For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நோட் பண்ணுங்க.. அந்த அணி 500 ரன்களுக்கு மேல அடிக்கும்.. சொல்ற இவர தான் ஜீரணிச்சுக்க முடியல ..!!

லண்டன்:ஒரு நாள் தொடரில் 500 ரன்களை அடிக்கப்போகும் முதல் அணி இங்கிலாந்து தான் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி ஏக எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. ஜூன் 6ம் தேதி இந்திய அணி, முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.

உலக கோப்பை தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர' பயிற்சியில் களம் இறங்கி இருக்கின்றனர். இந்திய அணி வீரர்கள் உலக கோப்பையில் பங்கேற்க இங்கிலாந்து வந்து விட்டனர். இது குறித்து இங்கிலாந்தில் கோலி கூறியதாவது:

கொலை வெறியுடன் இருக்கேன்..! உலக கோப்பை இந்த முறை எங்களுக்கு தான்...! யாருப்பா...? அது கொலை வெறியுடன் இருக்கேன்..! உலக கோப்பை இந்த முறை எங்களுக்கு தான்...! யாருப்பா...? அது

500 ரன்கள் அடிக்கும் அணி

500 ரன்கள் அடிக்கும் அணி

ஒரு நாள் தொடரில் 500 ரன்களை அடிக்கப்போகும் முதல் அணி இங்கிலாந்து தான். அவர்களால் தான் இந்த சாதனையை நிகழ்த்த முடியும். உலக கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் பேட்டிங்கில் சாதிக்கும் என்று நினைக்கிறேன். அதிக ரன்களை எடுக்கும் என்று தோன்றுகிறது என்று விராட் கோலி கூறி உள்ளார்.

சாதனை முறியடிப்பு

சாதனை முறியடிப்பு

விராட் கோலி கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு ரன்களை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக 444 ரன்கள் அடித்து, இலங்கையின் முந்தைய சாதனையை முறியடித்து, சபாஷ் பெற்றது.

நாட்டிங்காமில் 481 ரன்கள்

நாட்டிங்காமில் 481 ரன்கள்

அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாட்டிங்காம் போட்டியில் இங்கிலாந்து 481 ரன்களை குவித்தது. அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் அந்த அணி குவித்தது 340 மற்றும் அதற்கு கூடுதலான ரன்கள்.

ஒரே போட்டியில் சாதனை

ஒரே போட்டியில் சாதனை

முன்னதாக 1996ம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 398 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர். அந்த சாதனையை 2005ம் ஆண்டு ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் ஒரே போட்டியில் முறியடித்தன.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

இப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா, 434 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்ரிக்கா, 438 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலிய சாதனையை அதே போட்டியில் முறியடித்தது. உலக கோப்பைக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் அனைத்து அணி கேப்டன்களும் இந்த தொடரில் 500 ரன்களை அணிகளை எளிதாக குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறது.

Story first published: Friday, May 24, 2019, 14:51 [IST]
Other articles published on May 24, 2019
English summary
England may hit 500 runs at most of the matches says Virat Kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X