For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விக்கெட்டே எடுக்காமல் 50 ஓவர்.. பரிதாப வெ.இண்டீஸ் வீரர்.. இங்கிலாந்தை காப்பாற்றிய போப்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 258 ரன்கள் குவித்தது.

Recommended Video

Eng vs WI 3rd Day 1 : Pope and Buttler to the rescue

துவக்கத்தில் தடுமாறினாலும் நிதான ஆட்டம் ஆடி இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து மீண்டும் சொதப்பி உள்ளது.

வயசானாலும் திறமை குறையல... இந்திய அணியில தோனி மீண்டும் விளையாடுவாரு.. டீன் ஜோன்ஸ் வயசானாலும் திறமை குறையல... இந்திய அணியில தோனி மீண்டும் விளையாடுவாரு.. டீன் ஜோன்ஸ்

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் நிலை இருப்பதால் போட்டியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ஜேசன் ஹோல்டர் முடிவு

ஜேசன் ஹோல்டர் முடிவு

மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பந்துவீச்சை தேர்வு செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் துவக்கத்தில் தடுமாறியது. துவக்க வீரர் ஸிப்லி டக் அவுட் ஆனார். ஜோ ரூட் 17, பென் ஸ்டோக்ஸ் 2௦ ரன்களில் ஆட்டமிழந்தனர். இதை அடுத்து இங்கிலாந்து அணி 92 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது.

ரன் குவித்த வீரர்கள்

ரன் குவித்த வீரர்கள்

துவக்க வீரர் பர்ன்ஸ் 57 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் ஓல்லி போப் 91*, ஜோஸ் பட்லர் 56 ரன்கள் எடுத்து விக்கெட் வீழ்ச்சியை தடுத்து, ரன் குவித்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் இழந்து 258 ரன்கள் எடுத்து இருந்தது.

ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்

கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்காமல் விமர்சனத்துக்கு உள்ளான இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து தன் பார்மை நிரூபித்துள்ளார்.

கேப்ரியல் நிலை

கேப்ரியல் நிலை

மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் கேப்ரியல் தன் பார்மை இழந்து வருகிறார். முதல் டெஸ்டில் 9 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் அடுத்த இரு டெஸ்ட்களில் இதுவரை 50 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இரண்டாம் நாள் அந்த அணி 400 ரன்களை எட்ட முயலும். அப்படி நடந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அது பின்னடைவாக மாற வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, July 25, 2020, 14:10 [IST]
Other articles published on Jul 25, 2020
English summary
ENG vs WI : Gabriel gone wicketless for 50 overs after his match winning performance in the first test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X