For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒன்டே மேட்ச்சில் புலி.. டெஸ்டில் எலி.. வெ.இண்டீஸ் வீரருக்கு வார்னிங்.. இதுதான் கடைசி சான்ஸ்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன டெஸ்ட் தொடர் எதிர்பார்த்ததை விட அதிக திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

Recommended Video

ENG VS WI 2ND TEST | West Indies won the toss and elected to bowl.

இந்த டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் பார்முக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் படுமோசமாக ஆடி வருகிறார் ஹோப். இந்த தொடரில் அவர் ரன் குவிக்கவில்லை என்றால் இதுவே அவரது கடைசி டெஸ்ட் தொடராக அமையவும் வாய்ப்பு உள்ளது.

ரசிகர்கள் இல்லன்னா என்னப்பா சுவாரஸ்யம்... வேற எதுனா செய்யணும்... ஐஓசி தலைவர் ரசிகர்கள் இல்லன்னா என்னப்பா சுவாரஸ்யம்... வேற எதுனா செய்யணும்... ஐஓசி தலைவர்

வெ.இண்டீஸ் முன்னிலை

வெ.இண்டீஸ் முன்னிலை

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாம் டெஸ்ட்

இரண்டாம் டெஸ்ட்

இரண்டாவது டெஸ்ட் போட்டி வியாழன் அன்று மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றால் தொடரை கைப்பற்ற முடியும். 1988க்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெ.இண்டீஸ் வீரர் ஹோப்

வெ.இண்டீஸ் வீரர் ஹோப்

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கான திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த அணியின் ஷாய் ஹோப் தான் மோசமான நிலையில் இருக்கிறார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது

ஒருநாள் போட்டிகளில் புலி

ஒருநாள் போட்டிகளில் புலி

ஒருநாள் போட்டிகளில் ஷாய் ஹோப் புலியாகப் பாய்கிறார். 73 ஒருநாள் போட்டி இன்னிங்க்ஸில் 3289 ரன்கள் குவித்துள்ளார் ஹோப். அதன் சராசரி 51.39 ஆகும். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஒருநாள் போட்டி பேட்ஸ்மேனாக வலம் வருகிறார்.

டெஸ்டில் எலி

டெஸ்டில் எலி

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவரது நிலை தலைகீழாக உள்ளது. 60 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 1523 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதன் சராசரி 26.72 மட்டுமே. 2017இல் டெஸ்ட் போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருந்த அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமான நிலைக்கு சென்றார்.

இரண்டு சதங்கள்

இரண்டு சதங்கள்

2017இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்து அணியை வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதுவே அவர் அடித்த இரண்டு சதங்கள். அதன் பின் சதம் அடிக்காத அவர், இரண்டு ஆண்டுகளில் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.

டெஸ்ட் சராசரி சரிவு

டெஸ்ட் சராசரி சரிவு

2017இல் அவரது டெஸ்ட் சராசரி 45.47 ஆகும். 2018இல் 20.23, 2019இல் 19.75. அவரது ஒட்டுமொத்த டெஸ்ட் பேட்டிங் சராசரி 26.72 ஆக சரிந்துள்ளது. அவர் மோசமாக ஆடினாலும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர்.

கேப்டன் ஆதரவு

கேப்டன் ஆதரவு

ஷாய் தரமான வீரர் என நம்புகிறார் ஜேசன் ஹோல்டர். அவர் ஒரே ஒரு போட்டியில் பெரிய அளவில் ரன் குவித்தால் கூட பார்முக்கு வந்து விடுவார். கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் தான் ஷாய் ஹோப் தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நீடிக்க முடியாது

நீடிக்க முடியாது

அதே போல, இந்த முறையும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் மீண்டு வருவார் என நம்புகிறார் ஹோல்டர். கேப்டன் நம்பிக்கை வைத்தாலும், இந்த தொடரிலும் ஷாய் ஹோப் ரன் குவிக்கவில்லை என்றால் அடுத்த டெஸ்ட் தொடரில் அவர் நீடிப்பது கடினமே.

Story first published: Thursday, July 16, 2020, 14:32 [IST]
Other articles published on Jul 16, 2020
English summary
ENG vs WI : This could be Shai Hope’s last test series, if he fails to perform after two years of poor form.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X