For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர மட்டும் நம்பி இருக்கணுமா..? அப்படி எல்லாம் கிடையாது..! இளம் வீரரை குறி வைக்கும் பயிற்சியாளர்

லண்டன்: 2வது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சரை மட்டுமே நம்பி களம் இறங்க வேண்டாம் என்று இங்கிலாந்து வீரர்களை உதவி பயிற்சியாளர் பால் காலிங்வுட் அலர்ட் செய்திருக்கிறார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் தொடராக பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் நடை பெறுகிறது. பரம வைரிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

2001ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா, இந்த மைதானத்தில் வெற்றியை பெற்றது இல்லை என்ற வரலாறு நிலவிவந்தது. இந்நிலையில் இரு இன்னிங்சிலும் சதமடித்து ஆஸ்திரேலியாவை தோல்வியில் இருந்து மீட்டெடுத்தவர் ஸ்டீவ் ஸ்மித். கண்ணீர் மல்க அதை ஒரு பேட்டியிலும் வெளிப்படுத்தி இருந்தார் அவர்.

உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த கிரிஸ்டன்..! கிளப் அணிக்கு பயிற்சியாளராக நியமனம்..!! உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த கிரிஸ்டன்..! கிளப் அணிக்கு பயிற்சியாளராக நியமனம்..!!

வெற்றி

வெற்றி

தமக்கு வந்த சோதனையை சாதனையாக்கி மாற்றினார். இறுதியாக 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய சோகத்துடன் 2வது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து தயாராகி வருகிறது.

காயத்தால் அவதி

காயத்தால் அவதி

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இங்கிலாந்தின் ஸ்டார் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தால் வெளியேறினார். முதல் டெஸ்டில் ஆடுவார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் முழு உடல்தகுதி பெறாததால் வெளியில் உட்கார வைக்கப்பட்டு இருந்தார்.

விளையாட ரெடி

விளையாட ரெடி

2வது டெஸ்ட் போட்டியில் ஆட ஆர்ச்சர் உடல்தகுதி பெற்று விட்டார். அதேநேரம் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார். எனவே, 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அறிமுகமாக இருக்கிறார் இளம் பவுலர் ஆர்ச்சர்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்நிலையில் இங்கிலாந்து துணை பயிற்சியாளர் பால் காலிங்வுட் கூறியதாவது: ஜோ ரூட் தலைமையிலான அணி நிச்சயம் 2வது டெஸ்ட் போட்டியை தனதாக்கி கொள்ளும். அதே நேரம், ஆர்ச்சர் ஒருவரை மட்டுமே நம்பி இங்கிலாந்து அணி களம் இறங்க வில்லை.

நம்பியிருக்க வேண்டாம்

நம்பியிருக்க வேண்டாம்

அப்படி களமிறக்கவும் முடியாது. எங்களிடம் ஏற்கனவே வேகப்பந்து வீச்சில் அசத்தும் வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவராக தான் ஆர்ச்சரை பார்க்கவேண்டும். தவிர, அவர் புதிதாக எங்கிருந்தும் வரவில்லை. வீரர்களும் அவரை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம். அனைவரும் சமமாக பங்களிக்கவேண்டும் என்றார்.

Story first published: Tuesday, August 13, 2019, 17:20 [IST]
Other articles published on Aug 13, 2019
English summary
England assistant coach paul Collingwood talk about star bowler archer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X