For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சக்சஸான கோலி ப்ளான்.. 4வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.

india vs england 2nd test match live cricket score updates lords

Sep 06, 2021, 9:18 pm IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

Sep 06, 2021, 9:18 pm IST

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை பெற்றது.

Sep 06, 2021, 8:24 pm IST

இங்கிலாந்து அணியில் 8வது விக்கெட்டும் சரிந்தது. 2வது செஷன் முடிவில் அந்த அணி 193 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது. வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவை.

Sep 06, 2021, 7:55 pm IST

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை உடைந்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் கேப்டன் ஜோ ரூட் போல்டாகி வெளியேறினார்.

Sep 06, 2021, 7:11 pm IST

இங்கிலாந்து அணியில் 6வது விக்கெட்டும் சரிந்தது. மொயின் அலியும் டக் அவுட்டாகி வெளியாகினார்.

Sep 06, 2021, 7:11 pm IST

இங்கிலாந்து அணியை விழிப்பிதுங்க வைக்கும் ஜஸ்பிரித் பும்ரா. இங்கிலாந்து அணியில் மிடில் ஆர்டரின் நம்பிக்கையாக இருந்த பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

Sep 06, 2021, 6:45 pm IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது விக்கெட்டை எடுத்தார் ஜஸ்பிரித் பும்ரா. இங்கிலாந்து அணி 146 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.

Sep 06, 2021, 6:26 pm IST

ஜடேஜா ஓவரில் 63 ரன்களில் போல்டான ஹஸீப் ஹமீத்

Sep 06, 2021, 6:26 pm IST

லெக் ஸ்டெம்ப் லைனில் பிட்ச்சான பந்து, டர்ன் ஆகி ஆஃப் ஸ்டெம்ப்பை காலி பண்ண ஏமாற்றத்தோடு வெளியேறினார் ஹஸீப்

Sep 06, 2021, 6:15 pm IST

உணவு இடைவேளை முடிந்து இங்கிலாந்து தற்போது பேட்டிங் செய்து வருகிறது

Sep 06, 2021, 6:12 pm IST

இங்கிலாந்து கைவசம் 8 விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில், வெற்றிக்கு இன்னும் 237 ரன்கள் தேவைப்படுகிறது

Sep 06, 2021, 6:12 pm IST

இரண்டாவது செஷனில் இந்தியா மேற்கொண்டு 2 விக்கெட் வீழ்த்தியாக வேண்டும்

Sep 06, 2021, 6:12 pm IST

ஜோ ரூட்டை டார்கெட் செய்யாமல், மற்ற பேட்ஸ்மேன்களை குறி வைத்து காலி செய்வது புத்திசாலித்தனம் எனலாம்

Sep 06, 2021, 5:37 pm IST

கடைசி நாளின் உணவு இடைவேளைக்கு முன்பு வரை இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது

Sep 06, 2021, 5:36 pm IST

இங்கிலாந்து வெற்றிப் பெற இன்னும் 237 ரன்கள் தேவை

Sep 06, 2021, 5:11 pm IST

ரவீந்திர ஜடேஜா ஓவரில் ஹஸீப் ஹமீத் தொட்டுவிட்டு சிங்கிள் ஓட முயற்சிக்க, டேவிட் மலன் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

Sep 06, 2021, 5:11 pm IST

மாயங்க் அகர்வாலின் துல்லியமான த்ரோவை, லாவகமாக ரிஸீவ் செய்து ரன் அவுட் செய்தார் ரிஷப் பண்ட்

Sep 06, 2021, 5:11 pm IST

இங்கிலாந்து இப்போது 120 / 2

Sep 06, 2021, 5:07 pm IST

ரவீந்திர ஜடேஜா முடிந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசுகிறார் என்றே கூற வேண்டும்.

Sep 06, 2021, 5:07 pm IST

தன்னால் முடிந்த வரை நன்றாகவே பந்து வீசி வருகிறார்

Sep 06, 2021, 5:07 pm IST

அஷ்வின் மட்டும் இருந்திருந்தால், இங்கிலாந்தை இன்று ஒரு வழி செய்திருக்கலாம்

Sep 06, 2021, 4:43 pm IST

ஜடேஜா ஓவரில் ஹஸீப் ஹமீத் கொடுத்த கேட்சை தவறவிட்ட முகமது சிராஜ்

Sep 06, 2021, 4:43 pm IST

55 ரன்களில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ஹமீத்

Sep 06, 2021, 4:37 pm IST

46 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது

Sep 06, 2021, 4:37 pm IST

ஹஸீப் ஹமீத் 54 ரன்களுடனும், டேவிட் மலன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Sep 06, 2021, 4:15 pm IST

இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஹஸீப் ஹமீத் 123 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

Sep 06, 2021, 4:15 pm IST

இத்தொடரில் இது அவருக்கு 2வது அரைசதமாகும்

Sep 06, 2021, 4:13 pm IST

124 பந்துகளில் அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ், அடுத்த பந்திலேயே ஷர்துல் தாகூர் ஓவரில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Sep 06, 2021, 4:12 pm IST

இங்கிலாந்து 40 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் எடுத்துள்ளது

Sep 06, 2021, 4:12 pm IST

இன்று 5ம் நாள் ஆட்டத்திலும், இங்கிலாந்து ஓப்பனர்கள் எந்தவித பிரஷரும் இன்றி கேஷுவலாக விளையாடி வருகின்றனர்

Sep 06, 2021, 3:40 pm IST

ஆஃப் ஸ்டெம்ப்பை குறிவைக்கும் இந்தியன் பவுலர்ஸ்

Sep 06, 2021, 3:40 pm IST

பும்ராவுக்கு இந்த செஷனில் விக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது

Sep 06, 2021, 3:40 pm IST

தொடக்க வீரர்களை வீழ்த்த தொடரும் போராட்டம்

Sep 06, 2021, 3:38 pm IST

5ம் நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் தான் மிக முக்கியமானது

Sep 06, 2021, 3:37 pm IST

லன்ச்சுக்கு முன்பாக எப்படியும் 2 விக்கெட்டுகளாவது இந்திய அணி வீழ்த்த வேண்டும்

Sep 06, 2021, 3:37 pm IST

அப்போது தான் வெற்றி என்பதைப் பற்றி இந்தியா யோசித்துப் பார்க்க முடியும்

Sep 06, 2021, 3:30 pm IST

இந்தியா - இங்கிலாந்து 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது

Sep 06, 2021, 3:30 pm IST

இங்கிலாந்து நேற்று நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது

Sep 06, 2021, 3:30 pm IST

இங்கிலாந்து வெற்றிப் பெற இன்னும் 291 ரன்கள் தேவை

Sep 05, 2021, 9:26 pm IST

இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது

Sep 05, 2021, 9:25 pm IST

இந்நிலையில், ரோஹித்தின் இடது முழங்காலில் அசௌகரியம் இருப்பதாலும், புஜாராவின் இடது கணுக்காலில் வலி உள்ளதாலும் இருவரும் ஃபீல்டிங் செய்ய மாட்டார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது

Sep 05, 2021, 9:07 pm IST

இந்தியா நிர்ணயித்துள்ள 368 ரன்கள் இலக்கை நோக்கி, இங்கிலாந்து 2ம் இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது

Sep 05, 2021, 8:56 pm IST

இந்தியா 2வது இன்னிங்ஸில் 466 ரன்களுக்கு ஆல் அவுட்

Sep 05, 2021, 8:55 pm IST

கடைசி விக்கெட்டாக உமேஷ் யாதவ் 25 ரன்களில் அவுட்டானார்.

Sep 05, 2021, 8:55 pm IST

இங்கிலாந்து வெற்றி பெற 368 ரன்கள் இலக்கு

Sep 05, 2021, 8:42 pm IST

இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 450 ரன்கள் எடுத்துள்ளது

Sep 05, 2021, 8:42 pm IST

இதன் மூலம், இங்கிலாந்தை விட 351 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

Sep 05, 2021, 8:22 pm IST

தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 445 ரன்கள் எடுத்துள்ளது

Sep 05, 2021, 8:09 pm IST

இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 440 ரன்கள் எடுத்துள்ளது

Sep 05, 2021, 8:09 pm IST

இங்கிலாந்தை விட 340 ரன்கள் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது

Sep 05, 2021, 7:51 pm IST

இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் அரைசதம் அடித்துள்ளார் ரிஷப் பண்ட்

Sep 05, 2021, 7:51 pm IST

105 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரிஷப், மொயீன் அலி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Sep 05, 2021, 7:46 pm IST

ரிஷப் பண்ட் - ஷர்துல் தாகூர் 153 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது

Sep 05, 2021, 7:46 pm IST

கேப்டன் ஜோ ரூட் ஓவரில், 60 ரன்களில் ஷர்துல் தாகூர் வெளியேறினார்

Sep 05, 2021, 7:35 pm IST

முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்த நிலையில், இரண்டாம் இன்னிங்ஸிலும் 65 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் ஷர்துல்.

Sep 05, 2021, 7:35 pm IST

ரிஷப் பண்ட் 43 ரன்களுடன் களத்தில் இருக்க, இந்தியா 300 ரன்கள் முன்னிலை பெற்றது.

Sep 05, 2021, 7:35 pm IST

இந்திய அணியும் 400 ரன்களை கடந்தது

Sep 05, 2021, 7:19 pm IST

இந்திய அணி 131 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்துள்ளது

Sep 05, 2021, 7:19 pm IST

ஷர்துல் தாகூர் 36 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Sep 05, 2021, 6:57 pm IST

இந்திய அணி 127 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் எடுத்துள்ளது

Sep 05, 2021, 6:57 pm IST

ஷர்துல் தாகூர் 33 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Sep 05, 2021, 6:45 pm IST

விராட் கோலி அவுட்டான பிறகு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - ஷர்துல் தாகூர் 80 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்

Sep 05, 2021, 6:35 pm IST

இந்திய அணி 250 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

Sep 05, 2021, 6:27 pm IST

உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியுள்ளது

Sep 05, 2021, 6:27 pm IST

ரிஷப் பண்ட் - ஷர்துல் தாகூர் களத்தில் உள்ளனர்.

Sep 05, 2021, 6:27 pm IST

இந்தியா 245 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Sep 05, 2021, 6:27 pm IST

கைவசம் 4 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில், இந்தியா 300 ரன்கள் முன்னிலை பெறுமா?

Sep 05, 2021, 5:07 pm IST

இந்தியாவின் நம்பிக்கை உடைந்தது. சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Sep 05, 2021, 5:00 pm IST

5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை கடந்தது இந்திய அணி. கேப்டன் கோலி 44 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Sep 05, 2021, 4:32 pm IST

4வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்த இந்திய அணி. 5வது விக்கெட்டும் சரிந்தது. துணைக் கேப்டன் ரகானே டக் அவுட்டாகி வெளியேறினார்.

Sep 05, 2021, 4:25 pm IST

இந்திய அணியில் 4வது விக்கெட் சரிந்தது. ரவீந்திர ஜடேஜா 17 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டானார்.

Sep 05, 2021, 3:36 pm IST

கேப்டன் விராட் கோலி 23 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Sep 05, 2021, 3:33 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது நேற்று (செப்.4) மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தது

Sep 04, 2021, 10:43 pm IST

மூன்றாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக அரைமணி நேரம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 22 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Sep 04, 2021, 10:21 pm IST

போதிய வெளிச்சம் இல்லாததால், ஆட்டம் பாதியில் நிறுத்தம் இந்திய அணி 92 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது கேப்டன் விராட் கோலி 22 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Sep 04, 2021, 9:48 pm IST

புஜாரா அவுட்டான பிறகு, மீண்டும் 5வது வீரராக ரவீந்திர ஜடேஜா களமிறக்கப்பட்டுள்ளார் இந்திய அணி 87 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்துள்ளது கேப்டன் விராட் கோலி மற்றும் ஜடேஜா களத்தில் உள்ளனர்

Sep 04, 2021, 9:23 pm IST

ஓலே ராபின்சன் ஓவரில் புஜாரா 61 ரன்களில் கேட்ச் ஆகி அவுட்டானார் ரோஹித் ஷர்மா அவுட்டான அடுத்த ஓவரிலேயே, புஜாராவும் அவுட்டாக, இந்தியா மீண்டும் இக்கட்டான நிலைக்கு சென்றுள்ளது

Sep 04, 2021, 9:18 pm IST

ரோஹித் ஷர்மா - புஜாரா கூட்டணி ரோஹித் ஷர்மா 127 ரன்களில் கிரெய்க் ஓவர்டன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார் இந்தியா தனது 2வது விக்கெட்டை இழந்துள்ளது

Sep 04, 2021, 8:57 pm IST

முதன் முறையாக இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீசி வருகிறார் இந்தியாவின் 2வது விக்கெட்டை வீழ்த்த, இங்கிலாந்து கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது

Sep 04, 2021, 8:46 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து புஜாரா அசத்தல்

Sep 04, 2021, 8:46 pm IST

தேநீர் இடைவேளை முடிந்து இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது இங்கிலாந்து பவுலர் கிரெய்க் ஓவர்டன் புஜாராவிடம் அவ்வப்பொழுது வார்த்தைகளால் வம்பிழுத்து வருவது போட்டிக் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

Sep 04, 2021, 8:22 pm IST

மூன்றாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை, இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் ஷர்மா 103 ரன்களுடனும், புஜாரா 48 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Sep 04, 2021, 7:52 pm IST

மெகா சிக்ஸர் மூலம் தனது வெளிநாட்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா

Sep 04, 2021, 7:50 pm IST

ரோஹித் - புஜாரா பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது ரோஹித் ஷர்மா 90-களைத் தாண்டி சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்

Sep 04, 2021, 7:39 pm IST

கால்களை சிறப்பாக நகர்த்தி ரோஹித் ஷர்மா அருமையாக விளையாடி வருகிறார்

Sep 04, 2021, 7:13 pm IST

இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் இந்தியா 54 ரன்கள் முன்னிலை

Sep 04, 2021, 7:13 pm IST

இங்கிலாந்து இப்போது தான் சரியான முடிவுக்கு வந்துள்ளது அதாவது, பிட்ச் இப்போது ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் நிலையில், ரோஹித் - புஜாரா பார்ட்னர்ஷிப்புக்கு தொடர்ச்சியாக பந்து வீச மொயீன் அலிக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார் கேப்டன் ரூட் இந்த நேரத்தில், "ஸ்பின் ஈஸ் கிங்" என்பதை புரிந்து கொண்டார் போல

Sep 04, 2021, 6:56 pm IST

உணவு இடைவேளைக்கு பிறகு பந்துவீச மொயீன் அலிக்கு அழைப்பு ரோஹித்தை கட்டம் கட்டித் தூக்க திட்டம் ரோஹித்தை இறங்கி வந்து ஆடச் செய்து அவுட்டாக்க வியூகம்

Sep 04, 2021, 6:55 pm IST

ரோஹித் - புஜாரா 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்துள்ளனர்

Sep 04, 2021, 6:41 pm IST

ரோஹித் ஷர்மா அரைசதம் டெஸ்ட் போட்டிகளில் தனது 15வது அரைசதம் அடித்துள்ளார் ரோஹித் ஷர்மா இந்தியா 47 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது

Sep 04, 2021, 6:20 pm IST

உணவு இடைவேளைக்கு பிறகு, இந்திய அணி பேட்டிங்கை துவங்கியுள்ளது இந்திய அணி இப்போது வரை 2வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்துள்ளது. 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது மேற்கொண்டு 200 ரன்கள் அடித்தால், நிச்சயம் வெற்றிக்கு பாடுபடலாம்.

Sep 04, 2021, 5:37 pm IST

மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தை விட இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

Sep 04, 2021, 5:31 pm IST

2வது இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்தன. இங்கிலாந்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது இந்தியா 2வது இன்னிங்ஸில் தற்போது இங்கிலாந்தை விட முன்னிலைப் பெற்றுள்ளது ரோஹித் 47 ரன்களுடனும், புஜாரா 13 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்

Sep 04, 2021, 5:23 pm IST

இந்தியா 39 ஓவர்கள் முடிவில் 98 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் ஷர்மா 42 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Sep 04, 2021, 5:05 pm IST

முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல், 46 ரன்களில் ஆண்டர்சன் ஓவரில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்தியா 35 ஓவர்கள் முடிவில் 83-1

Sep 04, 2021, 4:31 pm IST

இந்தியா 28 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது

Sep 04, 2021, 4:31 pm IST

இந்தியா 28 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட நிலையில், இந்திய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 3 கண்டங்களில் இருந்து தப்பித்து விளையாடி வருகிறது

Sep 04, 2021, 4:31 pm IST

இந்தியா 28 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட நிலையில், இந்திய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 3 கண்டங்களில் இருந்து தப்பித்து விளையாடி வருகிறது

Sep 04, 2021, 4:31 pm IST

இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட நிலையில், இந்திய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 3 கண்டங்களில் இருந்து தப்பித்து விளையாடி வருகிறது

Sep 04, 2021, 3:47 pm IST

விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எட்டியது இந்திய அணி. ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்

Sep 04, 2021, 3:03 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 4வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

Sep 04, 2021, 3:03 pm IST

2வது இன்னிங்ஸை ஆடி வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Sep 03, 2021, 11:07 pm IST

2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் ஷர்மா 20 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்தை விட 56 ரன்கள் பின்தங்கியுள்ளது2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் ஷர்மா 20 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்தை விட 56 ரன்கள் பின்தங்கியுள்ளது

Sep 03, 2021, 10:53 pm IST

13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் 18 ரன்களுடனும், ராகுல் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Sep 03, 2021, 10:32 pm IST

இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது

Sep 03, 2021, 9:59 pm IST

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ள நிலையில், இந்தியா 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இந்தியாவை விட இங்கிலாந்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

Sep 03, 2021, 9:44 pm IST

அரைசதம் விளாசினார் க்றிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணி இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

Sep 03, 2021, 9:41 pm IST

கடைசி விக்கெட்டை எடுக்க போராடும் இந்தியா இங்கிலாந்து கிட்டத்தட்ட 100 ரன்கள் முன்னிலையை நெருங்கிவிட்டது.

Sep 03, 2021, 9:24 pm IST

ஓலே ராபின்சன் 5 ரன்களில் ஜடேஜா ஓவரில் போல்டாக இங்கிலாந்து 9வது விக்கெட்டை இழந்தது

Sep 03, 2021, 9:03 pm IST

இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்த ஓலே போப் 81 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் தாகூர் ஓவரில் போல்டானார்

Sep 03, 2021, 8:48 pm IST

இங்கிலாந்து தற்போது இந்தியாவை விட 50 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

Sep 03, 2021, 8:36 pm IST

தேநீர் இடைவேளை முடிந்து, இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது

Sep 03, 2021, 8:02 pm IST

ஜடேஜா ஓவரில் மொயீன் அலி 35 ரன்கள் எடுத்து வெளியேறினார் இங்கிலாந்து 7வது விக்கெட்டை இழந்தது. 222-7

Sep 03, 2021, 8:01 pm IST

67 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது ஓலே போப் 70 ரன்கள் கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்

Sep 03, 2021, 7:43 pm IST

முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட முன்னிலை பெற்றது இங்கிலாந்து

Sep 03, 2021, 7:43 pm IST

ஓலே போல் அரைசதம் அடித்து அசத்த, இங்கிலாந்து அணி இந்தியா அடித்த 191 ரன்களை கடந்துள்ளது

Sep 03, 2021, 7:43 pm IST

ஓலே போப் 64 ரன்களுடனும், மொயீன் அலி 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Sep 03, 2021, 6:58 pm IST

இங்கிலாந்தின் ஓலே போப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்திருக்கிறார்

Sep 03, 2021, 6:58 pm IST

இங்கிலாந்து 53 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது

Sep 03, 2021, 6:34 pm IST

முகமது சிராஜ் ஓவரில், ஜானி பேர்ஸ்டோ 37 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்

Sep 03, 2021, 6:34 pm IST

இங்கிலாந்தை சுருட்ட கிடைத்த அற்புதமான வாய்ப்பை இந்தியா தவற விட்டுள்ளது எனலாம்

Sep 03, 2021, 6:34 pm IST

ஓலே போப் - ஜானி பேர்ஸ்டோ ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Sep 03, 2021, 6:34 pm IST

62 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து, இப்போது 150 ரன்களை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது

Sep 03, 2021, 5:46 pm IST

77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஒல்லி போப் - ஜானி பேர்ஸ்டோ ஜோடி. உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்துள்ளது.

Sep 03, 2021, 4:55 pm IST

பார்ட்னர்ஷிப் அமைக்க போராடும் இங்கிலாந்து அணி. 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 15 ரன்களுடனும், பேர்ஸ்டோ 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Sep 03, 2021, 4:54 pm IST

திடீரென அதிரடி காட்டும் இங்கிலாந்து அணி. 5 விக்கெட்கள் இழப்புடன் 100 ரன்களை கடந்தது.

Sep 03, 2021, 4:10 pm IST

கெத்து காட்டும் உமேஷ் யாதவ். இங்கிலாந்து அணியில் 5வது விக்கெட் சரிந்தது.

Sep 03, 2021, 4:10 pm IST

உமேஷ் யாதவ் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தில் நட்சத்திர வீரர் டேவிட் மாலன் கேட்ச்சாகி வெளியேறினார்.

Sep 03, 2021, 3:40 pm IST

2ம் நாள் ஆட்டத்தின் தொடக்கமே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி. உமேஷ் யாதவ் வீசிய 2வது ஓவரில் இங்கிலாந்து வீரர் க்ரெய்க் ஓவர்டன் அவுட்டானார். அவுட் ஸ்விங்காக போடப்பட்ட பந்தை அடிக்க முயன்று எட்ஜாகியதால், ஸ்லிப்பில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

Sep 03, 2021, 3:40 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது.

Sep 03, 2021, 3:11 pm IST

வலுவான நிலையில் இந்திய அணி.. இன்று தொடங்குகிறது 2வது நாள் ஆட்டம்!

Sep 03, 2021, 3:11 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

Sep 02, 2021, 11:14 pm IST

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது

Sep 02, 2021, 10:57 pm IST

பார்க்கவே கண்கொள்ளா காட்சி இது என்று கூறலாம் வரிசையாக மூன்று சதங்களை அடுக்கிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பைல்ஸ் பறக்க உமேஷ் யாதவ் ஓவரில் போல்டாகி வெளியேறினார் அவர் 21 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து 3வது விக்கெட்டை இழந்தது

Sep 02, 2021, 10:46 pm IST

இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது 2 விக்கெட்டுகள் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விழுந்தாலும், ஜோ ரூட் - டேவிட் மலன் கூட்டணி சிறப்பாக விளையாடி வருகிறது

Sep 02, 2021, 10:30 pm IST

இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பின்னரும், வழக்கம் போல் எந்தவித பதட்டமும் இன்றி கேஷுவலாக அடிக்க ஆரம்பித்துவிட்டார் ஜோ ரூட் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்துள்ளது

Sep 02, 2021, 10:04 pm IST

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து ரோரி பர்ன்ஸ் 5 ரன்களில் போல்டான நிலையில், மற்றொரு தொடக்க வீரர் ஹஸீப் ஹமீத் ரன் ஏதும் எடுக்காமல் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார்

Sep 02, 2021, 10:00 pm IST

பும்ரா ஓவரில் ரோரி பர்ன்ஸ் அவுட் பும்ரா பந்தில் இன்சைட் எட்ஜ் ஆன பர்ன்ஸ், 5 ரன்களில் போல்டாகி வெளியேறினார்

Sep 02, 2021, 9:46 pm IST

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து தற்போது களமிறங்கியுள்ளது. ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்

Sep 02, 2021, 9:41 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது

Sep 02, 2021, 9:41 pm IST

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்களும், கேப்டன் கோலி விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓலே ராபின்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்

Sep 02, 2021, 9:30 pm IST

பும்ரா ரன் ஏதும் எடுக்காமல், ரோரி பர்ன்ஸ் மூலம் ரன் அவுட் ஆக்கப்பட்டு வெளியேறினார். இந்தியா 190-9

Sep 02, 2021, 9:29 pm IST

இங்கிலாந்தை கடைசி நேரத்தில் கதிகலங்க வைத்த ஷர்துல் தாகூர் 57 ரன்களில், க்றிஸ் வோக்ஸ் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்

Sep 02, 2021, 9:23 pm IST

ஷர்துல் தாகூர் 31 பந்துகளில் 53 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார் ஷர்துல் - உமேஷ் கூட்டணி 8வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

Sep 02, 2021, 9:17 pm IST

சிக்ஸர்களாக விளாசும் ஷர்துல் தாகூர் துவண்டு கிடந்த இந்திய அணியில், புதிய வெளிச்சம் பாய்ச்சும் விதமாக, ஷர்துல் தாகூர் சிக்ஸர், பவுண்டரி என்று அதகளம் புரிந்து வருகிறார்.

Sep 02, 2021, 9:03 pm IST

க்றிஸ் வோக்ஸ் பந்துவீச்சில், வெறும் 9 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரிஷப் பண்ட் இந்திய அணி தனது 7வது விக்கெட்டை இழந்துள்ளது

Sep 02, 2021, 8:22 pm IST

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் டீ பிரேக் வரை, இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து தள்ளாடி வருகிறது. ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்

Sep 02, 2021, 8:09 pm IST

கிரெய்க் ஓவர்டன் ஓவரில், 14 ரன்களில் ரஹானே அவுட் சைட் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து வெளியேறினார் இந்திய அணி தனது 6வது விக்கெட்டை பறிகொடுத்துள்ளது இந்திய அணி 117 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது

Sep 02, 2021, 7:55 pm IST

இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது ரஹானே 7 ரன்களுடனும், ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்

Sep 02, 2021, 7:29 pm IST

கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தல் 85 பந்துகளை சந்தித்த விராட் கோலி, தனது 27வது டெஸ்ட் அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்

Sep 02, 2021, 7:08 pm IST

இந்த டெஸ்ட் தொடரில், விராட் கோலி உண்மையிலேயே கிங் கோலியாக விளையாடுவது இந்த இன்னிங்ஸில் தான். தற்போது 45 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

Sep 02, 2021, 7:08 pm IST

விராட் கோலி அரைசதம் கடந்து சதம் அடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Sep 02, 2021, 6:54 pm IST

க்றிஸ் வோக்ஸ் ஓவரில், ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் இருந்த போது, ஒரு அபார பந்தில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது.

Sep 02, 2021, 6:54 pm IST

ஆனால், ரஹானே சந்தேகத்துடன் ரிவ்யூ செல்ல, ஸ்டெம்புகளுக்கு மேலே பைல்ஸை உரசிக் கொண்டு செல்வது போல் இருந்தது. இதனால், அவுட் கண்டத்தில் இருந்து ரஹானே தப்பித்தார்

Sep 02, 2021, 6:37 pm IST

க்றிஸ் வோக்ஸ் ஓவரில், ஜடேஜா 11 ரன்களில் அவுட்

Sep 02, 2021, 6:37 pm IST

வோக்ஸின் அபார லைன் அன்ட் லெந்த் பந்தில் எட்ஜ் ஆன ஜடேஜா, கேப்டன் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Sep 02, 2021, 6:25 pm IST

வோக்ஸ் ஓவரில், 22 ரன்கள் எடுத்திருந்த போது கோலி கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்றிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தவறவிட்டார்

Sep 02, 2021, 6:21 pm IST

முதல் நாள் ஆட்டத்தின் 2வது செஷன் ஆட்டம் தொடங்கியது. கேப்டன் கோலி 22 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சி

Sep 02, 2021, 5:59 pm IST

25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கோலி 18ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் பொறுப்பான ஆட்டம்.

Sep 02, 2021, 5:13 pm IST

இந்திய அணியில் 3வது விக்கெட்டும் சரிந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய புஜாரா இந்த போட்டியில் 4 ரன்களுக்கு வெளியேறினார்.

Sep 02, 2021, 4:50 pm IST

இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி. 2வது விக்கெட்டும் சரிந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 17 ரன்களுக்கு ஒல்லி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Sep 02, 2021, 4:40 pm IST
Mykhel

இந்திய அணியில் முதல் விக்கெட் சரிந்தது. நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Sep 02, 2021, 4:10 pm IST

இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம். 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 11 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

Sep 02, 2021, 3:38 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

Sep 02, 2021, 3:38 pm IST

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரும், முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Sep 02, 2021, 3:38 pm IST

4வது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

Sep 02, 2021, 3:09 pm IST

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

Aug 28, 2021, 5:18 pm IST

இந்தியா 2வது இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்

Aug 28, 2021, 5:18 pm IST

இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Aug 28, 2021, 5:18 pm IST

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமமாகியுள்ளது

Aug 28, 2021, 5:13 pm IST

கிரெய்க் ஓவர்டன் ஓவரில் ரவீந்திர ஜடேஜா 30 ரன்களில் வெளியேறினார்

Aug 28, 2021, 5:02 pm IST

ஓலே ராபின்சன் ஓவரில் இஷாந்த் ஷர்மா 2 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆனார்

Aug 28, 2021, 5:02 pm IST

இந்திய அணி தனது 8வது விக்கெட்டை இழந்தது

Aug 28, 2021, 5:02 pm IST

இந்த இன்னிங்ஸில் ராபின்சன் கைப்பற்றிய 5வது விக்கெட் இதுவாகும்

Aug 28, 2021, 4:52 pm IST

மொயீன் அலி ஓவரில் முகமது ஷமி 6 ரன்களில் அவுட்

Aug 28, 2021, 4:52 pm IST

இந்தியா 7வது விக்கெட்டை இழந்தது

Aug 28, 2021, 4:52 pm IST

4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

Aug 28, 2021, 4:37 pm IST

ஓலே ராபின்சன் ஓவரில் ரிஷப் பண்ட் அவுட்

Aug 28, 2021, 4:37 pm IST

7 பந்துகளை சந்தித்த பண்ட் வெறும் 1 ரன் மட்டும் எடுத்து கேட்ச் ஆனார்

Aug 28, 2021, 4:37 pm IST

இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி இந்தியா வலிமையாக நகர்ந்து வருகிறது

Aug 28, 2021, 4:31 pm IST

ஆண்டர்சன் ஓவரில் அஜின்க்யா ரஹானே 10 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Aug 28, 2021, 4:31 pm IST

இந்திய அணி தனது 5வது விக்கெட்டை இழந்தது

Aug 28, 2021, 4:21 pm IST

ஓலே ராபின்சன் ஓவரில் விராட் கோலி அவுட்

Aug 28, 2021, 4:21 pm IST

அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே, விராட் கோலி 55 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

Aug 28, 2021, 4:18 pm IST

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் அரைசதம் அடித்த விராட் கோலி

Aug 28, 2021, 4:18 pm IST

இது அவரது 26வது டெஸ்ட் அரைசதமாகும்

Aug 28, 2021, 4:15 pm IST

விராட் கோலி 46 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட் கொடுக்கப்பட்டது

Aug 28, 2021, 4:15 pm IST

விராட் கோலியும் உடனே வெளியேற தயாராகிவிட்டார். அதன் பிறகு, ஒரு நொடி யோசித்த கோலி, ரஹானேவிடம் இதைப் பற்றி கேட்க, ரஹானே ரிவ்யூ எடுக்க அறிவுறுத்தினார்.

Aug 28, 2021, 4:14 pm IST

ரிவ்யூவில், கோலியின் பேட் அவரது பேடில் உரசியதால் அந்த சப்தம் கேட்டது தெரிய வந்தது. ரஹானேவின் ஆலோசனை கோலியின் விக்கெட்டை தக்க நேரத்தில் காப்பாற்றியது.

Aug 28, 2021, 4:09 pm IST

விராட் கோலி 46 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட் கொடுக்கப்பட்டது

Aug 28, 2021, 4:09 pm IST

ஆண்டர்சனின் பந்து கோலி பேட்டை உரசிச் சென்றது போல தெரிந்ததால் அம்பயர் அவுட் கொடுத்தார்

Aug 28, 2021, 4:09 pm IST

ஆனால், கோலி ரிவ்யூ கேட்க, பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது

Aug 28, 2021, 3:53 pm IST

ஓலே ராபின்சன் ஓவரில், புஜாரா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் 91 ரன்களில் வெளியேறினார்.

Aug 28, 2021, 3:53 pm IST

இந்தியா தனது 3வது விக்கெட்டை இழந்துள்ளது.

Aug 28, 2021, 3:29 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் தொடக்கம்

Aug 28, 2021, 3:29 pm IST

நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது

Aug 28, 2021, 3:29 pm IST

புஜாரா 91 ரன்களுடனும், கேப்டன் கோலி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Aug 27, 2021, 10:54 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Aug 27, 2021, 10:54 pm IST

2வது இன்னிங்ஸில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கோலி 45 ரன்களுடனும், புஜாரா 91 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Aug 27, 2021, 10:53 pm IST

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்ய இன்னும் 139 ரன்கள் தேவை.

Aug 27, 2021, 10:46 pm IST

80 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 45 ரன்களுடனும், சட்டீஸ்வர் புஜாரா 91 ரன்களுடனும் சிறப்பான பார்ட்னர்ஷிப்

Aug 27, 2021, 9:38 pm IST

60 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. சட்டீஸ்வர் புஜாரா 71 ரன்களும் விராட் கோலி 15 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டம்.

Aug 27, 2021, 8:42 pm IST

இந்திய அணியில் 2வது விக்கெட் வீழ்ந்தது. சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா, 59 ரன்களுக்கு ஒல்லி ராபின்சன் வீசிய பந்தில் எல்.பி.டபள்யூ ஆனார்.

Aug 27, 2021, 8:28 pm IST

46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 59 ரன்களுடனும், புஜாரா 40 ரன்களுடனும் சிறப்பான ஆட்டம்.

Aug 27, 2021, 7:45 pm IST

இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அரைசதம் அடித்தார்.

Aug 27, 2021, 7:07 pm IST

30 ஓவர்கள் முடீவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 39 ரன்களுடனும், புஜாரா 22 ரன்களுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

Aug 27, 2021, 5:49 pm IST

இந்திய அணியில் முதல் விக்கெட் சரிந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம்.

Aug 27, 2021, 5:49 pm IST

2வது இன்னிங்ஸில் இந்திய அணி 34 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து தடுமாற்றம்.

Aug 27, 2021, 4:54 pm IST

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 10 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 6 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

Aug 27, 2021, 3:53 pm IST

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட்121 ரன்கள் அடித்து அசத்தல்.

Aug 27, 2021, 3:46 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கியது..

Aug 27, 2021, 3:40 pm IST

இந்தியா - இங்கிலாந்து 3வது நாள் ஆட்டம் தொடங்கியது கிரெய்க் ஓவர்டன் மற்றும் ஓலே ராபின்சன் களத்தில் உள்ளனர்

Aug 27, 2021, 3:06 pm IST

ஹெட்டிங்லேவில் நடந்து வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையான 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது.

Aug 27, 2021, 3:06 pm IST

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Aug 27, 2021, 3:06 pm IST

இந்தியா முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

Aug 26, 2021, 11:12 pm IST

2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 423 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

Aug 26, 2021, 11:12 pm IST

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 345 ரன்கள் முன்னிலை.

Aug 26, 2021, 10:39 pm IST

இங்கிலாந்து அணியின் விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்தனர் இந்திய பவுலர்கள். 403 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 325 ரன்கள் முன்னிலை.

Aug 26, 2021, 9:53 pm IST

இங்கிலாந்து அணியில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார் முகமது ஷமி. பேர்ஸ்டோ 29 ரன்களுக்கும், பட்லர் 7 ரன்களுக்கு வெளியேறினர்.

Aug 26, 2021, 9:26 pm IST

மீண்டும் சதமடித்து அசத்தினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்துள்ளது.

Aug 26, 2021, 8:31 pm IST

இங்கிலாந்து அணியில் ஒருவழியாக 3வது விக்கெட் வீழ்ந்தது. சிறப்பாக ஆடி வந்த டேவிட் மாலனை வெளியேற்றினார் முகமது சிராஜ்.

Aug 26, 2021, 8:30 pm IST

தேனீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 220 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Aug 26, 2021, 7:49 pm IST

இந்திய அணியை விட 200 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து. முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.

Aug 26, 2021, 7:49 pm IST

கேப்டன் ஜோ ரூட் 68 ரன்களும், டேவிட் மாலன் 62 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டம்.

Aug 26, 2021, 6:57 pm IST

80 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 226 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் மாலன் 36 ரன்களும், ஜோ ரூட் 45 ரன்களும் எடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப்

Aug 26, 2021, 6:13 pm IST

ரூட்டின் விக்கெட்டை எடுக்க ஓய்வறையில் ஆலோசனை நடத்தும் விராட் கோலி. இங்கிலாந்தின் வியூகத்தை உடைக்க திட்டம்.

Aug 26, 2021, 5:39 pm IST

உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது

Aug 26, 2021, 5:39 pm IST

டேவிட் மலன் 24 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Aug 26, 2021, 5:39 pm IST

ரோரி பர்ன்ஸ் 61 ரன்களிலும், ஹஸீப் ஹமீத் 68 ரன்களிலும் அவுட்டானார்கள்

Aug 26, 2021, 5:38 pm IST

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 104 ரன்கள் முன்னிலையில் உள்ளது

Aug 26, 2021, 5:14 pm IST

இங்கிலாந்து அணி தனது 2வது விக்கெட்டை இழந்துள்ளது

Aug 26, 2021, 5:14 pm IST

சிறப்பாக விளையாடி வந்த ஹஸீப் ஹமீத், 68 ரன்களில் ஜடேஜா ஓவரில் போல்டானார்

Aug 26, 2021, 5:14 pm IST

இந்த டெஸ்ட் தொடரில், ஜடேஜா வீழ்த்திய முதல் விக்கெட் இதுதான்

Aug 26, 2021, 5:08 pm IST

இங்கிலாந்து அணி 62 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.

Aug 26, 2021, 4:50 pm IST

> முதல் நாளைப் போல, இன்று இரண்டாவது நாளிலும், இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் எந்தவித சிரமும் இன்றி பேட்டிங் செய்வது போல் தான் தெரிகிறது.

Aug 26, 2021, 4:50 pm IST

இந்திய பவுலர்களால் இதுவரை பெரிதாக எந்த இம்பேக்ட்டும் ஏற்படுத்த முடியவில்லை

Aug 26, 2021, 4:24 pm IST

இங்கிலாந்து 53 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது

Aug 26, 2021, 4:12 pm IST

இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்துள்ளது

Aug 26, 2021, 4:11 pm IST

ஷமி ஓவரில் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களில் போல்டானார்

Aug 26, 2021, 3:47 pm IST

இந்திய அணி 3வது டெஸ்ட் போட்டியில் மீண்டு வருவதற்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். அதாவது, முதலாவது நாள் நடந்த ஆட்டத்தை, இந்திய அணியினர் முற்றிலும் மறந்துவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

Aug 26, 2021, 3:28 pm IST

இங்கிலாந்து மேற்கொண்டு 100 ரன்கள் அடித்து அவுட்டானால் கூட, அந்த அணியின் மொத்த ஸ்கோர் 220. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினாலே 300 ரன்கள் அடிப்பது சிரமம். அப்படி 300 ரன்கள் அடித்தாலும் கூட, இங்கிலாந்துக்கு கிட்டத்தட்ட 150 ரன்களே இலக்கு நிர்ணயிக்கப்படும். என்ன செய்யப் போகிறது இந்தியா?

Aug 26, 2021, 3:12 pm IST

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின், 2ம் நாள் ஆட்டம், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது

Aug 26, 2021, 3:11 pm IST

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்துள்ளது.

Aug 26, 2021, 3:11 pm IST

தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 52 ரன்களும், ஹஸீப் ஹமீத் 60 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Aug 25, 2021, 11:10 pm IST

3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

Aug 25, 2021, 11:10 pm IST

தற்போது வரை இந்திய அணியை விட முதல் இன்னிங்ஸில் 42 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

Aug 25, 2021, 10:59 pm IST

ஹமீத்தை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ரோரி பேர்ன்ஸும் அரைசதம் அடித்தார். 123 பந்துகளை சந்தித்து 52 ரன்களை அவர் அடித்துள்ளார்.

Aug 25, 2021, 10:58 pm IST

இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு விக்கெட் இழப்பு ஏதுமின்றி விளையாடி வருகிறது.

Aug 25, 2021, 10:44 pm IST

விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் ( 51 ரன்களும்), ரோரி பேர்ன்ஸ் 46 ரன்களும் எடுத்து வலுவான பார்ட்னர்ஷிப்

Aug 25, 2021, 10:08 pm IST

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை (78 ரன்கள்) விக்கெட் இழப்பின்றி சமன் செய்தது இங்கிலாந்து அணி.

Aug 25, 2021, 10:07 pm IST

தொடக்க வீரர்கள் ரோரி பேர்ன்ஸ் 38 ரன்களும், ஹசீப் ஹமீத் 32 ரன்களுடனும் சிறப்பான ஆட்டம்.

Aug 25, 2021, 9:43 pm IST

விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்தது இங்கிலாந்து அணி. ரோரி பேர்ன்ஸ் 23 ரன்களும், ஹசீப் ஹமீத் 32 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டம்.

Aug 25, 2021, 8:07 pm IST

5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட்டை சாய்க்க இந்திய பவுலர்கள் கடும் முயற்சி

Aug 25, 2021, 7:30 pm IST

முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டது இந்திய அணி. அதிகபட்சமாக ரோகித் சர்மா 19 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Aug 25, 2021, 7:06 pm IST

ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்து இந்திய அணி திணறல். க்ரைக் ஓவர்டன் வீசிய பந்தில் ரோகித் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

Aug 25, 2021, 6:29 pm IST

இந்திய அணியில் 5வது விக்கெட்டும் சரிந்தது. ஒல்லி ராபின்சன் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தை அடிக்க முயன்று ரிஷப் பண்ட் அவுட்.

Aug 25, 2021, 6:29 pm IST

9 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 2 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார்.

Aug 25, 2021, 6:27 pm IST

56 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது இந்திய அணி. ரோகித் சர்மா 15 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 2 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

Aug 25, 2021, 5:37 pm IST

8 ஓவர்கள் வீசியிருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

Aug 25, 2021, 5:36 pm IST

இதோ அடுத்த விக்கெட்டை இழந்தது இந்திய அணி ஓலே ராபின்சன் வீசிய லைன் அண்ட் லெந்த் பந்தில் ரஹானே கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். 54 பந்துகளை சந்தித்த ரஹானே 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்

Aug 25, 2021, 5:29 pm IST

50 ரன்களை கடந்த இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது.

Aug 25, 2021, 5:06 pm IST

சர்வதேச கிரிக்கெட்டில் 3 இலக்க ரன்களை எட்ட முடியாமல் விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50வது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக 18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை

Aug 25, 2021, 4:57 pm IST

இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது ரோஹித் ஷர்மா, அஜின்க்யா ரஹானே ஆகியோர் களத்தில் உள்ளனர் ரோஹித் ஷர்மா மட்டும் 50 பந்துகள் தாக்குப்பிடித்து நின்றுக் கொண்டிருக்க, மற்றவர்கள் வருவதும் போவதுமாக உள்ளனர்

Aug 25, 2021, 4:29 pm IST

கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார்.

Aug 25, 2021, 4:29 pm IST

இந்தியா தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. மூன்று விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் கைப்பற்றியுள்ளார்.

Aug 25, 2021, 4:27 pm IST

கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்தியா தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. மூன்று விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் கைப்பற்றியுள்ளார்.

Aug 25, 2021, 4:10 pm IST

இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துள்ளது ஜேம்ஸ் ஆண்டர்சன் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இந்திய பேட்ஸ்மேன்களை தாளித்து வருகிறார் லோகேஷ் ராகுல், புஜாரா ஆகிய இருவரும் அவுட்டாகியிருக்கும் நிலையில் ரோஹித், கோலி களத்தில் உள்ளனர். இந்த பார்ட்னர்ஷிப் மிக மிக முக்கியமானது. இதில், விரைவில் ஒருவர் ஆட்டமிழந்தால் கூட, இந்தியா 150 ரன்களை தாண்டுவது கடினமாகிவிடும்

Aug 25, 2021, 3:56 pm IST

ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

Aug 25, 2021, 3:38 pm IST

லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் விளாசிய லோகேஷ் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார்

Aug 25, 2021, 3:32 pm IST

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர்

Aug 25, 2021, 3:20 pm IST

இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன டாம் சிப்லே-வுக்கு பதில் டேவிட் மலன் சேர்க்கப்பட்டுள்ளார். அதுபோல், வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்-க்கு பதில் கிரெய்க் ஓவர்டன் அணியில் இணைந்துள்ளார் இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத், டேவிட் மலன், ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (w), மொயீன் அலி, சாம் கர்ரன், கிரெய்க் ஓவர்டன், ஓலே ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Aug 25, 2021, 3:17 pm IST

இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் அணியில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை

Aug 25, 2021, 3:09 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

Aug 25, 2021, 3:08 pm IST

டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை

Aug 25, 2021, 2:50 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான டாஸ் இன்னும் சற்று நேரத்தில் போடப்பட உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு டாஸ் போடப்படும்.

Aug 16, 2021, 11:23 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Aug 16, 2021, 11:22 pm IST

ஆட்டத்தில் கடைசியாக 8 ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில் 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

Aug 16, 2021, 11:22 pm IST

முகமது சிராஜ் 8 விக்கெட்களும், பும்ரா 3, இஷாந்த் சர்மா 5, ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Aug 16, 2021, 9:13 pm IST

30 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 197 ரன்கள் தேவை.

Aug 16, 2021, 8:47 pm IST

இங்கிலாந்து அணியின் 5வது விக்கெட்டை வீழ்த்தினார் ஜஸ்பிரித் பும்ரா. அச்சுறுத்தல் கொடுத்து வந்த ஜோ ரூட் 33 ரன்களுக்கு அவுட்.

Aug 16, 2021, 8:26 pm IST

இங்கிலாந்து அணியில் 4வது விக்கெட்டும் சரிந்தது. ஜானி பேர்ஸ்டோ 2 ரன்களுக்கு அவுட். 22 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 67 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 205 ரன்கள் தேவை.

Aug 16, 2021, 8:05 pm IST

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 31 ரன்களுடனும், பேர்ஸ்டோ 2 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

Aug 16, 2021, 7:49 pm IST

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 3வது விக்கெட்டையும் இழந்தது இங்கிலாந்து அணி. 16 ஓவர்கள் முடிவில் 48 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ரூட் - பேர்ஸ்டோ ஜோடி நிதான ஆட்டம்.

Aug 16, 2021, 6:59 pm IST

இங்கிலாந்தின் ஓப்பனிங் வீரர்கள் இருவருமே டக் அவுட்.. பவுலிங்கிலும் கெத்து காட்டும் பும்ரா - ஷமி!

Aug 16, 2021, 6:58 pm IST

2வது விக்கெட்டையும் இழந்தது இங்கிலாந்து. முகமது ஷமி வீசிய பந்தில் தொடக்க வீரர் சிப்லே டக் அவுட்

Aug 16, 2021, 6:45 pm IST

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தது இங்கிலாந்து. பும்ரா வீசிய பந்தின் வேகத்தில் சிக்கி தொடக்க வீரர் ரோரி பேர்ன்ஸ் வெளியேறினார்.

Aug 16, 2021, 6:28 pm IST

2வது இன்னிங்ஸில் 288 ரன்களுக்கு டிக்ளர் செய்தது இந்திய அணி. 2 விக்கெட்கள் கையில் மீதம் இருந்த நிலையில் டிக்ளர் செய்யப்பட்டது. இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்கு.

Aug 16, 2021, 6:03 pm IST

9வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் குவித்து ஷமி - பும்ரா பார்ட்னர்ஷிப் சாதனை ஷமி 67 பந்துகளில் 52 ரன்களும், பும்ரா 58 பந்துகளில் 30 ரன்களும் எடுத்துள்ளனர் டெஸ்ட் போட்டிகளில் பும்ரா மற்றும் ஷமியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும் 209 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்துக் கொண்டிருந்த போது களமிறங்கிய பும்ராவை வம்புக்கு இழுத்து ஆட்டத்தில் கவனம் செலுத்த தவறிவிட்டது இங்கிலாந்து.

Aug 16, 2021, 5:42 pm IST

எதிர்பார்த்ததைவிட அதிக முன்னிலை பெற்ற இந்திய அணி உணவு இடைவேளை வரை இந்திய அணி 259 ரன்கள் முன்னிலை 9வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் குவித்து ஷமி - பும்ரா இணை சாதனை ஷமி 67 பந்துகளில் 52 ரன்களும், பும்ரா 58 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து அதகளம்

Aug 16, 2021, 5:26 pm IST

முகமது ஷமி பிரம்மாண்ட சிக்ஸர் மூலம் அரைசதம் அடித்து அசத்தல் இந்திய அணி 8வது விக்கெட்டுக்கு இங்கிலாந்தை படாதபாடு படுத்தி வருகிறது

Aug 16, 2021, 5:22 pm IST

நெருப்பை போல் சீறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் 8வது விக்கெட் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முகமே வாடிப் போய்விட்டது பும்ராவை பவுன்ஸ் போட்டு பழி வாங்குவதாய் நினைத்து, தத்தளித்து நிற்கிறது இங்கிலாந்து

Aug 16, 2021, 5:09 pm IST

ஷமி - பும்ரா பார்ட்னர்ஷிப் 50 ரன்களை எட்டியது இந்தியா எட்டு விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது

Aug 16, 2021, 5:01 pm IST

250 ரன்களை எட்டிய இந்தியா இங்கிலாந்தை சோதிக்கும் ஷமி - பும்ரா கூட்டணி

Aug 16, 2021, 4:40 pm IST

இந்தியா 200 ரன்கள் முன்னிலை பெற்றது 95 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது

Aug 16, 2021, 4:33 pm IST

இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்திருக்கும் நிலையில் பும்ரா - பட்லர் இடையே வார்த்தை மோதல் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்கையில், ஆண்டர்சனுக்கு தொடர்ந்து பவுன்ஸ் பந்துகளை வீசினார் பும்ரா இதனால், ஆண்டர்சனை மீது பந்து அடிக்கடி தாக்கியது. இதனை மனதில் கொண்டிருக்கும் இங்கிலாந்து வீரர்கள், பும்ரா பேட்டிங் செய்ய வந்திருக்கும் போது அவரை கட்டம் கட்டி வருகின்றனர் பட்லர் உடனான வார்த்தை மோதலுக்கு பிறகு, மார்க் வுட் வீசிய பந்து, பும்ரா தலையை பலமாக தாக்கியது

Aug 16, 2021, 4:12 pm IST

ஓலே ராபின்சன் ஓவரில் இஷாந்த் ஷர்மா 16 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார் இந்தியா தனது 8வது விக்கெட்டை இழந்தது எட்டு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 209 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்தை விட 182 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

Aug 16, 2021, 4:11 pm IST

ஓலே ராபின்சன் ஓவரில் இஷாந்த் ஷர்மா 16 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்

Aug 16, 2021, 4:11 pm IST

இந்தியா தனது 8வது விக்கெட்டை இழந்தது

Aug 16, 2021, 4:11 pm IST

எட்டு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 209 ரன்கள் எடுத்துள்ளது

Aug 16, 2021, 4:10 pm IST

இங்கிலாந்தை விட 182 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது

Aug 16, 2021, 3:57 pm IST

இந்திய அணி வெற்றிப் பெற இனி வாய்ப்பிருக்கா? நிச்சயம் இருக்கு.. முகமது ஷமி 3 சிக்ஸர்களை பறக்கவிட வேண்டும் இஷாந்த் ஷர்மா மேலும் 3 பவுண்டரிகளை அடிக்க வேண்டும் 200 - 220 ரன்கள் டார்கெட் வைக்க வேண்டும் பும்ரா முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வீசியது போன்று பந்து வீச வேண்டும் ரிஷப் பண்ட் ரிவ்யூ எடுப்பதில், துல்லியமாக தனது முடிவை கேப்டன் விராட் கோலியிடம் தெரிவிக்க வேண்டும்

Aug 16, 2021, 3:51 pm IST

ஓலே ராபின்சன் ஓவரில் ரிஷப் பண்ட் 22 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறினார் இதனால் இந்தியா தனது 7வது விக்கெட்டை இழந்தது இந்தியா வசமிருந்த கடைசி பேட்ஸ்மேனும் அவுட் எனவே, இந்தியா இனி 200 ரன்கள் டார்கெட் என்ற மனநிலையில் விளையாடுவதைத் தவிர வேறு வழியில்லை

Aug 16, 2021, 3:47 pm IST

நான்காம் நாள் ஆட்டத்தின் போது, நிலவிய மிதமான வெயில் வானிலையே இன்றும் நிலவுகிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு உகந்த வானிலை என்று சொல்லலாம் இதனால், இன்று ஆட்டம் தொடங்கிய போதே, ஆண்டர்சன் ஓவரில் இறங்கி வந்து ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்ததை காண முடிந்தது.

Aug 16, 2021, 3:31 pm IST

இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது

Aug 16, 2021, 3:29 pm IST

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது

Aug 15, 2021, 10:43 pm IST

2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 181 ரன்களை எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Aug 15, 2021, 10:14 pm IST

அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்தது இந்திய அணி. நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த புஜாரா 45 ரன்களுக்கும், ரகானே 61 ரன்களுக்கும் அவுட்டாகினர்.

Aug 15, 2021, 9:47 pm IST

70 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்துள்ளது.

Aug 15, 2021, 9:47 pm IST

துணை கேப்டன் ரகானே அரைசதம் அடித்து அசத்தல். புஜாரா 39 ரன்களுடன் நிதான ஆட்டம்.

Aug 15, 2021, 9:02 pm IST

60 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 36 ரன்களுடனும், ரகானே 32 ரன்களுடனும் பார்ட்னர்ஷிப்

Aug 15, 2021, 8:02 pm IST

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 24 ரன்களுடனும், ரகானே 23 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

Aug 15, 2021, 7:12 pm IST

38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 11 ரன்களுடனும், ரகானே 12 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

Aug 15, 2021, 5:48 pm IST

தோல்வியை நோக்கி பயணிக்கிறதா இந்தியா?

Aug 15, 2021, 5:48 pm IST

நாளை ஒருநாள் ஆட்டம்.. அதாவது கடைசி நாள் ஆட்டம் மீதமிருக்கிறது

Aug 15, 2021, 5:48 pm IST

இப்போது இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இன்று இன்னும் ஐந்தரை மணி நேர ஆட்டம் மீதமிருக்கிறது.

Aug 15, 2021, 5:48 pm IST

அப்படியே தாக்குப்பிடித்து ஆடினாலும், இந்தியா இன்று மேலும் 5 விக்கெட்டுகளை இழப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.

Aug 15, 2021, 5:48 pm IST

அப்படி பார்த்தால், இங்கிலாந்துக்கு 150 - 180 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கலாம். இதனை நாளை கடைசி நாளில் இங்கிலாந்து நிச்சயம் அடித்து வென்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை

Aug 15, 2021, 5:31 pm IST

சாம் கர்ரனின் முந்தைய ஓவரில் விராட் கோலிக்கு ஒரு எல்பிடபிள்யூ ரிவ்யூ கேட்டு இழந்தது இங்கிலாந்து

Aug 15, 2021, 5:30 pm IST

ஆனால், தனது அடுத்த ஓவரிலேயே, விராட் கோலியை எட்ஜ் ஆக வைத்து வெளியேற்றி இருக்கிறார் சுட்டிப்பையன்

Aug 15, 2021, 5:28 pm IST

23.1வது ஓவரில், இந்திய அணி தனது 3வது விக்கெட்டை இழந்தது

Aug 15, 2021, 5:27 pm IST

உண்மையில், இந்தியா தற்போது பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. நாளை இன்னும் ஒரு நாள் முழுமையாக மீதமிருக்கும் நிலையில், இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Aug 15, 2021, 4:33 pm IST

146 கி.மீ வேகத்தை அப்படியே சிக்ஸருக்கு பறக்கவிட்ட ரோஹித் ஷர்மா

Aug 15, 2021, 4:33 pm IST

மார்க் வுட் வீசிய 146 கி.மீ வேக பந்தை, லெக் சைடில் 74 மீட்டரில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரோஹித்

Aug 15, 2021, 4:33 pm IST

அதே ஓவரில், மார்க் வுட் பந்தில் மீண்டும் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு ரோஹித் ஷர்மா 21 ரன்களில் அவுட்

Aug 15, 2021, 4:33 pm IST

இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது

Aug 15, 2021, 4:20 pm IST

லோகேஷ் ராகுல் அவுட்

Aug 15, 2021, 4:19 pm IST

மார்க் வுட் ஓவரில் லோகேஷ் ராகுல் எட்ஜ் ஆகி 5 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார்

Aug 15, 2021, 3:57 pm IST

இரண்டு ஓவர்கள் மட்டும் ராபின்சன் வீசிய நிலையில், மார்க் வுட் பந்து வீச அழைக்கப்பட்டுள்ளார்.

Aug 15, 2021, 3:56 pm IST

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது

Aug 15, 2021, 3:56 pm IST

வழக்கம் போல ராகுல், மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்

Aug 15, 2021, 3:25 pm IST

இந்தியா - இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், லேசான மழைச்சாரல் நீடிக்கிறது.

Aug 14, 2021, 11:18 pm IST

3ம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Aug 14, 2021, 11:18 pm IST

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Aug 14, 2021, 11:17 pm IST

கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 180 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

Aug 14, 2021, 10:41 pm IST

125 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 376 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியை விட 12 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Aug 14, 2021, 10:41 pm IST

கேப்டன் ரூ 170 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் களத்தில் உள்ளனர்.

Aug 14, 2021, 9:44 pm IST

அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட் எடுத்து இஷாந்த் சர்மா அபாரம். மொயின் அலி 27 ரன்களுக்கும் சாம் கரண் டக் அவுட்டும் ஆகினர்.

Aug 14, 2021, 9:44 pm IST

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 346 ரன்களை எடுத்துள்ளனர்.

Aug 14, 2021, 8:45 pm IST

100 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் 136 ரன்களுடனும், மொயின் அலி 20 ரன்களுடனும் சிறப்பான ஆட்டம்.

Aug 14, 2021, 7:44 pm IST

நீண்ட நேரத்திற்கு பிறகு இந்திய அணிக்கு விக்கெட் கிடைத்தது. பட்லரை 23 ரன்களுக்கு வீழ்த்தினார் இஷாந்த் சர்மா.

Aug 14, 2021, 6:55 pm IST

2வது டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட். இதில் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

Aug 14, 2021, 6:29 pm IST

77 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 226 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் 93 ரன்களுடனும், பேர்ஸ்டோ 57 ரன்களுடனும் சிறப்பான ஆட்டம்.

Aug 14, 2021, 5:44 pm IST

2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.

Aug 14, 2021, 5:44 pm IST

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 89 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 51 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்

Aug 14, 2021, 5:29 pm IST

அரைசதம் அடித்தார் ஜானி பேர்ஸ்டோ

Aug 14, 2021, 5:29 pm IST

90 பந்துகளில் அவர் அரைசதம் அடித்துள்ளார்.

Aug 14, 2021, 4:57 pm IST

மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதன் முறையாக பந்து வீச வந்திருக்கிறார் இஷாந்த் ஷர்மா. இவருக்காவது விக்கெட் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

Aug 14, 2021, 4:36 pm IST

உண்மையில், ரவீந்திர ஜடேஜா இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இம்பேக்ட் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். ஏனெனில், அவரது லைன், லெந்த் தெளிவாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து ஓவர்கள் கொடுக்கப்பட்டால், நிச்சயம் இங்கிலாந்து அணியை ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு கூட அவர் விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். விறுட்.. விறுட்டென சீறும் அவரது பந்துகள், நிச்சயம் பைல்ஸ்களை தட்டிவிடும் என்று ஒரு பார்வையாளனாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.. இன்று முதல் செஷனிலேயே ரவீந்திர ஜடேஜாவை வீச அழைத்திருக்கிறார் கேப்டன் கோலி.

Aug 14, 2021, 4:27 pm IST

இங்கிலாந்து அணி 58 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது

Aug 14, 2021, 4:27 pm IST

ஜோ ரூட் 65 ரன்களுடனும், பேர்ஸ்டோ 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Aug 14, 2021, 4:17 pm IST

முதல் செஷனிலேயே பந்து வீச ஸ்பின்னர் ஜடேஜா அழைப்பு

Aug 14, 2021, 4:15 pm IST

இன்றைய மூன்றாவது நாளின் முதல் செஷனில், முதல் ஓவரை வீச வந்திருக்கிறார் ஐஸ்பிரித் பும்ரா

Aug 14, 2021, 4:11 pm IST

உண்மையில், இன்று 3வது நாளின் முதல் செஷனில், ஷமி ஓவரை விட, சிராஜ் ஓவரில் தான் இங்கிலாந்து சற்று தடுமாறி வருகிறது. அவரது பந்துகள் தான் அடிக்கடி பேடை உரசிச் செல்கின்றன. இந்திய வீரர்களும் அவ்வப்போது அவுட் அப்பீல் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

Aug 14, 2021, 4:04 pm IST

லண்டனில் தற்போது.. அதாவது இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு, மிதமான வெயில் நிலவுகிறது. பந்தில் பெரிய அளவில் டர்ன் இல்லை. போட்டி தொடங்கி அரை மணி நேரத்திற்குள்ளேயே, 4 பவுண்டரிகள் வரை சென்றுவிட்டது. பந்து பேட்டிற்கு வாகாக வருகிறது.

Aug 14, 2021, 3:57 pm IST

மூன்றாவது நாளான இன்று முதல் செஷனில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் பவுலிங் செய்து வருகின்றனர்.

Aug 14, 2021, 3:50 pm IST

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 49 ரன்கள் எடுத்திருந்த போது, சிராஜ் ஓவரில் பந்து அவரது பேடில் பட்டது. சிராஜ் உட்பட அனைவரும் பலமாக அப்பீல் செய்தும், அம்பயர் சொன்னது 'நோ'. கையில் ஒரேயொரு ரிவ்யூ மட்டும் மீதமிருப்பதால், அதையும் வீணடிக்க கேப்டன் கோலி விரும்பவில்லை.

Aug 14, 2021, 3:45 pm IST

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்-ன் அட்டகாசமான ஃபார்ம் தொடர்கிறது 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் அரைசதம் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம், 2ம் இன்னிங்ஸில் சதம் அடித்ததைத் தொடர்ந்து இப்போது மீண்டும் அரைசதம் அடித்துள்ளார்.

Aug 14, 2021, 3:44 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி 3வது நாள் தொடங்கியது. இங்கிலாந்து நேற்று 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது

Aug 14, 2021, 3:44 pm IST

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கியது இங்கிலாந்து நேற்று 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது கேப்டன் ஜோ ரூட் 48 ரன்களுடனும், பேர்ஸ்டோ 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்

Aug 13, 2021, 11:11 pm IST

2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியின் ஸ்கோரை சமன் செய்ய இன்னும் 245 ரன்கள் தேவை.

Aug 13, 2021, 10:29 pm IST

2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை தொட்டது இங்கிலாந்து அணி. கேப்டன் ஜோ ரூட் 38 ரன்களுடனும், ரோரி பேர்ன்ஸ் 46 ரன்களுடனும் பார்ட்னர்ஷிப்

Aug 13, 2021, 9:49 pm IST

போட்டியில் கம்பேக் கொடுத்து வரும் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்களை எடுத்துள்ளது.

Aug 13, 2021, 8:52 pm IST

ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்து அசத்திய முகமது சிராஜ். இங்கிலாந்து அணி 23 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.

Aug 13, 2021, 7:08 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Aug 13, 2021, 5:45 pm IST

உணவு இடைவெளி வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன்களை எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 31 ரன்கள் எடுத்து ஒற்றை ஆளாக போராட்டம்

Aug 13, 2021, 5:13 pm IST

அடுத்தடுத்த ஓவர்களில் மீண்டும் விக்கெட்கள். ரிஷப் பண்ட் 37 ரன்களுக்கும், முகமது ஷமி டக் அவுட்டும் ஆகி வெளியேறினர். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை எடுத்துள்ளது.

Aug 13, 2021, 4:23 pm IST

முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்தது இந்திய அணி. ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 1 ரன்னுடம் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சி!

Aug 13, 2021, 4:01 pm IST

2வது நாளில் இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி. கே.எல்.ராகுல் மற்றும் அஜிங்கியா ரகானே அடுத்தடுத்து வெளியேறினர். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கலை எடுத்துள்ளது.

Aug 12, 2021, 11:56 pm IST

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை சேர்த்து வலுவான நிலையில் உள்ளது. கே.எல்.ராகுல் 127 ரன்களுடனும், அஜிங்கியா ரகானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Aug 12, 2021, 11:33 pm IST

இந்திய அணில் 3வது விக்கெட் சரிந்தது. சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் கோலி 42 ரன்களுக்கு அவுட்

Aug 12, 2021, 11:01 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார் கே.எல்.ராகுல். ஒரு சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசல்.

Aug 12, 2021, 10:21 pm IST

இந்திய அணி 200 ரன்களை கடந்தது. 68 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கோலி 19 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 86 ரன்களுடனும் நிதான ஆட்டம்.

Aug 12, 2021, 9:22 pm IST

53 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 55 ரன்களுடனும், விராட் கோலி 0* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Aug 12, 2021, 8:41 pm IST

இந்திய அணியில் 2வது விக்கெட் சரிந்தது. சட்டீஸ்வர் புஜாரா 9 ரன்களுக்கு அவுட்டாகி மீண்டும் ஒருமுறை ஏமாற்றமளித்தார்.

Aug 12, 2021, 8:16 pm IST

இந்திய அணியில் முதல் விக்கெட் சரிந்தது. சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 83 ரன்களுக்கு அவுட். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம்.

Aug 12, 2021, 7:38 pm IST

33 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது இந்திய அணி. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 75* மற்றும் கே.எல்.ராகுல் 16 ரன்களுடனும் சிறப்பான அடித்தளம்.

Aug 12, 2021, 6:58 pm IST

தொடக்க வீரர் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தல். 8 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார். தற்போது வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்துள்ளது.

Aug 12, 2021, 6:34 pm IST
Mykhel

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 10 ரன்களுடனும், ரோகித் சர்மா 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Aug 12, 2021, 5:36 pm IST

2வது டெஸ்ட் போட்டியின் முதல் செஷனில் மீண்டும் மழை பெய்வதால் ஆட்டம் நிறுத்தம்

Aug 12, 2021, 5:36 pm IST

இந்திய அணி 18.4வது ஓவரில், விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ளது

Aug 12, 2021, 5:36 pm IST

ரோஹித் ஷர்மா 66 பந்துகளில் 35 ரன்களுடன் களத்தில் உள்ளார்

Aug 12, 2021, 5:36 pm IST

லோகேஷ் ராகுல் 46 பந்துகளில் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்

Aug 12, 2021, 5:09 pm IST

சாம் கர்ரன் வீசிய 15வது ஓவரில், ரோஹித் 4 பவுண்டரிகளை விளாசினார்

Aug 12, 2021, 5:09 pm IST

இதனால் அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் குவிக்கப்பட்டது.

Aug 12, 2021, 5:09 pm IST

2வது டெஸ்ட் போட்டி மழையால் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டதால், செஷன்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Aug 12, 2021, 5:09 pm IST

முதல் செஷன் - 4 pm to 6pm

Aug 12, 2021, 5:09 pm IST

இரண்டாவது செஷன் - 6:40pm to 8:40pm

Aug 12, 2021, 5:09 pm IST

மூன்றாவது செஷன் - 9pm to 11pm

Aug 12, 2021, 4:47 pm IST

இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது

Aug 12, 2021, 4:46 pm IST

இங்கிலாந்து அணி பவுலிங்கில் நெருக்கடி கொடுத்து வருகிறது

Aug 12, 2021, 4:46 pm IST

இந்திய ஓப்பனர்கள் ரோஹித், ராகுல் மிக கவனமாக பந்துகளை தேர்வு செய்து ஆடி வருகின்றனர்.

Aug 12, 2021, 4:23 pm IST

இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது

Aug 12, 2021, 4:03 pm IST

முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பு மழை பெய்ததால் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டம் தொடங்கியது

Aug 12, 2021, 4:03 pm IST

இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களத்தில் உள்ளனர்

Aug 12, 2021, 4:02 pm IST

முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பு மழை பெய்ததால் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டம் தொடங்கியது

Aug 12, 2021, 4:02 pm IST

இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களத்தில் உள்ளனர்

Aug 12, 2021, 4:02 pm IST

மழை நின்றது.. மீண்டும் ஆட்டம் துவக்கம் - ரோஹித், ராகுல் களத்தில்

Aug 12, 2021, 3:51 pm IST

இரு அணி வீரர்களும் விளையாட களமிறங்கிய போது மீண்டும் மழை

Aug 12, 2021, 3:51 pm IST

இதனால் போட்டி மீண்டும் நிறுத்தம்

Aug 12, 2021, 3:41 pm IST

இங்கிலாந்து பிளேயிங் லெவன்

Story first published: Monday, September 6, 2021, 21:22 [IST]
Other articles published on Sep 6, 2021
English summary
india vs england 4th test live - இந்தியா vs இங்கிலாந்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X