செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. “டொக்கு” வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே ஆன முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் ஷான் மசூத் நிதான ஆட்டம் ஆடி சதம் அடித்தார்.

CPL 2020ல் அதிக ரன் குவித்த 5 வீரர்கள்!

அதன் மூலம் இங்கிலாந்து டெஸ்டில் 24 ஆண்டுகள் கழித்து சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை செய்தார் மசூத்.

அவரது சதத்தால் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த முடியாமல் தடுமாறியது.

அடுத்த விராட் கோலின்னு பில்டப் பண்ணதெல்லாம் வேஸ்டாப் போச்சே.. ஒரே ஓவரில் பாக் வீரர் அவுட்!

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் மான்செஸ்டர் நகரில் துவங்கியது. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி பலம் குறைந்த அணியாகவே காட்சி அளித்தது.

பாகிஸ்தான் தடுமாற்றம்

பாகிஸ்தான் தடுமாற்றம்

இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராடு, வோக்ஸ் போன்ற அனுபவ வீரர்கள் இருந்ததால் அந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. துவக்கத்தில் 43 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது பாகிஸ்தான் அணி.

பாபர் ஆசாம் அவுட்

பாபர் ஆசாம் அவுட்

அதன் பின் துவக்க வீரர் ஷான் மசூத், பாபர் ஆசாம் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். பாபர் ஆசாம் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இரண்டு பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி 176 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

251 பந்துகளில் சதம்

251 பந்துகளில் சதம்

அடுத்து ஷதாப் கான் உடன் இணைந்து கூட்டணி அமைத்த ஷான் மசூத் தன் நிதான ஆட்டத்தை தொடர்ந்தார். 251 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். இந்த ஆட்டம் மூலம் மசூத் இங்கிலாந்து மண்ணில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இங்கிலாந்து மண்ணில்..

இங்கிலாந்து மண்ணில்..

இங்கிலாந்து மண்ணில் 1996க்கு பின் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கும் முதல் பாகிஸ்தான் துவக்க வீரர் ஷான் மசூத் தான். அவருக்கு முன்னதாக சயீத் அன்வர் 1996இல் சதம் அடித்து 176 ரன்கள் குவித்து இருந்தார். மேலும், இங்கிலாந்து மண்ணில் சதம் அடிக்கும் ஐந்தாவது பாகிஸ்தான் துவக்க வீரரும் மசூத் தான்.

மூன்று டெஸ்ட் சதம்

மூன்று டெஸ்ட் சதம்

மேலும், பாகிஸ்தான் அணிக்காக தொடர்ந்து மூன்று டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆறாம் இடம் பெற்றார். இதே பட்டியலில் இடம் பெற்ற இரண்டாவது பாகிஸ்தான் துவக்க வீரர் ஷான் மசூத். இது மட்டுமின்றி மற்றொரு சாதனையையும் செய்துள்ளார்.

200 பந்துகளுக்கும் மேல்..

200 பந்துகளுக்கும் மேல்..

சயீத் அன்வருக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 200 பந்துகளுக்கும் மேல் சந்தித்த முதல் துவக்க வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார் ஷான் மசூத். அவரது நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ENG vs PAK : Shan Masood hit century and breaks multiple records in England soil after Saeed Anwar in 1996.
Story first published: Thursday, August 6, 2020, 21:04 [IST]
Other articles published on Aug 6, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X