For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

107 ஆண்டுகள்ல இல்லாத சாதனை... ஜோ ரூட் தலைமையில் சாதித்த இங்கிலாந்து.. மிகச்சிறப்பு

கால்லி : இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையிலான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2க்கு 0 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.

கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது.

போட்டிக்கு இடையே.. வெள்ளை நிறத்திற்கு மாறிய சிவப்பு பந்து.. அதிர்ந்து போன வீரர்கள்..எப்படி நடந்தது? போட்டிக்கு இடையே.. வெள்ளை நிறத்திற்கு மாறிய சிவப்பு பந்து.. அதிர்ந்து போன வீரர்கள்..எப்படி நடந்தது?

இது மட்டுமின்றி கடந்த 107 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெளிநாட்டில் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கொண்டு இங்கிலாந்து சாதனை மேற்கொண்டுள்ளது.

டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வெற்றி

டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வெற்றி

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் போட்டியிட்டு 2க்கு 0 என்ற கணக்கில் தொடரை வெற்றி கொண்டுள்ளது. கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான அணி இந்த சாதனையை மேற்கொண்டுள்ளது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் டாசிஸ் தோற்ற போதிலும் இரு போட்டிகளிலும் முறையே 7 விக்கெட்டுகள் மற்றும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. இந்த இரண்டு போட்டிகளிலும் இரட்டை சதம் மற்றும் சதமடித்து கேப்டன் ஜோ ரூட் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார்.

426 ரன்கள்... 2 விக்கெட்டுகள்

426 ரன்கள்... 2 விக்கெட்டுகள்

இரு போட்டிகளிலும் சேர்த்து அவர் 426 ரன்கள் மற்றம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த 2021 ஆண்டை சிறப்பாக துவக்கியுள்ளார். வெளிநாடுகளில் விளையாடப்பட்டுள்ள கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தொடர் வெற்றியை பெற்று பிரத்யேக சாதனையை மேற்கொண்டுள்ளது.

107 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை

107 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை

கடந்த 107 ஆண்டுகளில் இல்லாத வகையில் தொடர்ந்து வெளிநாடுகளில் விளையாடப்பட்டுள்ள 5 டெஸ்ட் போட்டிகளை வெற்றி கொண்டு இங்கிலாந்து சாதனை மேற்கொண்டுள்ளது. கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் மற்றும் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் என தொடர்ந்து 5 போட்டிகளை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

தொடர்ந்து 7 போட்டிகள் வெற்றி

தொடர்ந்து 7 போட்டிகள் வெற்றி

கடந்த 1911 மற்றும் 1914 ஆண்டுகளுக்கு இடையில் இந்த சாதனையை இங்கிலாந்து மேற்கொண்டது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தொடர்ந்து 7 போட்டிகளை வெற்றி கொண்டது. அதை தொடர்ந்து தற்போது 107 ஆண்டுகளுக்கு பிறகே இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, January 26, 2021, 13:26 [IST]
Other articles published on Jan 26, 2021
English summary
The last time they did it was 107 years ago when they won seven consecutive games abroad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X