For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

30 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட் காலி.. சரண்டர் ஆன இங்கிலாந்து.. வெ.இண்டீஸ் கையில் கிளைமாக்ஸ்!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் மீண்டு ஆடி வந்தது.

Recommended Video

ENG VS WI 1ST TEST | Stuart Broad frustated over Ben Stokes

எனினும், நான்காம் நாளின் கடைசி நேரத்தில் விக்கெட்களை விரைவாக இழந்து சரண் அடைந்தது.

நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 284 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் இழந்து உள்ளது. ஐந்தாம் நாள் போட்டியின் முடிவு நிர்ணயிக்கப்பட உள்ளது.

இரண்டு வாரம் ஹோட்டல்லயே இருந்தா, இந்திய வீரர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாயிடுவாங்கஇரண்டு வாரம் ஹோட்டல்லயே இருந்தா, இந்திய வீரர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாயிடுவாங்க

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவே இந்த கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் சமூக இடைவெளியுடன் நடந்து வருகிறது.

மழையால் பாதிப்பு

மழையால் பாதிப்பு

முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. எனவே, இந்தப் போட்டி ரசிகர்கள் பார்வையில் நான்கு நாள் ஆட்டமாக மாறியது. போட்டியின் இரண்டாம் நாள் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அசத்தல் பந்துவீச்சு

அசத்தல் பந்துவீச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் அசத்தியது. கேப்ரியல் 4, ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்கள் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் சிறப்பாக ரன் குவித்தது. பிராத்வைட் 64, டவ்ரிச் 61, சேஸ் 47 ரன்கள் எடுத்தனர்.

முதல் இன்னிங்க்ஸ் முன்னிலை

முதல் இன்னிங்க்ஸ் முன்னிலை

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் 318 ரன்கள் குவித்தது. 114 ரன்கள் முன்னிலை பெற்றது அந்த அணி. இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் குறைந்தது 350 ரன்களை எட்டினால் வெற்றி பெற அதிக வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

அதை நோக்கியே அந்த அணியின் பேட்டிங் அமைந்தது. பர்ன்ஸ் 42, சிப்லி 50, டென்லி 29, கிரவ்ளி 76, பென் ஸ்டோக்ஸ் 46 ரன்கள் எடுத்தனர். 249 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இங்கிலாந்து அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடி வந்தது. 135 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

அப்போது விக்கெட்கள் இருந்ததால் இங்கிலாந்து அணி 250 ரன்களுக்கும் அதிகமாக இலக்கு நிர்ணயம் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய பந்து மாற்றியவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்கள் வீழ்த்தத் துவங்கியது.

மோசமான நிலை

மோசமான நிலை

279 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து அணி. கூடுதலாக 30 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு வந்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 284 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து இருந்தது.

என்ன செய்யும் வெ.இண்டீஸ்?

என்ன செய்யும் வெ.இண்டீஸ்?

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி விரைவாக இரு விக்கெட்களை வீழ்த்தி, 200 ரன்களுக்கும் குறைவாக இலக்கு பெற்றால், வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதே சமயம், ஐந்தாம் நாள் பேட்டிங் செய்வது கடினமான காரியம்.

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விக்கெட் இழக்காமல் பேட்டிங் ஆடினால் இந்தப் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கையில் தான் போட்டியின் கிளைமாக்ஸ் உள்ளது. இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க மழை மட்டுமே உதவ முடியும்.

Story first published: Sunday, July 12, 2020, 13:22 [IST]
Other articles published on Jul 12, 2020
English summary
ENG vs WI 1st test : England struggling against West Indies in second innings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X