For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஈஸியான மேட்ச்.. கோட்டை விட்ட பாகிஸ்தான்.. தோல்விக்கு காரணம் இதுதான்.. விமர்சகர்கள் விளாசல்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் வெற்றிக்கு மிக அருகே வந்து பின் தோல்வி அடைந்தது.

Recommended Video

ENG VS PAK 1ST TEST: 'ஷூ' தூக்கிட்டு வந்த முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது

பாகிஸ்தான் அணி கையில் கிடைத்த வெற்றியை கோட்டை விட்டதை அடுத்து விமர்சகர்கள் அதற்கான காரணத்தை கூறி விளாசி உள்ளனர்.

பந்துவீச்சில் அனைத்து சாதகமான அம்சங்கள் இருந்தும் பாகிஸ்தான் அணி சறுக்கியது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷான் மசூத் 156 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 326 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் தடுமாறியது.

இரண்டாவது இன்னிங்க்ஸ்

இரண்டாவது இன்னிங்க்ஸ்

இங்கிலாந்து அணி 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் சுதாரித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சில் அசத்தியது. பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து சரிவு

இங்கிலாந்து சரிவு

இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை சேஸிங் செய்யும் போது இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் மட்டுமே கையில் இருக்க வெற்றிக்கு 160 ரன்கள் தேவை என்ற மோசமான நிலையில் இருந்தது.

பட்லர் - வோக்ஸ் ஜோடி

பட்லர் - வோக்ஸ் ஜோடி

அப்போது பட்லர் - வோக்ஸ் ஜோடி பாகிஸ்தான் அணியை திணற வைத்து வெற்றி பெற்றனர். பாகிஸ்தான் அணிக்கு இந்தப் போட்டியில் பல சாதகமான அம்சங்கள் இருந்தன. பட்லர் - வோக்ஸ் ஆட்டத்திற்கு முன்பு வரை அந்த அணியில் கைகளில் தான் வெற்றி இருந்தது.

ஆடுகளம் சாதகம்

ஆடுகளம் சாதகம்

விமர்சகர்கள் இந்த தோல்வி பற்றி கூறுகையில், ஆடுகளத்தை குறிப்பிட்டனர். முதல் டெஸ்ட் நடந்த ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சிறப்பாக ஒத்துழைத்தது. சுழற் பந்துவீச்சும் எடுபட்டது. பாகிஸ்தான் அணி இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு இருந்தாலும், பெரும்பாலும் யாசிர் ஷாவை மட்டுமே பயன்படுத்தியது. அவரும் ஒவ்வொரு இன்னின்க்ஸிலும் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சு

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சு

வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் ஆடுகளம் ஒத்துழைத்தது. இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்க்ஸில் தடுமாறி, இரண்டாம் இன்னிங்க்ஸில் சுதாரித்தனர். ஆனால், பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்க்ஸில் சிறப்பாக செயல்பட்டனர்.

பாகிஸ்தான் கைகளில் போட்டி

பாகிஸ்தான் கைகளில் போட்டி

இரண்டாம் இன்னிங்க்ஸிலும் துவக்கத்தில் அச்சுறுத்தினர். மறுபுறம் யாசிர் ஷா விக்கெட் வீழ்த்தினார். ஆனால், ஜோஸ் பட்லர் - கிறிஸ் வோக்ஸ் ஜோடியை அவர்களால் பிரிக்க முடியவில்லை. பட்லர் - வோக்ஸ் ஆடத் துவங்கிய போது போட்டி முழுவதுமாக பாகிஸ்தான் கைகளில் இருந்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

தங்கள் விக்கெட் வீழ்ந்தால் தோல்வி தான் என்பது பட்லர் - வோக்ஸ் இருவருக்கும் தெரியும். அந்த நிலையில் அவர்கள் தடுப்பாட்டம் ஆடி இருக்க வேண்டும். ஆனால், பட்லர் 20 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். வோக்ஸ் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

அனுபவமின்மை, அழுத்தம்

அனுபவமின்மை, அழுத்தம்

இந்த அதிரடி ஆட்டத்தை எதிர்பாராத பாகிஸ்தான் அணியின் அனுபவம் குறைந்த வேகப் பந்துவீச்சாளர்கள் கடும் அழுத்தத்துக்கு உள்ளானார்கள். அதுவே பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். அந்த ஒரு இடத்தில் மட்டும் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு பட்லர் - வோக்ஸ் விக்கெட்டை மட்டும் விரைவாக வீழ்த்தி இருந்தாலும் வெற்றி பெற்று இருக்கலாம்.

முன்னாள் வீரர்கள் விமர்சனம்

முன்னாள் வீரர்கள் விமர்சனம்

இதை குறிப்பிட்டு தான் விமர்சகர்கள் பாகிஸ்தான் அணியை விளாசி வருகின்றனர். முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி, இது போன்ற வாய்ப்புகளை பாகிஸ்தான் வீணடிக்கக் கூடாது என கூறி உள்ளார். மற்றொரு முன்னாள் வீரர் முகமது யூசுப் தலையில் அடித்துக் கொள்ளும் ஈமோஜியை மட்டும் போட்டு குத்திக் காட்டி உள்ளார்.

Story first published: Sunday, August 9, 2020, 11:20 [IST]
Other articles published on Aug 9, 2020
English summary
ENG vs PAK : Inexperienced bowlers and pressure situation after Buttler - Woakes fired up batting for the first few deliveries are the reasons for Pakistan loss in first test against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X