For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம டெக்னிக்.. 114 ரன்.. இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்த 3 வெ.இண்டீஸ் வீரர்கள்!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் கத்தி முனையில் ஆடி வருகிறது.

Recommended Video

ENG VS WI 1ST TEST | Stuart Broad frustated over Ben Stokes

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்க்ஸில் 114 ரன்கள் முன்னிலை பெற்றது.

பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம் என்பதால் இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் ரன் குவித்தால் மட்டுமே தோல்வியை தவிர்க்க முடியும் என்ற நிலை உள்ளது.

 ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர்.. வெடித்த சர்ச்சை! ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர்.. வெடித்த சர்ச்சை!

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டம் பெரும் பகுதி மழையால் பாதிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி பேட்டிங்

இங்கிலாந்து அணி பேட்டிங்

இரண்டாம் நாள் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தட்டுத் தடுமாறியது. தொடர்ந்த இடைவெளிகளில் விக்கெட்களை இழக்கத் துவங்கியது. பென் ஸ்டோக்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெ.இண்டீஸ் ஆதிக்கம்

வெ.இண்டீஸ் ஆதிக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் அசத்தியது. கீமர் ரோச், ஜேசன் ஹோல்டர் கட்டுக் கோப்பாக பந்துவீசினர். ஹோல்டர் 6, கேப்ரியல் 4 விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடத் துவங்கியது.

பேட்டிங் எப்படி?

பேட்டிங் எப்படி?

வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை தாண்டாது என்றே பொதுவாக கருதப்பட்டது. ஆனால், துவக்க வீரர் பிராத்வைட் நிதான ஆட்டம் ஆடி ரன் சேர்த்தார். பிராத்வைட் 65, ப்ரூக்ஸ் 39, ராஸ்டன் சேஸ் 47, டவ்ரிச் 61 ரன்கள் குவித்தனர்.

டெக்னிக்

டெக்னிக்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடி டெஸ்ட் போட்டிகளில் விரைவாக விக்கெட்களை இழப்பார்கள். ஆனால், இந்தப் போட்டியில் வேறு டெக்னிக் பயன்படுத்தினர். பிராத்வைட் பந்தை அருகே வரும் வரை காத்திருந்து ஆடினார். அதே டெக்னிக்கை மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் அவர் கூற, சேஸ், டவ்ரிச் சிறப்பாக ஆடினர்.

வெ.இண்டீஸ் முன்னிலை

வெ.இண்டீஸ் முன்னிலை

இந்த மூன்று பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்க்ஸில் 114 ரன்கள் முன்னிலை பெற்றது. பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் முதல் இன்னிங்க்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளதால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

எதிர்பார்க்காத இங்கிலாந்து

எதிர்பார்க்காத இங்கிலாந்து

வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைத்து எடை போட்ட இங்கிலாந்து அணி பின்னடைவுடன் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை துவங்கி உள்ளது. இந்த சூழ்நிலையை இங்கிலாந்து அணி எதிர்பார்க்கவில்லை. இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, July 11, 2020, 13:18 [IST]
Other articles published on Jul 11, 2020
English summary
ENG vs WI : How West Indies scored more than England in first test? Brathwaite leads the pack with his playing late technique.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X