இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி?

ஏஜியஸ் பௌல் : கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடங்கிய நிலையில் 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் டெஸ்ட் தொடரை துவங்கியது.

கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஐசிசி விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் மனதில் வைத்து பயோ பபள் முறையில் சிறப்பாக இந்த தொடர் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானுடன் இங்கிலாந்து அணி மோதும் டெஸ்ட் தொடரை நடத்தி வருகிறது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் கோச்சுக்கு கொரோனா வைரஸ்.. ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!

மே. தீவுகளை வெற்றிகொண்ட இங்கிலாந்து

மே. தீவுகளை வெற்றிகொண்ட இங்கிலாந்து

கொரோனா வைரஸ் காரணமாக 4 மாதங்கள் முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் துவங்கி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 3க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது பாகிஸ்தானுடன் தனது அடுத்த தொடரை துவங்கியுள்ளது.

முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

கடந்த 15ம் தேதி துவங்கிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தன்னுடைய அபாரமான ஆட்டத்தை காண்பித்த நிலையில், சுதாரித்துக் கொண்ட இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் முறையே 84 மற்றும் 75 ரன்களை குவித்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்தனர்.

நாளை 2வது போட்டி துவக்கம்

நாளை 2வது போட்டி துவக்கம்

இதையடுத்து இந்த தொடரில் இங்கிலாந்து அணி 3க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை இரண்டாவது போட்டியில் சௌதாம்டனின் ஏஜியஸ் பௌலில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் முனைப்படன் உள்ள நிலையில், இங்கிலாந்தின் முக்கிய ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் அடுத்த இரு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

வெற்றி பெற இங்கிலாந்து முனைப்பு

வெற்றி பெற இங்கிலாந்து முனைப்பு

சொந்த காரணங்களுக்காக ஸ்டோக்ஸ் அடுத்த இரு போட்டிகளில் பங்கேற்க மாட்டார். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் துவங்கவுள்ள இந்த போட்டியை சோனி டிவி நேரிடையாக ஒளிப்பரப்ப உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் விளையாடுவதன்மூலம் கோப்பையை வெல்ல முடியும் என்பதால் இங்கிலாந்து அணியும் போட்டியை வெல்ல முனைப்புடன் உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
England lead the three-match series 1-0 after winning the first Test
Story first published: Wednesday, August 12, 2020, 18:30 [IST]
Other articles published on Aug 12, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X