For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவு இசிபி அஞ்சலி

லண்டன் : பிரிட்டன் இளவரசரும் குயின் எலிசபெத்தின் கணவருமான பிலிப் தனது 99வது வயதில் காலமாகியுள்ளார்.

அவரது மறைவை பங்கிங்காம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிலிப்பின் மறைவிற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

பிலிப் காலமானார்

பிலிப் காலமானார்

பிரிட்டன் இளவரசர் மற்றும் குயின் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமாகியுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. சிறந்த கிரிக்கெட் ரசிகராகவும் தன்னுடைய விளையாட்டு காலங்களில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் திகழ்ந்தவர் பிலிப்.

இசிபி தொடருக்கு காரணம்

இசிபி தொடருக்கு காரணம்

எம்சிசியின் தலைவராக கடந்த 1949 -50 மற்றும் 1974-75 காலங்கட்டங்களில் பணியாற்றியுள்ளவர் பிலிப். மேலும் அதன் ஆயுட்கால உறுப்பினராகவும் திகழ்ந்தவர். இசிபி கோப்பை தொடர் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் பிலிப். கடந்த 1973ல் இந்த தொடர் உருவாக்கப்பட்டது.

இசிபி அஞ்சலி

இசிபி அஞ்சலி

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் பிலிப்பின் மறைவிற்கு இரங்கல் தெரிவத்துள்ளது. பிலிப்பின் மறைவு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது. இதனிடையே இசிபி தலைவர் இயான் வார்மோரும் பிலிப் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மிகவும் அலாதியானது

மிகவும் அலாதியானது

கிரிக்கெட்டின் மீதான பிலிப்பின் விருப்பம் மிகவும் அலாதியானது என்றும் அவர் கூறியுள்ளார். அவர் கிரிக்கெட்டிற்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கியுள்ள ஆதரவு மிகப்பெரிய சொத்தாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிலிப்பின் மறைவு இங்கிலாந்து கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார்.

Story first published: Friday, April 9, 2021, 20:16 [IST]
Other articles published on Apr 9, 2021
English summary
We owe him a great debt for his support and passion over many decades -ECB head
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X