For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து அணி தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஐ விளாசிய விமர்சகர்கள்!

இங்கிலாந்து அணி தோல்விக்கு காரணம் இதுதான்.. பென் ஸ்டோக்ஸ்-ஐ விளாசிய விமர்சகர்கள்!

Recommended Video

Eng vs WI 1st test | Reasons for England loss

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்த தொடர் துவங்கும் முன் அனைவரும் வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் 0 - 3 என படுதோல்வி அடையும் என்றே கணித்து இருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டிகளில் சராசரியாகவே ஆடி இருந்தது. ஒரீரு முக்கிய வெற்றிகள் கூட அதிர்ஷ்டம் என்றே கருதப்பட்டது.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

மழையால் முதல் டெஸ்ட் தாமதமாக துவங்கியது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டது. எனவே, இந்தப் போட்டி நான்கு நாள் டெஸ்ட் போட்டியாக கருதப்பட்டது.

வெ.இண்டீஸ் ஆதிக்கம்

வெ.இண்டீஸ் ஆதிக்கம்

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்க்ஸில் இருந்தே ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. இங்கிலாந்து அணியை 204 ரன்களுக்குள் சுருட்டியது. அடுத்து முதல் இன்னிங்க்ஸில் 318 ரன்கள் குவித்த அந்த அணி 114 ரன்கள் முன்னிலை பெற்றது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இரண்டாம் இன்னிங்க்ஸில் சுதாரித்த இங்கிலாந்து அணி 313 ரன்கள் எடுத்து 200 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சேஸிங் செய்த போது துவக்கத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற கடைசி வாய்ப்பு அமைந்தது.

தோல்விக்கு என்ன காரணம்?

தோல்விக்கு என்ன காரணம்?

எனினும், அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த தவறியது இங்கிலாந்து அணி. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளாக்வுட் 95 ரன்கள் குவிக்க, அந்த அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கடந்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெறும் இரண்டாவது டெஸ்ட் வெற்றி இது. இங்கிலாந்து அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

பென் ஸ்டோக்ஸ் தான் காரணம்

பென் ஸ்டோக்ஸ் தான் காரணம்

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்படுபவர் அணியின் கேப்டனாக செயல்பட்ட பென் ஸ்டோக்ஸ். அணித் தேர்வு, டாஸ் முடிவு, பீல்டிங் சொதப்பல் என அவரை சுற்றி மோசமான காரணங்கள் சூழ்ந்துள்ளது.

ஸ்டூவர்ட் பிராடு நீக்கம்

ஸ்டூவர்ட் பிராடு நீக்கம்

முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அனுபவ பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு நீக்கப்பட்டார். அது பெரும் விமர்சனத்தை கிளப்பியது. 2021-22 ஆஷஸ் தொடரை மனதில் வைத்து மற்ற பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க இந்த முடிவை எடுத்ததாக ஸ்டோக்ஸ் கூறினாலும் அதை பலரும் ஏற்கவில்லை.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

போட்டிக்கு முன் மழை பெய்து இருந்த நிலையில் முதலில் பந்து வீசுவதே சரியான முடிவாக இருந்திருக்கும். எனினும், பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கை கொடுக்காத இருவர்

கை கொடுக்காத இருவர்

ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகிய இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே பிராடு நீக்கப்பட்டார். இவர்கள் இருவரும் முதல் இன்னிங்க்ஸில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆர்ச்சர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்கள் வீழ்த்தினாலும் அது பலன் அளிக்கவில்லை.

கேட்ச் வாய்ப்புகள்

கேட்ச் வாய்ப்புகள்

மற்ற எல்லாவற்றையும் விட வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி நாளில் பேட்டிங் செய்து வந்த போது இங்கிலாந்து வீரர்கள் மூன்று கேட்ச்கள் மற்றும் ஒரு ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டனர். அதுவே இங்கிலாந்து அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

ஸ்டோக்ஸ் சொதப்பல்

ஸ்டோக்ஸ் சொதப்பல்

சிறந்த பீல்டராக பாராட்டப்படும் பென் ஸ்டோக்ஸ் முதல் ஸ்லிப்பில் எளிதான கேட்ச்சை தவற விட்டு அதிர்ச்சி அளித்தார். அது கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. 95 ரன்கள் எடுத்த பிளாக்வுட் 5 ரன்கள் எடுத்து இருந்த போது ஸ்டோக்ஸ் அந்த கேட்ச்சை தவறவிட்டு இருந்தார்.

தப்பித்த பென் ஸ்டோக்ஸ்

தப்பித்த பென் ஸ்டோக்ஸ்

பல வகைகளில் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் எடுத்த முடிவுகளும், செயல்பாடுகளும் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், அடுத்த டெஸ்ட் போட்டியில் இருந்து ஜோ ரூட் மீண்டும் கேப்டன் பதவியை ஏற்க உள்ளார். அதனால், பென் ஸ்டோக்ஸ் தலை தப்பித்துள்ளது.

Story first published: Monday, July 13, 2020, 13:20 [IST]
Other articles published on Jul 13, 2020
English summary
ENG vs WI 1st test : Here are the reasons for England loss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X