For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜெயிக்கலைனா சோலி முடிஞ்சுடும்.. இங்கிலாந்து போட்ட மாஸ்டர்பிளான்.. வெ.இண்டீஸ்-க்கு ஒரே சான்ஸ் தான்!

மான்செஸ்டர்: வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டாவது டெஸ்டில் வீழ்த்தினால் மட்டுமே டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதால் இங்கிலாந்து அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

Recommended Video

ENG vs WI , 2nd Test, Day 4 | England lead by 219 runs

ஐந்தாம் நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட்களை வீழ்த்தினால் மட்டுமே இங்கிலாந்து அணியால் வெற்றி பெற முடியும். இந்த நிலையில் தான் கேப்டன் ஜோ ரூட் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல்-ஆ? வேண்டவே வேண்டாம்.. தெறித்து ஓடும் பிசிசிஐ.. இதுதான் மேட்டர்.. கசிந்த ரகசியம்இந்தியாவில் ஐபிஎல்-ஆ? வேண்டவே வேண்டாம்.. தெறித்து ஓடும் பிசிசிஐ.. இதுதான் மேட்டர்.. கசிந்த ரகசியம்

வெ.இண்டீஸ் முன்னிலை

வெ.இண்டீஸ் முன்னிலை

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றது.

தொடர் வெற்றி?

தொடர் வெற்றி?

அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் தொடரை வெல்ல முடியும். ஒரு போட்டி டிரா ஆனாலும் கூட, தொடரை வெல்ல முடியாமல் போகும். இந்த நிலையில் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து ரன் குவிப்பு

இங்கிலாந்து ரன் குவிப்பு

இந்தப் போட்டியில் முதல் இரு நாட்கள் பேட்டிங் செய்து 469 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது.

வெ.இண்டீஸ் ஸ்கோர்

வெ.இண்டீஸ் ஸ்கோர்

நான்காம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 287 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது. நான்காம் நாள் ஆட்டத்தில் 8 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தன. இங்கிலாந்து அணி 182 ரன்கள் முன்னிலை பெற்றும் இருந்தது.

இங்கிலாந்து நிலை

இங்கிலாந்து நிலை

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 300 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அதிக ஓவர்கள் ஆட வைத்து 10 விக்கெட் வீழ்த்த முயற்சி செய்தால் இங்கிலாந்து வெல்ல ஓரளவு வாய்ப்பு உள்ளது. 300 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்க இன்னும் 120 ரன்கள் எடுக்க வேண்டும்.

ஆர்டர் மாற்றம்

ஆர்டர் மாற்றம்

இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் ஆர்டரை மொத்தமாக மாற்றினார். இரண்டாம் இன்னிங்க்ஸில் துவக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். இருவருமே அதிரடி வீரர்கள். வழக்கமாக இறங்கும் துவக்க வீரர்கள் ஸிப்லி, பர்ன்ஸ் மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டனர்.

பட்லர் டக் அவுட்

பட்லர் டக் அவுட்

இதில் பட்லர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து ஸாக் கிரவ்ளி களமிறங்கினார். அவர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோ ரூட் தான் வழக்கமாக இறங்கும் நான்காம் வரிசையில் இறங்கினார். இங்கிலாந்து அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.

டிரா செய்ய முயற்சிக்கும்

டிரா செய்ய முயற்சிக்கும்

விக்கெட்கள் போனாலும் 120 ரன்களை எடுக்க இங்கிலாந்து அதிரடியாக ஆடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டிரா செய்வது மட்டுமே ஒரே வாய்ப்பாக இருக்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

Story first published: Monday, July 20, 2020, 11:34 [IST]
Other articles published on Jul 20, 2020
English summary
ENG vs WI : England change batting order to score quick runs ahead of West Indies second innings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X