முடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க? டபுள் செஞ்சுரி அடித்து மாஸ் காட்டிய 22 வயது இளம் வீரர்!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஸாக் கிரவ்லி இரட்டை சதம் அடித்து பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்தார்.

பல சாதனைகளையும் முறியடித்துள்ள இந்த 22 வயது இளம் வீரர், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தன் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கிரவ்லியுடன் இணைந்து சிறப்பாக ஆடிய ஜோஸ் பட்லர் சதம் கடந்தார். இவர்கள் ஜோடியாகவும் சாதனைகளை முறியடித்தனர்.

திருடிவிட்டாய்.. ஆமா ஒத்துக்குறேன்.. ஐபிஎல்-லுக்கு போகும் முன் வருங்கால மனைவியுடன் ஒரே ரொமான்ஸ்!

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

நிரந்தர இடம் கிடைக்குமா?

நிரந்தர இடம் கிடைக்குமா?

துவக்க வீரர் பர்ன்ஸ் 5வது ஓவரில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்த போது களத்துக்கு வந்தார் ஸாக் கிரவ்லி. இவர் டெஸ்ட் அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். இரண்டாவது டெஸ்டில் அரைசதம் அடித்து அணியில் நிரந்தர இடம் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் இருந்தார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

இந்த நிலையில், இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் வந்த பின் இங்கிலாந்து அணி வரிசையாக விக்கெட்களை இழந்து வந்தது. ஸிப்லி 22, கேப்டன் ஜோ ரூட் 29, ஓல்லி போப் 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதன் பின் ஜோஸ் பட்லருடன் இணைந்தார் கிரவ்லி.

சதம்

சதம்

இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன் பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் குவித்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கிரவ்லி சதம் அடித்தும் (171), ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தும் (87) களத்தில் இருந்தனர்.

இடம் கிடைக்கும்

இடம் கிடைக்கும்

கிரவ்லி தன் முதல் டெஸ்ட் சதம் அடித்து நம்பிக்கையுடன் இருந்தார். அப்போதே அணியில் தன் இடம் இன்னும் சில போட்டிகளுக்காவது நிரந்தரம் என்ற மகிழ்ச்சியில் இருந்தார். இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இந்த ஜோடி அபாரமாக ஆடியது.

267 ரன்கள்

267 ரன்கள்

ஜோஸ் பட்லர் சதம் கடந்தார். கிரவ்லி இரட்டை சதம் கடந்து அபார சாதனை செய்தார். சிறப்பாக ஆடிய அவர் 267 ரன்கள் எடுத்து ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். தன் முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய கிரவ்லி பல்வேறு சாதனைகளை செய்தார்.

மிக இளம் வயதில்..

மிக இளம் வயதில்..

மிக இளம் வயதில் இங்கிலாந்து அணிக்காக இரட்டை சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 22 வருடம் 201 நாட்களுடன் மூன்றாவது இடம் பெற்றார். அதே குறைந்த இன்னிங்க்ஸ்களில் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 12 இன்னிங்க்ஸ்களுடன் நான்காம் இடம் பெற்றார்.

மிகப் பெரிய முதல் சதம்

மிகப் பெரிய முதல் சதம்

இங்கிலாந்து அணிக்காக மிகப் பெரிய முதல் சதத்தை அடித்த வீரர்கள் பட்டியலில் 267 ரன்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார். இதே பட்டியலில் 287 ரன்களுடன் போஸ்டர் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து ஸ்டம்பிங் ஆனவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

சாதனை ஜோடி

சாதனை ஜோடி

ஜோஸ் பட்லர் - ஸாக் கிரவ்லி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 359 ரன்கள் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை பெற்றது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
ENG vs PAK : Zak Crawley hit maiden double century and confirm his place in the England test team. Jos Buttler scored a ton and supported him.
Story first published: Saturday, August 22, 2020, 22:45 [IST]
Other articles published on Aug 22, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X