For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகின் நம்பர் 1 ஆல்-ரவுண்டர் இவர்தான்.. சச்சின் சொன்னதை நிரூபித்துக் காட்டிய வெ.இண்டீஸ் கேப்டன்!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் டெஸ்டில் தன் பந்துவீச்சில் மிரட்டினார் ஜேசன் ஹோல்டர்.

Recommended Video

Eng VS WI 1st Test Day 2 | England All out For 204

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் ஆன ஜேசன் ஹோல்டர், டெஸ்ட் அரங்கில் சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வருகிறார்.

எனினும், அவருக்கு உரிய புகழ், பெயர் அவருக்கு கிடைக்கவில்லை. அதை சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக் காட்டி இருந்தார்.

 டெஸ்ட் போட்டி ரொம்ப பாதிக்கப்படுது... உங்க விதிமுறைகளை மாத்திக்கங்க ப்ளீஸ் டெஸ்ட் போட்டி ரொம்ப பாதிக்கப்படுது... உங்க விதிமுறைகளை மாத்திக்கங்க ப்ளீஸ்

திருப்பம்

திருப்பம்

இந்த நிலையில், ஜேசன் ஹோல்டர் தன் அதிரடி பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை நிலை குலைய வைத்தார். ஆறு விக்கெட்களை வீழ்த்திய அவர் டெஸ்ட் அரங்கில் தன் சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார். மேலும், டிஆர்எஸ் மூலம் மூன்று அம்பயர் முடிவுகளை மாற்றி தன் அணிக்கு திருப்பம் பெற்றுக் கொடுத்தார்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் தீவிர பாதிப்புக்கு நடுவே இந்த நடக்கும் முதல் கிரிக்கெட் தொடர் இதுதான்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் தோற்றார். இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் விக்கெட் வேட்டை நடத்தினார். ஷனான் கேப்ரியல் டாப் ஆர்டரை சரித்தார். இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

சிறந்த பந்துவீச்சு

சிறந்த பந்துவீச்சு

கேப்ரியல் 4, ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்களை வீழ்த்தினர். ஜேசன் ஹோல்டர் 42 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 204 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து இருந்தது.

மூன்று டிஆர்எஸ் முடிவுகள்

மூன்று டிஆர்எஸ் முடிவுகள்

ஜேசன் ஹோல்டர் ஆறு விக்கெட்கள் வீழ்த்தியது மட்டுமின்றி மூன்று டிஆர்எஸ் முடிவுகள் மூலம் அம்பயர் தீர்ப்புகளை மாற்றினார். அது தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் மூலம் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்தது.

சிறந்த ஆல் ரவுண்டர்

சிறந்த ஆல் ரவுண்டர்

சச்சின் டெண்டுல்கர் இந்த போட்டி துவங்கும் முன்பு ஜேசன் ஹோல்டர் பற்றி பேசிய போது அவர் தற்போது ஆடி வரும் வீரர்கள் சிறந்த ஆல் ரவுண்டர் என்றும், ஆனால், அதற்குரிய புகழ் அவருக்கு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

நிரூபித்துக் காட்டிய ஹோல்டர்

நிரூபித்துக் காட்டிய ஹோல்டர்

சச்சின் சொன்னதை நிரூபித்துக் காட்டி உள்ளார் ஜேசன் ஹோல்டர். அவர் தற்போது ஐசிசி டெஸ்ட் ஆல் - ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்க்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 57 ரன்கள் எடுத்து 1 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.

Story first published: Friday, July 10, 2020, 12:57 [IST]
Other articles published on Jul 10, 2020
English summary
ENG vs WI : Jason Holder picks 6 wickets and proves as best all rounder
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X