For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீக்கிரம் சானிடைஸ் பண்ணிக்கங்க.. வெ.இண்டீஸ் கேப்டன் செய்த காரியம்.. பதறி சமாளித்த பென் ஸ்டோக்ஸ்!

சௌதாம்ப்டன் : சுமார் 117 நாட்களுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் துவங்கியது.

Recommended Video

England and West Indies players kneel to support Black Lives Matter

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதின.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தப் போட்டியில் கடுமையான விதிகள் அமலில் இருந்தது.

இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் தொடர் : பிளாக் லைவ்ஸ் மேட்டருக்காக ஒருங்கிணைந்த அணிகள்இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் தொடர் : பிளாக் லைவ்ஸ் மேட்டருக்காக ஒருங்கிணைந்த அணிகள்

சமூக இடைவெளி விதி

சமூக இடைவெளி விதி

இந்த நிலையில், டாஸ் போட்ட பின் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் சமூக இடைவெளி விதியை மறந்து போய், இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு கை குலுக்க வந்தார். ஸ்டோக்ஸ் கையை லேசாக பிடித்தும் விட்டார். அதனால், பரபரப்பு எழுந்தது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டு இருந்தது. அனைத்து நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகளும் கடும் நஷ்டத்தை சந்தித்தன. இந்த நிலையில், இங்கிலாந்து அணி மீண்டும் கிரிக்கெட் தொடர்களை நடத்த முன் வந்தது.

முதல் தொடர்

முதல் தொடர்

மார்ச் 13க்குப் பின் ஜூலை 8 அன்று தான் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி துவங்கியது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் துவங்கியது.

கடும் விதிமுறைகள்

கடும் விதிமுறைகள்

இந்தப் போட்டி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடப்பதால் இரு அணி வீரர்களும் கடும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இருந்தது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், இரு அணி வீரர்களும் பல முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டனர்.

கை குலுக்கும் முறை

கை குலுக்கும் முறை

அதே போல, பயிற்சியிலும் வீரர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர். டாஸ் போடும் போது இரு அணியின் கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால், தற்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால் கை முட்டியை மடக்கி அதன் முனைகளை மட்டும் தொட்டுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

நீண்ட நேரமாக துவங்கவில்லை

நீண்ட நேரமாக துவங்கவில்லை

117 நாட்கள் கழித்து கிரிக்கெட் மீண்டும் துவங்குவதால் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டியைக் காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருந்தனர். ஆனால், போட்டி நீண்ட நேரமாக துவங்கவில்லை.

மழை

மழை

மழை காரணமாக டாஸ் போட முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக போட்டி துவங்கியது. டாஸ் போடும் நிகழ்வில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. மேட்ச் ரெப்ரீ, இரு அணி கேப்டன்கள் சில அடி இடைவெளி விட்டு நின்று கொண்டனர்.

ஹோல்டர் மறதி

ஹோல்டர் மறதி

மூவருக்கும் தனித் தனி மைக்குகள் கொடுக்கப்பட்டு இருந்தன. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்றார். உடன் அவரை வாழ்த்த வந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மறதியாக கை குலுக்க முயன்றார். பென் ஸ்டோக்ஸ் முட்டியை மடக்கி இருந்தார்.

சானிடைஸ் செய்து கொள்ள வேண்டும்

சானிடைஸ் செய்து கொள்ள வேண்டும்

எனினும், ஹோல்டர் அவர் கையை லேசாக தொட்டு விட்டார். அதைக் கண்ட பென் ஸ்டோக்ஸ் முதலில் அதிர்ந்தார். எனினும், பின்னர் ஹோல்டர் செய்த தவறை அடுத்து இருவரும் சிரித்தனர். பின்னர், பென் ஸ்டோக்ஸ் உடனடியாக கையை சானிடைஸ் செய்து கொள்ள வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார். ரசிகர்கள் இந்த நிகழ்வை ரசித்தனர்.

Story first published: Thursday, July 9, 2020, 15:03 [IST]
Other articles published on Jul 9, 2020
English summary
ENG vs WI : Jason Holder shakes hand with Ben Stokes forgetting social distancing norms
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X