For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது.. திருப்பி அடித்த இங்கிலாந்து பவுலர்கள்.. பப்படமான பாகிஸ்தான்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே ஆன முதல் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது.

ஆனால், இரண்டாவது இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையை பதம் பார்த்து அனுப்பியது இங்கிலாந்து பவுலிங்.

மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 137 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்துள்ளது.

2021 டி20 உலகக்கோப்பை உரிமை இந்தியாவுக்கு.. மகளிர் உலகக்கோப்பை தள்ளி வைப்பு.. பரபர மாற்றங்கள்!2021 டி20 உலகக்கோப்பை உரிமை இந்தியாவுக்கு.. மகளிர் உலகக்கோப்பை தள்ளி வைப்பு.. பரபர மாற்றங்கள்!

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் அணி 326 ரன்கள் குவித்தது. ஷான் மசூத் 156, பாபர் ஆசாம் 69, ஷதாப் கான் 45 ரன்கள் எடுத்தனர். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. நம்பிக்கை நாயகன் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

ஓல்லி போப் 62, பட்லர் 38 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஓரளவு ரன் சேர்க்க உதவினர். எனினும், தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தன. கடைசி நேரத்தில் பிராடு 29 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணி 200 ரன்களை கடக்க காரணமாக இருந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 219 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் முன்னிலை

பாகிஸ்தான் முன்னிலை

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் அணி 200 - 250 ரன்கள் எடுத்தால் கூட இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக இருந்தது இரண்டாவது இன்னிங்க்ஸ்.

இங்கிலாந்து அதிரடி பவுலிங்

இங்கிலாந்து அதிரடி பவுலிங்

முதல் இன்னிங்க்ஸில் ஷான் மசூத், பாபர் ஆசாம் விக்கெட்டை வீழ்த்த திணறிய இங்கிலாந்து பவுலர்கள் இந்த முறை அதிரடி காட்டினர். ஷான் மசூத் ஸ்டூவர்ட் பிராடு பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அபித் அலி 20, அசார் அலி 18 ரன்களில் வெளியேறினர்.

பாகிஸ்தான் விக்கெட் வீழ்ச்சி

பாகிஸ்தான் விக்கெட் வீழ்ச்சி

முதல் இன்னிங்க்ஸில் 69 ரன்கள் எடுத்த பாபர் ஆசாம் 5 ரன்கள் மட்டுமே எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆசாத் ஷபிக் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். முகமது ரிஸ்வான் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

138 ரன்கள்

138 ரன்கள்

ஷதாப் கான் 15, ஷஹீன் ஷா அப்ரிடி 2 ரன்களில் வெளியேறினர். பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. யாசிர் ஷா 12 ரன்களுடனும், முகமது அப்பாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து நிலை

இங்கிலாந்து நிலை

இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமுள்ளது. பாகிஸ்தான் அணி தற்போது 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி மீதமுள்ள 2 விக்கெட்களை அதிக ரன்கள் சேர்க்கும் முன் வீழ்த்தினால், 300 ரன்களுக்கும் குறைவான இலக்கை சேஸிங் செய்து வெல்ல வாய்ப்பு உள்ளது.

வீறு கொண்டு எழுந்த இங்கிலாந்து

வீறு கொண்டு எழுந்த இங்கிலாந்து

முதல் இன்னிங்க்ஸில் தடுமாறிய இங்கிலாந்து பவுலர்கள் இரண்டாம் இன்னிங்க்ஸில் வீறு கொண்டு எழுந்தனர். பிராடு 2, வோக்ஸ் 2, பென் ஸ்டோக்ஸ் 2, டொமினிக் பெஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இரண்டாவது இன்னிங்க்ஸில் 30 ரன்களை தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 8, 2020, 11:44 [IST]
Other articles published on Aug 8, 2020
English summary
ENG vs PAK : Pakistan struggling in second innings as England bowlers took the mantle. Broad, Woakes, Stokes took 2 wickets each.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X