For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காதலியை பார்க்க ஓடிய ஆர்ச்சர்.. இங்கிலாந்து திட்டத்தில் லாஜிக் ஓட்டை.. வெ.இண்டீஸ் ஜாம்பவான் விளாசல்

மான்செஸ்டர் : இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் கொரோனா வைரஸுக்கு நடுவே கடும் விதிமுறைகளுடன் நடக்கும் டெஸ்ட் தொடரின் இடையே விதிமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்.

அதனால், அவரை அணியை விட்டு நீக்கி, ஐந்து நாள் தனிமையில் வைத்துள்ளது இங்கிலாந்து அணி நிர்வாகம்.

ஆர்ச்சர் செய்த தவறை மட்டுமே பலரும் விமர்சித்து வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங், இங்கிலாந்து அணி நிர்வாகத்தையும் விளாசி இருக்கிறார்.

ஏன் மொத்த டீமையும் பஸ்ல கூட்டிட்டு போக முடியாதா? இங்கிலாந்தை வெளுத்த வெ.இண்டீஸ் ஜாம்பவான்!ஏன் மொத்த டீமையும் பஸ்ல கூட்டிட்டு போக முடியாதா? இங்கிலாந்தை வெளுத்த வெ.இண்டீஸ் ஜாம்பவான்!

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சுமார் நான்கு மாதங்கள் கழித்து நடக்கும் முதல் சர்வதேச தொடர் இதுதான். கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையில் இந்த தொடர் பாதுகாப்பாக நடந்து வருகிறது.

உயிர் பாதுகாப்பு சூழல்

உயிர் பாதுகாப்பு சூழல்

இங்கிலாந்து அரசிடம் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு சிறப்பு அனுமதி வாங்கி உள்ளது. கடும் விதிமுறைகளை பின்பற்ற இருப்பதாக கூறியே அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் அந்த விதிமுறைகளை பின்பற்றியே முதல் டெஸ்ட் போட்டியில் ஆடின.

ஆர்ச்சர் செய்த தவறு

ஆர்ச்சர் செய்த தவறு

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து வீரர்கள் தங்கள் கார்களில் மான்செஸ்டர் நகருக்கு தனித்தனியே பயணம் செய்தனர். அதில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டும் நடுவே 120 மைல் தள்ளி உள்ள தன் வீட்டுக்கு சென்று காதலியை பார்த்து விட்டு வந்ந்துள்ளார்.

நீக்கம்

நீக்கம்

இந்த தகவல் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க சில மணி நேரங்களுக்கு முன்பே இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக அவரை அணியில் இருந்து நீக்கிய நிர்வாகம், அவரை ஐந்து நாள் தனிமையில் வைத்துள்ளது.

இங்கிலாந்து அணி செய்த தவறு

இங்கிலாந்து அணி செய்த தவறு

ஜோப்ரா ஆர்ச்சர் இந்த தவறை செய்ய காரணமே, இங்கிலாந்து வீரர்கள் தனித்தனியே கார்களில் மான்செஸ்டர் செல்ல வேண்டும் என்ற இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பின் திட்டம் தான். இங்கிலாந்து வீரர்களை ஒன்று அல்லது இரண்டு பேருந்துகளில் எளிதாக அழைத்துச் சென்று இருக்க முடியும்.

ஹோல்டிங் விளாசல்

ஹோல்டிங் விளாசல்

அதைக் குறிப்பிட்டுத் தான் விளாசி இருக்கிறார் மைக்கேல் ஹோல்டிங். ஜோப்ரா ஆர்ச்சரையும் அவர் விட்டு வைக்கவில்லை. "எனக்கு பாவமாகவே தோன்றவில்லை. என்ன செய்ய வேண்டுமோ அதை ஏன் சிலருக்கு செய்ய முடியவில்லை என எனக்கு புரியவில்லை." என ஆர்ச்சரை வெளுத்தார்.

ஹோல்டிங் கேள்வி

ஹோல்டிங் கேள்வி

"நான் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பை சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். இந்த விதிமுறைகள் இருக்க வேண்டும் தான். ஆனால், அதில் கொஞ்சம் லாஜிக் இருக்க வேண்டும். இங்கிலாந்து அணி ஏன் ஒரு பேருந்தில் சென்று இருக்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார் ஹோல்டிங்.

ஏன் கார்?

ஏன் கார்?

"அவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா வைரஸ் பரிசோதனையை முடித்து விட்ட நிலையில், ஆறு போட்டிகளுக்கு ஒன்றாக ஆட வேண்டும் என்ற நிலையில், அவர்கள் அனைவரும் ஒன்றாக ஏன் பேருந்தில் சென்று இருக்கக் கூடாது? அவர்கள் காரில் செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டது? மக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்" என்றார் மைக்கேல் ஹோல்டிங்.

Story first published: Friday, July 17, 2020, 17:30 [IST]
Other articles published on Jul 17, 2020
English summary
ENG vs WI : Michael Holding questions ECB over Jofra Archer breach of coronavirus protocol
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X