For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன டீம் இது? இதை வைச்சுகிட்டு இந்தியாவை ஜெயிக்க முடியுமா? சிக்கலில் இங்கிலாந்து!

லண்டன் : இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த தொடருக்கான டெஸ்ட் அணியை இங்கிலாந்து அறிவித்தது. அப்போது அதில் மூன்று முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை.

இந்திய அணியை கேலி செய்த ஆஸி. கேப்டன் நிலைமையை பார்த்தீங்களா? வைரல் ஆகும் புகைப்படம்!இந்திய அணியை கேலி செய்த ஆஸி. கேப்டன் நிலைமையை பார்த்தீங்களா? வைரல் ஆகும் புகைப்படம்!

அவர்களுக்கு பதிலாக தற்போது ஓய்வில் இருக்கும் மூன்று வீரர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

முக்கிய வீரர்களை நீக்கி இருப்பது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சுழற்சி முறையில் ஒவ்வொரு வீரருக்கும் உரிய அளவு ஓய்வு அளிக்க வேண்டும் என்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு இந்த முடிவை எடுத்தாலும், முன்னாள் வீரர்கள் இதை எதிர்த்து வருகின்றனர்.

நீக்கம்

நீக்கம்

ஜானி பேர்ஸ்டோ தற்போது இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கிறார். அவர் இந்திய துணை கண்ட நாடுகளில் சுழற் பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில் வல்லவராக இருக்கிறார். அவருடன், இளம் ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் நீக்கப்பட்டுள்ளனர்.

முழு பலத்துடன் ஆட வேண்டும்

முழு பலத்துடன் ஆட வேண்டும்

அவர்கள் மூவருக்கு பதில் சிறந்த வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற சிறந்த வீரர்களை அணியில் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி. ஆனாலும், முழு பலத்துடன் களமிறங்கினால் மட்டுமே இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.

பங்கேற்க வேண்டும்

பங்கேற்க வேண்டும்

அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேர்ஸ்டோ நிச்சயம் பங்கேற்க வேண்டும். அதே போல, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு வேகப் பந்துவீச்சு கூட்டணி இணைந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என கூறி உள்ளார்.

Story first published: Monday, January 25, 2021, 16:16 [IST]
Other articles published on Jan 25, 2021
English summary
England has to play Bairstow says Kevin Pietersen
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X