கல்லை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறார்.

பாகிஸ்தான் அணியுடன் ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விக்கெட் வேட்டை நடத்துவதை பார்த்தால், இந்த போட்டியிலேயே தன் இலக்கை அடைந்தே தீருவது என அவர் முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது.

அவரா இப்படி? 8 பந்தில் 1 ரன் கூட அடிக்கலை.. ரசிகர்கள் ஏமாற்றம் அதிரடி மன்னனுக்கு நேர்ந்த கதி!

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஆண்டர்சனுக்கு கடைசி போட்டியாகவும் இருக்கலாம்.

இங்கிலாந்து கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே இங்கிலாந்து அணி வரிசையாக கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகிறது. முதலில் வெஸ்ட் இண்டீஸ், தற்போது பாகிஸ்தான் அணிகளுடன் அந்த அணி டெஸ்ட் தொடரில் ஆடி உள்ளது. அடுத்த டெஸ்ட் தொடர் இந்தியாவுடன் அடுத்த ஆண்டு நடை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வரலாம்

கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வரலாம்

ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு அப்போது எப்படி இருக்கும் என தெரியாது. மேலும், ஆண்டர்சனை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல இங்கிலாந்து அணி நிர்வாகம் விரும்பாது. எனவே, இந்த தொடருடன் தன் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வரலாம் என்பதை அறிந்தே இருக்கிறார் ஆண்டர்சன்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்..

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்..

கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆண்டர்சன் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 1 விக்கெட்டும், பாதியில் டிரா ஆன இரண்டாவது டெஸ்டில் 3 விக்கெட்களும் மட்டுமே எடுத்தார்.

புலியாக சீறிப் பாய்ந்தார்

புலியாக சீறிப் பாய்ந்தார்

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 593 விக்கெட்கள் எடுத்து இருந்தார் ஆண்டர்சன். இன்னும் 7 விக்கெட்கள் எடுத்தால் 600 விக்கெட் என்ற மைல்கல்லை அடையலாம் என்ற நிலையில் அவர் இந்த டெஸ்டில் புலியாக சீறிப் பாய்ந்தார்.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 583 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து இருந்த போது டிக்ளர் செய்தது. அடுத்து இரண்டாம் நாள் முடிவில் ஆடிய பாகிஸ்தான் அணி ஆண்டர்சன் வேகத்தில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

597 விக்கெட்கள்

597 விக்கெட்கள்

மூன்றாம் நாள் மழையால் சிறிது நேரம் போட்டி தடைபட்டது. உணவு இடைவேளைக்கு முன் நான்காவது விக்கெட்டையும் சாய்த்தார் ஆண்டர்சன். இத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 597 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இன்னும் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினால் அவரது இலக்கை அடைந்து விடலாம்.

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் நிலை

ஆண்டர்சன் வேகத்தில் விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக பெஸ் சுழற் பந்துவீச்சில் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. கேப்டன் அசார் அலி அரைசதம் அடித்து அணியை மீட்க போராடி வருகிறார். பாகிஸ்தான் அணி 58 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. அசார் அலி 78, ரிஸ்வான் 21 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
ENG vs PAK : James Anderson moving towards 600 wickets. In the meantime, Pakistan loses 4 erly wickets in the third test and struggling to survive.
Story first published: Sunday, August 23, 2020, 21:01 [IST]
Other articles published on Aug 23, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X